சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் சீசன்-4 ஆரம்பிக்கப்போகிறது. சரி, கடந்த மூன்று சீசன்களில் அதகளம் செய்துகொண்டிருந்தவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

ரைசா

யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த ‘பியார் பிரேமா காதல்’ பட வாய்ப்பு ‘பிக் பாஸ்’ ஷோவுக்குப் பிறகு கிடைத்ததுதான். வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். தற்போது ‘திருடன் போலீஸ்’ இயக்குநர் கார்த்திக் ராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

ஹரிஷ் கல்யாண்

பிக் பாஸ் நிகழ்ச்சியால் அதிக மைலேஜ் கிடைத்தவர்களுள் முதலிடம் சந்தேகமே இல்லாமல் ஹரிஷ் கல்யாணுக்குத்தான். முதல் சீசன் முடிந்து வெளியே வந்தவருக்கு அடுத்தடுத்து வந்து குவிந்தன பட வாய்ப்புகள். மூன்று ஆண்டுகளில் ஹீரோவாக நான்கு படங்கள். இன்னும் இரண்டு படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங் என க்ராஃப் மேலே மேலே செல்கிறது.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

ஓவியா

வியா ஆர்மியை மறக்க முடியுமா? அன்புமணியே பொறாமைப்பட்ட ஆர்மி அல்லவா? படங்களில் நடித்துக் கிடைக்காத கவனம், ஓவியாவுக்கு பிக்பாஸ் மூலம் கிடைத்தது. ‘ஆரவ்வுடன் காதல்’ என்றார்கள். ‘மருத்துவ முத்தம்’ என்றார்கள். எது எப்படியோ ஷோவை விட்டு நல்ல பெயருடன் வெளியில் வந்தார். ஆனால் அந்தப் புகழ் சினிமா வாய்ப்பாக மாறவில்லை. அதேநேரம் வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பிஸியாகிவிட்டார். பி.பா.வுக்குப் பிறகு கடை ரிப்பன் வெட்ட வேண்டுமென்றோ, அல்லது, நிகழ்ச்சிக்கு வந்து செல்லக் கேட்டோ இவரிடம் சென்ற சிலர், இவர் கேட்ட பேமென்டில் விக்கித்துப்போய்த் திரும்பியதெல்லாம் நடந்தது.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

ஆரவ்

‘சைத்தான்’ , ‘ஓ காதல் கண்மணி’ எனச் சில படங்களில் தலைகாட்டி யிருக்கும் ஆரவ் முதல் சீசனில் டைட்டில் வென்றதும், சினிமா வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதுதான் நிஜம். ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் ஹீரோவாக நடித்தார். எதிர்பார்த்த பெயரை வாங்கித் தரவில்லை. இந்நிலையில் திடீரென நடிகை ராஹேவுடன் தற்போது திருமணம் நடந்துள்ளது.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

ஆர்த்தி கணேஷ்கர்

‘`குழந்தைப் பருவத்துல இருந்தே சினிமாவுல இருந்தேன்னாலும், இன்னைக்கு எங்காச்சும் வெளிநாடு போனா, அங்க ‘பிக் பாஸ்’ஆர்த்தின்னுதான் கூப்பிடுறாங்க. அந்த வகையில பாரின் ஆடியன்ஸ்கிட்ட என்னைக் கொண்டு போய்ச் சேர்ந்தி ருக்கு. அது ஒண்ணுதான் அந்த ஷோவுக்குப் பிறகு தெரிகிற மாற்றம்’’ என்கிறார்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

ஜூலி

‘நீட்’ அனிதாவின் வாழ்க்கையைச் சொல்லும் படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் படம் இன்னும் வெளிவரவில்லை. சட்டச்சிக்கல் என்கிறார்கள். ‘அம்மன் தாயி’ படமும் கைவிடப்பட்டதாகவே தெரிகிறது. ஆனால், அலட்டிக்கொள்ளாமல் ‘வேற ரெண்டு படம் கைவசம் இருக்கு’ என்கிறார்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

வையாபுரி

சினிமா இத்தனை வருடங்களாகத் தராத புகழை இந்த ஒற்றை நிகழ்ச்சி தந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

