சினிமா
Published:Updated:

விகடன் TV: பாலா கொடுத்த பாராட்டுப் பணம்!

கோமதி பிரியா
பிரீமியம் ஸ்டோரி
News
கோமதி பிரியா

அந்த சீரியலில் நடிச்சிட்டிருக்கும்போதே நிறைய தெலுங்கு வாய்ப்புகள் வந்துச்சு. தெரியாத மொழியில் நடிச்சு என்ன பண்றதுன்னு அப்போ நான் அதைப் பெருசா எடுத்துக்கலை.

``சாப்பாட்டுக்குக்கூட காசில்லாம கஷ்டப்பட்டிருக்கேன். கஷ்டத்துக்கான பலன் இப்போ கிடைச்சிருக்கு” - தன்னம்பிக்கை ததும்பப் பேசுகிறார் கோமதி பிரியா. விஜய் டி.வி `வேலைக்காரன்' தொடரின் நாயகி.

“சொந்த ஊர் மதுரை. விஜய் டி.வி-யில் ‘மிஸ்டர்&மிஸஸ் சின்னத்திரை’ ரியாலிட்டி ஷோவில் ஒரு சின்ன ரோல் கிடைச்சது. அதுக்கப்புறம் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் தங்கச்சி ரோல் கிடைச்சது. சின்னச்சின்ன வாய்ப்புகளுக்குப் பிறகு கலர்ஸ் தமிழில் ‘ஓவியா’ சீரியலில் லீடு கேரக்டருக்கு செலக்ட் ஆனேன்.

விகடன் TV: பாலா கொடுத்த பாராட்டுப் பணம்!
விகடன் TV: பாலா கொடுத்த பாராட்டுப் பணம்!
விகடன் TV: பாலா கொடுத்த பாராட்டுப் பணம்!

அந்த சீரியலில் நடிச்சிட்டிருக்கும்போதே நிறைய தெலுங்கு வாய்ப்புகள் வந்துச்சு. தெரியாத மொழியில் நடிச்சு என்ன பண்றதுன்னு அப்போ நான் அதைப் பெருசா எடுத்துக்கலை. ஆனாலும், தொடர்ந்து கேட்டாங்க. நம்மைத் தேடி வர்ற வாய்ப்பைத் தவற விட வேண்டாம்னு ஓகே சொன்னேன். ‘திருமதி ஹிட்லர்’ சீரியலோட தெலுங்கு ரீமேக்கில் நான்தான் நடிக்கிறேன். ஒரே ஒரு புராஜெக்ட்டிலேயே இந்த அளவுக்கு என்னைத் தெலுங்கு ஆடியன்ஸ் கொண்டாடுவாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. அந்த சீரியல் பார்த்துதான் ‘வேலைக்காரன்’ சீரியல் வாய்ப்பு கிடைச்சது. எனக்கு இப்பவும் தெலுங்கில் ரீச் ஆன அளவுக்கு நம்ம தாய்மொழித் தமிழில் ரீச் ஆக முடியலைங்கிறது வருத்தமா இருக்கு. அதுக்கான உழைப்பைத் தொடர்ந்து கொடுத்துட்டிருக்கேன். நிச்சயம் தமிழ் ஆடியன்ஸும் என்னை அங்கீகரிப்பாங்கன்னு நம்புறேன்” என்றவரிடம் வெள்ளித்திரை வாய்ப்புகள் குறித்துக் கேட்டேன்.

விகடன் TV: பாலா கொடுத்த பாராட்டுப் பணம்!
விகடன் TV: பாலா கொடுத்த பாராட்டுப் பணம்!

“பாலா சாருடைய ‘வர்மா’ படத்தில் நடிச்சேன். அவர் திட்டுவாரு, அடிப்பாருன்னெல்லாம் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, செட்ல அவர் ரொம்ப ஸ்வீட். நல்லா பேசுவாரு. நல்லா நடிச்ச எல்லாருக்கும் ஷூட்டிங் முடிஞ்சதும் சார் ஸ்பெஷலா பணம் கொடுப்பார். எனக்கும் பணம் கொடுத்தார். அவர்கிட்ட அப்படியொரு பாராட்டு வாங்குகினது பெருமையா இருந்துச்சு. தொடர்ந்து படவாய்ப்பு கிடைச்சது. ஆனாலும், சீரியல் ஷூட்டிங்கிற்கே டைம் சரியா இருக்குங்கிறதனால படங்களில் கவனம் செலுத்த முடியல” என்று ஏக்கப்பெருமூச்சு விடுகிறார்.