ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு லவ் ஸ்டோரி?

அஸீம்-ஷிவானி
பிரீமியம் ஸ்டோரி
News
அஸீம்-ஷிவானி

விகடன் TV

ரியோ, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், எவிக்‌ஷனில் வெளியேறிய ரேகா வரிசையில், பிக் பாஸ் சீசன் 4-ல் இன்னொரு விஜய் டிவி ஆர்ட்டிஸ்ட் கலந்து கொள்ளவிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. யெஸ், அர்ச்சனா, சுசித்ராவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது நபராக அடுத்த சில தினங்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார், `பகல் நிலவு’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய சீரியல்களில் ஷிவானியுடன் நடித்த நடிகர் அஸீம்.

இதுதொடர்பாக ஆனந்த விகடன் 26.8.2020 தேதியிட்ட இதழிலேயே ‘ஆரவ்-ஓவியா’, லாஸ்லியா-கவின் வரிசையில் 4வது சீசனுக்கும் ஒரு ஜோடி தயார்; அந்த ஜோடி விஜய் டிவிக்குப் பரிச்சயமான ஜோடிதான்’ எனக் குறிப்பிட்டிருந்தோம்.

ஷிவானி
ஷிவானி

ஷிவானி முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற நிலையில் அஸீம் இப்போது செல்கிறார்.

யார் இந்த அஸீம்?

ஆரம்பத்தில் மியூசிக் சேனலில் ஆங்கராக இருந்தார். சீரியல் நடிகராகப் பெயர் வாங்கியது, சன் டிவியில் ஒளிபரப்பான ‘பிரியமானவள்’ சீரியல் மூலம்தான்.

பிறகு சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு வந்தவர், பிரைம் டைம் சீரியலான ‘தெய்வம் தந்த வீடு’ தொடரில் நடித்தார். அந்தத் தொடர் முடிவடைந்ததும், ‘பகல் நிலவு’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியலில்தான் அஸீமுக்கு ஜோடியாக நடித்தார் ஷிவானி.

ஷிவானி
ஷிவானி

அஸீம்-ஷிவானி ஜோடிப்பொருத்தம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட, சேனலும் தன் பங்குக்கு, `சிறந்த ரொமாண்டிக் ஜோடி’ என விருது தந்தது. விளைவு.. `ரீல் ஜோடி ரியல் ஜோடி ஆகிறதா’ என்கிற பேச்சுகள் சீரியல் ஏரியா முழுக்க எதிரொலித்தன.

இந்தக் கிசுகிசுகளுக்கெல்லாம் அஸீமோ, ஷிவானியோ நேரடியாகப் பதில் சொல்லவில்லை. அதேநேரம் ‘பகல் நிலவு’ தொடர் முடிந்ததும், ’ஜோடி சீசன் 10-ல் இருவரும் ஜோடியாக ஆடுவதற்கும் மேடை ஏறினார்கள்.

அஸீம்-ஷிவானி
அஸீம்-ஷிவானி

`பகல் நிலவு’, ’ஜோடி’ ஆகியவற்றில் இருவரையும் சேர்த்துப் பார்த்த ரசிகர்கள் `இருவருக்கிடையிலும் காதலா’ என்கிற கேள்வியைத் தொடர்ந்து எழுப்பி வந்த நிலையில்தான், ஒருபடி மேலே போய், அடுத்து ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியலில் இருவரும் ஹீரோ-ஹீரோயினாகக் களமிறங்கினார்கள்.

`அப்ப, காதலும் கல்யாணமும் கன்பார்ம்’ எனக் கிசுகிசுக்கள் மறுபடியும் கிறுகிறுக்க வைத்த சூழலில்தான், என்ன நடந்ததோ, சில எபிசோடுகளே ஒளிபரப்பான நிலையில், ‘கடைக்குட்டி சிங்க’த்திலிருந்து ஷிவானி திடீரென வெளியேறியதுடன் வேறு சேனலுக்குச் சென்றுவிட்டார். ‘அஸீமுக்குத் தந்த முக்கியத்துவம் தனக்குக் கிடைக்கவில்லை என்று கருதியதாலேயே அந்த சீரியலிலிருந்து வெளியேறினார்’ என அப்போது பேசப்பட்டது.

அஸீம்
அஸீம்

மறுபடியும் என்ன சொல்லிக் கூட்டி வந்தார்களோ, இப்போது பிக்பாஸில் இருக்கிறார் ஷிவானி. பிக்பாஸ் ஆரம்பித்த புதிதில் சக போட்டியாளர்களுடன் ஒன்றாமலேயே இருந்துவந்த ஷிவானிக்கு ‘அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்’ என அர்ச்சனாவேகூட பட்டம் கொடுத்தது நினைவிருக்கலாம். இந்தப் பின்னணியில் அஸீம் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதால், இனி அங்கு ஷிவானியின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?

அஸீம்
அஸீம்

அந்த எதிர்பார்ப்பும், `பிக் பாஸ்’ வீட்டுக்குள் இவர்களிடையே நட்பா, காதலா என அறிந்து கொள்கிற ரசிகர்களின் ஆர்வமும் ஷோவுக்குப் பெரிய பலமாக இருக்குமென நினைக்கிறது சேனல்.

‘`ரீலோ, ரியலோ ஒரு ஜோடியை ஷோவுக்குள் இறக்கி விடுறதுங்கிறது பிக் பாஸோட திட்டமிட்ட பிளான். மத்த மொழிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ்களிலும்கூட இதுக்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம். ஒண்ணு, வெளியில ஜோடியா இருக்கிறவங்களை அனுப்புவாங்க. இல்லையா, உள்ளே போனதும் அவங்களை ஜோடி ஆக்கிடுவாங்க.

ஓவியா–ஆரவ், மகத்-யாஷிகா, `தாடி’ பாலாஜி-நித்யான்னு முந்தைய சீசன்களிலேயே பார்த்திருக்கோமே! அதே வரிசையில்தான் இப்ப அஸீம்-ஷிவானி. ஆரம்பத்துல சேர்ந்து நடிச்சாலும் ரெண்டு பேருக்கிடையிலும் ஏதோ காரணத்தால் பிரிஞ்சாங்க. இப்ப மறுபடி ஒரே வீட்டுக்குள் சந்திக்கப் போறாங்க. அப்ப பரபரப்பு கன்டென்ட் கிடைக்குதில்லையா?” என்கிறார், தொடர்ந்து `பிக் பாஸ்’ பார்த்துவரும் ஒரு சினிமா பிரபலம்.

எப்படியோ இவர்கள் இருவரின் சந்திப்புக்குப் பிறகு பிக் பாஸ் வீடு களைகட்டப்போகிறது என்பது மட்டும் நிஜம்.