Published:Updated:

விஜய் ஸ்டார் நைட்: 80ஸ் தமிழ் சினிமாவை நினைவுகூரும் ஸ்பெஷல் ஷோ - எங்கே, எப்போது?

விஜய் டிவி ஸ்டார்ஸ்

விஜய் டிவி சீரியல் நடிகர் நடிகைகள், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பாடகர்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் என விஜய் டிவி பட்டாளமே மொத்தமாக இந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர்.

விஜய் டிவி நட்சத்திரங்கள் திரளாகக் கலந்து கொள்ளும் 'விஜய் ஸ்டார் நைட்' நிகழ்ச்சி இன்று மாலை சென்னை தீவுத்திடலில் நடக்கிறது.

விஜய் டிவி, 'நட்சத்திரக் கொண்டாட்டம்' என்கிற பெயரில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருவது தெரிந்ததே. விஜய் டிவி சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்கள், ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்கிற ஆர்ட்டிஸ்டுகள் திரளாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விப்பார்கள்.

அந்த வரிசையில் தற்போது சென்னையில் தீவுத்திடலில் 'விஜய் ஸ்டார் நைட்' என்கிற பெயரில் இன்று (20/8/2022) மாலை நடக்கிறது இந்த நிகழ்ச்சி.

மா.கா.பா.ஆனந்த்
மா.கா.பா.ஆனந்த்

விஜய் டிவி சீரியல் நடிகர் நடிகைகள், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பாடகர்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் என விஜய் டிவி பட்டாளமே மொத்தமாக இந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர்.

இன்றைய கூட்டத்தின் ஹைலைட் என்னவெனில், எண்பதுகளின் தமிழ் சினிமாவை ஒரு ரீவைன்ட் செய்வதுதான். அதாவது 80களின் ஹிட் தமிழ்ப் படங்களின் பாடல்களைப் பாடுவது, பாடல்களுக்கு நடனமாடுவது என்பதுதானாம்.

நிகழ்ச்சியை மா.கா.பா ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.