Published:Updated:

இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ் -`வல்லமை தாராயோ'!

வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ் ஒன்றை வெளியிட இருக்கின்றனர்.

தொடர்கள் என்றாலே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதுதான் என்ற விதியை மாற்றி எழுதி வருகின்றன ஓடிடி தளங்கள். குறிப்பாக, இந்த லாக்டௌன் காலமானது வெப் சீரிஸ், நேரடி டிஜிட்டல் ரிலீஸ் படங்கள் எனப் பல புதிய பரிமாணங்களில் மக்களைச் சென்றடையும் வழிமுறைகளை ட்ரெண்டாக்கி உள்ளன. இத்தகைய மாற்றங்களை எப்போதும் கருத்தில்கொண்டு அதற்கேற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளும் உங்கள் விகடன் தற்போது இது தொடர்பாக ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது.

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ் ஒன்றை வெளியிட இருக்கின்றனர். 'வல்லமை தாராயோ' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இதற்கு 'கோலங்கள்' புகழ் திருச்செல்வம் கதை மற்றும் திரைக்கதை எழுதுகிறார். சிதம்பரம் மணிவண்ணன் இயக்குகிறார். இவர் அனிதா சம்பத் நடித்த 'எமர்ஜென்ஸி' வெப் சீரிஸை இயக்கியவர்.

`வல்லமை தாராயோ' தினமும் யூடியூபில் உங்களைத் தேடி வரவிருக்கிறது. இதன் டைட்டில் டீசர், டைட்டில் ப்ரோமோ பாடல், மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு...

Presenting the title promo song of #VallamaiTharayo - India's 1st Daily Digital Series on YouTube #Vikatan #DigitalDailySeries #MotionContentGroup

Posted by Vikatan Tele Vistas Pvt. Ltd. on Tuesday, October 13, 2020
அடுத்த கட்டுரைக்கு