பரணி

‘பிக் பாஸ்’க்குப் பிறகு கதாநாயகனாக வந்த வாய்ப்பைப் பெரிதும் நம்பியிருந்தார். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த வி.ஜெயப்பிரகாஷ் இயக்கி வந்த ‘குச்சி ஐஸ்’ என்ற படத்தின் ஷூட்டிங் 90 சதவிகிதம் முடிந்த நிலையில்தான் கொரோனா வந்துவிட்டது. இப்போதும் அந்தப் படம் தனக்குப் பெரிய இடத்தைத் தருமென்கிற நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

நமீதா

ஷோ முடிந்த சில மாதங்களிலேயே தன்னுடைய காதலரைக் கரம் பிடித்து இல்லற வாழ்வில் நுழைந்தார். பிறகு பா.ஜ.கவில் சேர்ந்தார். சமீபத்தில் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், மேடம் பிரசாரத்தில் பிஸியாகிவிடுவாராம்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

காயத்ரி ரகுராம்

‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தை மூலம் ஷோவில் பரபரப்பைக் கிளப்பிய காயத்ரி ரகுராம் தற்போது பா.ஜ.கவின் தமிழக கலை கலாசாரப் பிரிவுத் தலைவர். நடன இயக்குநராக ஆட்டு வித்துக் கொண்டிருந்தவர் அரசியலுக்குள் வர, பிக் பாஸும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

சக்தி வாசு

றிமுக இயக்குநர் ரூபனின் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ படத்தில் யோகிபாபு மற்றும் மொட்டை ராஜேந்திரனுடன் சேர்ந்து நடிக்கிறார். இன்னொரு படம் பேச்சுவார்த்தையில் உள்ளதாம்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

சிநேகன்

நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்ததும் கமலின் மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட்டார். இன்னொரு புறம் சினிமாவையும் விடவில்லை. ‘சூரரைப் போற்று’ படத்தில் ‘காட்டுப் பயலே’ பாடலை எழுதியிருக் கிறார். படம் வெளியாகும் முன்னரே பாடல் பலரது ‘ரிங் டோன்’ ஆகியிருப்பதில் உற்சாகத்தில் இருக்கிறார்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

பொன்னம்பலம்

நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்து சில நாள்கள் ஆகியும் இவருக்கான சம்பளம் தரப்படாமலேயே இருந்து வந்தது. திடீரென ஒரு நாள் காலை 9 மணிக்கெல்லாம் சேனல் அலுவலகத்துக்குப் போனவர் ‘பேமென்ட் தந்தால் ஒழிய இங்கிருந்து கிளம்பறதா இல்லை’ என உட்கார்ந்து வாங்கி வந்து விட்டார். எக்கச்சக்கப் படங்களில் நடித்திருந்தும் கையிருப்பு பெரிதாக இல்லை. சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனபோது, சரத்குமார் உள்ளிட்ட சிலரே மருத்துவச் செலவை ஏற்றது நினைவிருக்கலாம்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

தாடி பாலாஜி

விஜய் டிவியின் சாய்ஸாக ஷோவில் நுழைந்தவர். கலந்துகொண்டதற்கான சம்பளம் தவிர்த்து ஷோ மூலம் பெரிய பலன் எதுவும் கிடைத்ததுபோல் தெரிய வில்லை. மனைவி நித்யாவுடனான பஞ்சாயத்தும் தீர்ந்த பாடில்லை.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

நித்யா

ணவர் பாலாஜியுடன் பிரச்னை சுமுகமாக முடிந்ததாக கமல் முன்னிலையில் அறிவித்து விட்டு வெளியில் வந்தார். ஆனால் இன்றுவரை மகளுடன் தனியாகத்தான் வசித்துவருகிறார். ‘பிக் பாஸ்’ பெரிதாக எந்தவொரு மாற்றத்தையும் நிகழ்த்த வில்லை இவரது வாழ்வில். வருமானத்திற்காக மறுபடியும் வேலைக்குச் செல்லலாம் என முடிவெடுத்தவர், திடீரென அந்த யோசனையைக் கைவிட்டுவிட்டு குழந்தை களுக்கான ப்ளே ஸ்கூல் தொடங்கியிருக்கிறார்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

