Published:Updated:

விகடன் TV: பிக்பாஸ் குரல் யாருடையது தெரியுமா? - பிக் பாஸ் பிக் சீக்ரெட்ஸ்

பிக்பாஸ்
பிரீமியம் ஸ்டோரி
பிக்பாஸ்

தமிழ்நாட்டுக்காரர்தான், ஆனால் பாலிவுட் வரை ஒர்க் பண்ணுகிறவர். வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் என்பதைத் தாண்டி திறமையான ஸ்கிரிப்ட் ரைட்டர் என்கிறார்கள்

விகடன் TV: பிக்பாஸ் குரல் யாருடையது தெரியுமா? - பிக் பாஸ் பிக் சீக்ரெட்ஸ்

தமிழ்நாட்டுக்காரர்தான், ஆனால் பாலிவுட் வரை ஒர்க் பண்ணுகிறவர். வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் என்பதைத் தாண்டி திறமையான ஸ்கிரிப்ட் ரைட்டர் என்கிறார்கள்

Published:Updated:
பிக்பாஸ்
பிரீமியம் ஸ்டோரி
பிக்பாஸ்

பிக் பாஸ் சீசன் 4 விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. `டைட்டில் வெல்லப் போவது யார்’ என்கிற எதிர்பார்ப்பைத் தாண்டி பி.பா.ரசிகர்கள் பலருக்கும் ஷோ தொடர்பாக மேலும் சில கேள்விகளும் இருக்கின்றன. அவற்றிற்கான பதில்கள் இங்கே...

விகடன் TV: பிக்பாஸ் குரல் யாருடையது தெரியுமா? - பிக் பாஸ் பிக் சீக்ரெட்ஸ்

* ‘போட்டியாளர்கள் ஒவ்வொருத்தரா கன்பெஷன் ரூமுக்கு வாங்க..’

`பிக் பாஸ் வீட்டுக்குள் ஆங்கிலத்தில் பேசாதீங்க...’

முதல் சீசன் தொடங்கி தற்போதைய 4வது சீசன் வரையிலும் பிக் பாஸ் ஷோவில் இப்படி உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த பிக் பாஸ் யார்? உண்மையில் அந்தக் குரல்தான் யாருடையது?

- ஷோவில் கலந்துகொண்டவர்கள் முதல் ரசிகர்கள் வரை எல்லாருக்கும் விடை தெரியாமல் இருந்துவந்த இந்தக் கேள்விக்கான பதில் தற்போது விகடனுக்கு எக்ஸ்க்ளூசிவாகக் கிடைத்துள்ளது.

யெஸ், பிக் பாஸாக ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் சாஷோ என நட்பு வட்டாரத்தால் அழைக்கப்படுகிற சச்சிதானந்தம்.

தமிழ்நாட்டுக்காரர்தான், ஆனால் பாலிவுட் வரை ஒர்க் பண்ணுகிறவர். வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் என்பதைத் தாண்டி திறமையான ஸ்கிரிப்ட் ரைட்டர் என்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகள் மனிதருக்கு அத்துப்படியாம். ஷோ நடக்கும் 100 நாளும் பிக் பாஸ் வீடு அமைந்தி ருக்கும் செட்டிலேயே 24 மணி நேரமும் தங்கியிருக்கும் இவரை கமலே சமயங்களில் பிக் பாஸ் என்றுதான் அழைக்கிறாராம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடன் TV: பிக்பாஸ் குரல் யாருடையது தெரியுமா? - பிக் பாஸ் பிக் சீக்ரெட்ஸ்

* பிக் பாஸ் வீட்டுக்குள் 24 மணி நேரமும் கண்காணித்துக்கொண்டிருக்கும் கேமராக்களின் எண்ணிக்கை 64 என்றார்கள். 70 என்கிறார்கள் சிலர். ஆனால் கேமராக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இது இரண்டுமே இல்லை. அந்த வீட்டுக்குள் எவ்வளவு தேடினாலும் போட்டியாளர்களின் கண்களுக்குப் புலப்படாதபடி சில இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் பிக் பாஸ் காம்பவுண்ட் சுவருக்கு வெளியிலிருந்தும் சில கேமராக்கள் அந்த வீட்டைக் கண்காணித்து வருகின்றன.

* சம்பளத்தைப் பொறுத்தவரை போட்டியாளர்களின் பாப்புலாரிட்டி, அவர்கள் அந்த வீட்டில் தங்கியிருக்கும் நாள்கள் ஆகியவற்றைப் பொறுத்து ஆளாளுக்கு வேறுபடும். கையில் கிடைக்கிற தொகையில் 30 சதவிகிதம் வரியாகப் பிடித்தம் செய்யப்படுகிறதாம். இந்த சீசனைப் பொறுத்தவரை தொகுப்பாளர் அர்ச்சனாவுக்கு அதிக ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கு கமலுக்கு வழங்கப்படும் சம்பளம் எபிசோடுக்கு ஒன்றரை சி. அதாவது, வாரத்துக்கு மூன்று கோடியாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism