ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் TV

விகடன் TV : ரிமோட்பட்டன்

RAKESH-SAITHRA

காதல் திருமணம்

யார்கிட்டயும் சொல்லாதீங்க!
யார்கிட்டயும் சொல்லாதீங்க!

`யாரடி நீ மோகினி’ சீரியலின் சைத்ரா ரெட்டிக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மாப்பிள்ளை ராகேஷ் பெங்களூரைச் சேர்ந்தவர். இவ்வாண்டு தொடக்கத்திலேயே நடந்திருக்க வேண்டிய திருமணம், கோவிட் காரணமாகத் தள்ளிப்போயிருந்த சூழலில் இப்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமணத் தேதி இன்னும் முடிவாகவில்லை. ராகேஷ் – சைத்ரா திருமணம் காதல் திருமணமாம். `ஆண்டுக்கணக்கில் காதலித்து காதலித்தவரையே கைப்பிடிக்கிற சுகமே தனி’ என ரொம்பவே நெகிழ்கிறார் சைத்ரா.

SEASON-2

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

`பாரதி கண்ணம்மா’ சீரியல் டி.ஆர்.பி-யில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது, ‘ராஜா ராணி சீசன்2’ இயக்கக் கிடைத்த வாய்ப்பு ஆகிய சந்தோஷங்களுடன் இன்னொரு மகிழ்ச்சியும் சேர்ந்துள்ளது இயக்குநர் பிரவீன் பென்னட் வாழ்க்கையில். ஆம், சில தினங்களுக்கு முன்பு இவர் மனைவிக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது.

DANCE SCHOOL

யார்கிட்டயும் சொல்லாதீங்க!
யார்கிட்டயும் சொல்லாதீங்க!
யார்கிட்டயும் சொல்லாதீங்க!

த்தனை ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடியிருந்துவந்தது பாடகர் வேல்முருகனின் குடும்பம். அதனால், தான் விரும்பிய நடனப்பயிற்சி ஆசையைத் தள்ளிப்போட்டு வந்தாராம் அவர் மனைவி கலா. தற்போது சொந்த வீடு வாங்கிவிட்டதால், கணவர் பிக்பாஸ் ஹௌஸில் இருந்த சமயத்தில் , கடந்த விஜயதசமி அன்று பரதப் பயிற்சிப்பள்ளியைத் தன் வீட்டிலேயே தொடங்கி விட்டார்.

  • ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே காதல் பரிமாறிக்கொண்டிருந்த ஜோடி அது. ஒரேயொரு சீரியலில் நடித்துக் கொண்டிருந்ததால், ஷூட் இல்லாத நாள்களிலும் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்கி வந்தனர். இப்போது ஹீரோவுக்கு அடுத்த சீரியல் வாய்ப்பு வர, ஹீரோயின் முகம் ரொம்பவே வாடி விட்டதாம். ‘பேசக்கூட நேரம் இல்லையாம் அவனுக்கு’ என கண்ணைக் கசக்கிவருகிறாராம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!
  • `என்மீது எந்த முத்திரையும் குத்த முடியாது’ எனத் தொடர்ந்து பேசிவந்தாலும், அந்த டிவி பிரபலத்துக்கு வடக்கில் அரசியல் தொடர்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறதாம். குறிப்பிட்ட அரசியல் கட்சி நடத்தும் பல ரகசியச் சந்திப்புகளின் விவரங்கள் முன்கூட்டியே அவருக்குக் கிடைத்துவிடுகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக `தமிழ்நாட்டில் விரைவில் இன்னொரு ஒரு ச.ம.உ’ இடம் மாறலாமென ஒரு தகவலைக் கசியவிட்டுவருகிறார்.

  • முதலில் அந்த ஷோவில் கலந்துகொள்ளத் தயக்கம் காட்டினாராம் முன்னாள் ஹீரோயின். அதேநேரம், பிள்ளையின் படிப்பு தொடர்பாகக் கொஞ்சம் பணத்தேவை இருந்துவந்ததாம் அந்தத் தேவையை மனதில் வைத்தே கடைசியில் ஷோவில் கலந்துகொண்டிருக்கிறார். ஆனால் சென்ற வேகத்தில் வெளியேறியதால் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கவில்லையாம். `தான் எடுத்தது தவறான முடிவு’ என இப்போது நெருக்க மானவர்களிடம் புலம்பிவருகிறாராம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

விழா மேடையோ, தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவோ, எதுவாகினும் நிகழ்ச்சி சக்சஸ் ஆவதில் தொகுப்பாளர்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது.`மறக்க முடியாத ஆங்கரிங் அனுபவம்னு இருக்கா’ என டோஷிலா மற்றும் கமலிடம் கேட்டோம்.

டோஷிலா

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

`` ‘ராட்சசி’ படத்தின் ஆடியோ லாஞ்ச் தொகுத்து வழங்கிட்டிருந்தேன். ஜோதிகா மேம் பேசத் தொடங்கினப்ப, `ஆடியோ சரியா இல்ல, கொஞ்சம் சரி பண்ணுங்க’ன்னு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்ல, போடியம் பக்கமாப் போய் அதைச் சரிசெய்யறப்ப கால் இடறிடுச்சு. தடுமாறிட்டேன். அதைக் கவனிச்சிட்ட ஜோதிகா மேம், ‘ஆர் யூ ஓகே’ன்னு கேட்டுட்டுப் பேச்சைத் தொடர்ந்தாங்க. வேறு யாரும் அதைக் கவனிக்கலே. ஆனா விழா முடிஞ்ச மறுநாள் சோஷியல் மீடியாவுல `தடுக்கி விழுந்த டோஷிலா... தூக்கி விட்ட ஜோதிகா’ன்னு டைட்டில்லாம் போட்டு எழுத ஆரம்பிச்சுட்டாங்்க. ‘முகம் டிவியில வரணும்னு முன்னாடி முன்னாடி வந்தா விழ வேண்டியதுதான்’னு அதுல கமென்டுகள் வேற. இப்பெல்லாம் எந்த நிகழ்ச்சின்னாலும் நம்மால அந்த நிகழ்ச்சி திசைதிரும்பிடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கேன்.’’

சேனல் ஆபீஸ்ல ஷூட்டிங்.

கமல்

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

``முதல் நாள் ஆங்கரிங் பண்ணப்போறேன். சேனல் ஆபீஸ்ல ஷூட்டிங். கொஞ்சம் முன்னாடியே போயிட்டேன், அது கார்ப்பரேட் ஆபீஸ். கொஞ்சம் மிரட்சியா இருந்துச்சு. ஆபீஸ் ரிசப்ஷன்ல இருந்த செக்யூரிட்டி நிமிர்ந்துகூடப் பார்க்கலே. ’சார்’னு கூப்பிட்டுப் பாக்குறேன். `அங்க உட்காருங்க’ன்னு சொல்றாரே தவிர, நான் சொல்ல வர்றதைக் காதுல வாங்கிக்கவே இல்லை. கடைசியில ஷோ யூனிட்ல இருந்து என் மொபைலுக்குக் கூப்பிட, அவங்க செக்யூரிட்டிக்கு கால் பண்ண, அதுக்குப் பிறகு உள்ளே போனேன்.

‘ஒரு ஆபீஸ்ல செக்யூரிட்டிகிட்ட பேசி உள்ளே போக முடியலை, நீ மைக்ல என்ன பேசிக் கிழிக்கப் போறியோ’னு எனக்கு நானே கேட்டுக்கிட்டு, ஹோஸ்ட் பண்ணிட்டு வந்த நாள் அது.’’