ரித்விகா

ரண்டாவது சீசனின் வெற்றியாளர். தற்போது ஜிம் வொர்க் அவுட்டில் அதிகமாகக் க‌வனம் செலுத்திவருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வால்டர்.’ தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

டேனி

ஷோவிலிருந்து வெளியில் வந்ததும் வராததுமாக, காதலியைக் கைப்பிடித்தார். சில பட வாய்ப்புகள் வந்தன. வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால், கயல் ஆனந்தி நடித்திருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்தார். அது இன்னும் ரிலீசாகவில்லை. லாக் டௌன் நாள்களில் அப்பா புரமோஷன் கிடைத்ததில் உற்சாகமாக இருக்கிறார்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

யாஷிகா ஆனந்த்

முதல் சீசனுக்கே கூப்பிட்டார்கள். அப்போது மறுத்துவிட்டார். இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு வெளியில் வரும்போது ஐந்து லட்சம் பரிசுத் தொகையுடன் வந்தார். குடும்பம் வளமான பொருளாதாரப் பின்னணி கொண்டது என்பதால் பணத்துக்குப் பிரச்னை இல்லை. பிக் பாஸுக்குப் பிறகு ‘கழுகு 2’, ‘ஜாம்பி’ ஆகிய படங்களில் நடித்தார். திடீரென தற்போது சீரியல் பக்கம் வந்திருக்கிறார். சீரியலில் இவரது சம்பளம் எபிசோடுக்கு ஒன்றரை லட்சமாம்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

முகின்

மூன்றாவது சீசனில் டைட்டில் வென்ற முகினுக்கு உடனடியாக சில விளம்பரப் பட வாய்ப்புகள் வந்தன. தொடர்ந்து ‘வெப்பம்’ படத்தை இயக்கிய பெண் இயக்குநர் அஞ்சனா அலிகானின் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்றார்கள். ஆனால், அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

ரேஷ்மா

‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கிவரும் ‘சத்திய சோதனை’ படத்தில் பிரேம்ஜியுடன் இணைந்து முக்கிய ரோல் ஒன்றில் நடித்துவருகிறார்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

ஐஸ்வர்யா தத்தா

ரண்டாவது சீசனில் ‘டைட்டில் வென்றுவிடுவோம்’ எனக் கடைசி நிமிடம் வரை நம்பியவர். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. ஷோவுக்குள் செல்வதற்கு முன்பு வரை எல்லாச் செலவுகளையும் பாய் பிரெண்ட் பார்த்துக் கொண்டார். (கையில் பெயரைப் பச்சை குத்தி, அதை ஷோவிலும் காட்டினாரே, அந்த பாய் பிரெண்ட்) ஷோ முடிந்த சில மாதங்களில் அந்த நண்பர் பண மோசடி வழக்கில் கைதானதும், ‘அவருக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்றார். இவர் நடித்திருக்கும் ‘பப்ஜி’ (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படம் விரைவில் வெளியாக உள்ளது.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

லாஸ்லியா

ர்ஜுன், ஹர்பஜன் சிங் நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹீரோயினாக நடித்துவருகிறார். இதுபோக இன்னும் இரண்டு படங் களிலும் கமிட் ஆகியுள்ளார்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

கவின்

‘நட்புனா என்னான்னு தெரியுமா’ மூலம் சின்னத்திரை டு பெரிய திரைக்கு வந்தவர். படம் ஓகே என்றபோதும், அது ரிலீஸாவதற்குள் படாத பாடுபட்டு விட்டார். எனவே அடுத்த படத்தில் ஆர்வம் காட்டாமல் ஷோவுக்குள் வந்தார். அங்கு லாஸ்லியாவுடன் லவ் என்றார்கள். அந்தக் காதல் தொடர்கிறதா என்பதை அவர்கள் இருவரும்தான் சொல்ல வேண்டும். பெரிய சினிமா வாய்ப்புகளைத் தராவிட்டாலும் நிறைய ரசிகர்களைத் தந்துள்ளது நிகழ்ச்சி. அடுத்த சில மாதங்களில் இவர் நடித்திருக்கும் ‘லிப்ட்’ படம் வெளியாக உள்ளது.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

சரவணன்

ன் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தைச் சொன்ன தற்காக அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப் பட்டவருக்கு அடுத்தடுத்து இரு படங்கள் கமிட் ஆகின. ‘மருத’, ‘ஆயிரம் பொற்காசுகள்’ இரண்டும் கொரோனாச் சூழல் சரியானதும் வெளியாகலாமெனத் தெரிகிறது. சேலத்தில் சினிமா ஸ்டூடியோ ஒன்றை அமைக்கும் வேலையையும் தொடங்கியுள்ளார்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

சாக்‌ஷி

வெங்கட்பிரபு இயக்கிக் கொண்டிருக்கும் குறும்படம் ஒன்றில் நடித்துவருகிறார். மிச்ச நேரத்தில் போட்டோஷூட்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

தர்ஷன்

‘ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் இருப்பார்’ என ஷோ நிறைவு விழா மேடையில் வைத்தே வாய்ப்பு வாங்கியவர். ஆனால் அந்த வாய்ப்பு இன்னும் நிஜமானது போல் தெரியவில்லை. அதேநேரம் ‘ஐங்கரன் இண்டர்நேஷனல்’ தயாரிப்பில் விரைவில் ஹீரோவாக அறிமுகமாவார் என்கிறார்கள். இடையில் சனம் ஷெட்டியுடன் காதல், பிரிவு என கொஞ்ச நாள் செய்திகளில் அடிபட்டது இவரது பெயர்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

வனிதா

‘நான் வர்றேன்னா அங்க நிச்சயம் டி.ஆர்.பி எகிறும்’ என்ற இவரது கூற்றை (அந்த நூறு நாள் மட்டுமல்ல, இப்போது வரை சொல்லிவருகிறார்) சேனலும் நம்பியதாலோ என்னவோ, எவிக்‌ஷனில் வெளியேறியவரை மறுபடியும் அழைத்து வந்தது. பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த வரைக்கும் விஜய் டிவி ரேட்டிங் மட்டும் உயரக் காரணமாக இருந்தவர், பீட்டர் பாலைக் கைப்பிடித்ததும் ஆல் மீடியாவுக்கும் அட்சய பாத்திரமானார். கொரோனாவால் சீரியஸாக இருந்தவர்கள்கூட ‘வனிதா அப்டேட் தெரிஞ்சுட்டுப் போகலாம்’னு சொல்லாத குறைதான்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

மதுமிதா

கையை அறுத்துக்கொண்டு பாதியில் வெளியேறிய மதுமிதாவுக்கு, சேனலுடன் மல்லுக்கட்டி சம்பளத்தை வாங்குவதற்கே சில நாள்கள் ஆகின. கடுப்பான சேனல், ‘அவங்களை இனி எந்த ஷோவுக்கும் கூப்பிட வேண்டாம்’ என முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ‘பரவால்ல, நான் விஜய் சேதுபதி படத்துல கமிட் ஆகியிருக்கேன்’ என்கிற மது, தற்போது ராஜஸ்தானில் நடக்கும் அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

ஷெரின்

டிக் டாக், போட்டோஷூட் இரண்டிலும் பிஸியாக இருந்தார். ‘டிக்டாக்’ தடை செய்யப்பட்டு விட்டதால், இப்போது ஒன்லி போட்டோ ஷூட். லாக் டௌனில் கோயம்புத்தூரில் உறவினர் வீட்டில் மாட்டிக் கொண்டவர், அப்போதும் போட் டோஷூட்டை நிறுத்த வில்லை.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

சாண்டி

விஜய் டிவியின் செல்லப் பிள்ளைகளில் ஒருவர். எனவே, சேனல் கூப்பிட்டதும், சினிமா கரியரில் கையிலிருந்த பெரிய வாய்ப்புகளைக்கூட விட்டுவிட்டு நிகழ்ச்சிக்குச் சென்றார். சேனலும் உரிய கைம்மாறு செய்தது என்றே சொல்லலாம். கடந்த சீசனில் இரண்டாமிடம் பிடித்தார். மற்றபடி, இவரது கோரியோகிராபைப் பொறுத்தவரை ‘பி.பா’க்கு முன் பின் எனப் பெரிய வித்தியாசங்கள் இல்லை. தற்போது நான்காவது சீசன் புரோமோவிலும் சாண்டியின் பங்கு இருக்கிறது.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

சேரன்

பி.பா வீட்டுக்குள் இருந்தபோதே, விஜய் சேதுபதிக்குக் கதை சொல்லியிருப்பதாகச் சொல்லியிருந்தார். அந்தக் கதை படமாகும் முயற்சி எந்த அளவில் உள்ளது என்பது தெரியவில்லை. தற்போது சோசியல் மீடியாவில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

மீரா மிதுன்

‘பிக் பாஸ்’ முடிஞ்சாலும் தமிழ்நாடு மட்டுமல்ல மொத்த நாடும் நம்மைப் பத்தித்தான் பேசணும்’னு நினைத்தாரோ என்னவோ, உச்ச நட்சத்திரங்களை யெல்லாம் சந்திக்கு இழுக்கிறார். விஜய், சூர்யா இருவரையும் சகட்டுமேனிக்குத் திட்ட, கொதித்து ப்போய்க் கிடக்கிறார்கள், அவர்களின் ரசிகர்கள். மூத்த இயக்குநர் பாரதிராஜாவையே கொந்தளிக்க வைத்துவிட்டார் என்றால், இவரது ‘கவன ஈர்ப்பு’த் திறனைப் பார்த்துக் கொள்ளுங்கள். ‘பிக்பாஸ் ஷோவுக்குப் பிறகு இவருக்கு வந்த வாய்ப்புகள்’ என விசாரிக்கப் போனால், ‘இன்னுமா யாரும் கூப்பிடுவாங்கன்னு நம்புறீங்க’ என நம்மிடம் எதிர்க் கேள்வி கேட்கிறார்கள்.

என்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்?

அபிராமி

எஸ்.பி.பி சரண் இயக்கும் வெப்சீரிஸ் ஒன்றில் கமிட் ஆகியிருப்பதுடன், கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் நடித்துவருகிறார். தவிர, ஓடிடிக்காக பரத் நீலகண்டன் இயக்கத்தில் பிரசன்னாவுடன் சேர்ந்தும் ஒரு வெப்சீரிஸில் நடித்துவருகிறார்.

குடும்பத்தலைவிகளான பிரபலங்களின் பேத்திகள்

பிக் பாஸ் வீட்டில் லீடர்களாக இருந்து வழிநடத்தினார்களோ இல்லையோ, தங்களின் காதலர்களைக் கரம்பிடித்து இல்லற வாழ்வில் நுழைந்ததன் மூலம் குடும்பத் தலைவிகளாகிவிட்டனர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இரண்டு பிரபலங்களின் பேத்திகள். ஒருவர் எழுத்தாளர் சாவியின் பேத்தி வைஷ்ணவி. அடுத்தவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தி ரம்யா. இருவருமே இரண்டாவது சீசனின் போட்டியாளர்கள்.

பிக் பாஸ்... பிக்னிக் பாஸ்!

னுயா, ஜனனி ஐயர், மும்தாஜ், மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், மோகன் வைத்யா, கஞ்சா கருப்பு, சென்றாயன், மகத், ஷாரிக், கணேஷ் வெங்கட்ராம், பாத்திமா பாபு ஆகியோருக்கு ஷோவில் கலந்துகொண்ட‌த‌ன் மூலம் பொருளாதார ரீதியில் பலன் கிடைத்ததுபோல் தெரியவில்லை. ‘ஷோவுல நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டோம்’ என்கிறார்கள் இவர்களில் சிலர். சிலரோ, ‘பிக் பாஸ் இல்ல, அது பிக்னிக் பாஸ். ஜாலியா சில நாள்கள் டூர் போயிட்டு வந்தோம்’ என்கிறார்கள்.