கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: பத்து வருடங்களுக்குப் பிறகு அதே ஜோடி!

தேவயானி
பிரீமியம் ஸ்டோரி
News
தேவயானி

தேவயானி-‘மோகமுள்’அபிஷேக்

‘கோலங்கள்’ பயணம் என் வாழ்க்கையில மறக்கவே முடியாதது. சுமார் ஆறு வருஷம், ஆயிரத்து ஐந்நூறு எபிசோடுகள்... சினிமாவுல நான் தேவயானியா பெரிய ரவுண்ட் வந்திருந்தாலும், ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ன்னு சொல்லக்கூடிய அளவுக்கு ‘அபி’ங்கிற பெயரை எங்கிட்ட இருந்து பிரிக்க முடியலை. ஃபேமிலியோட எங்காச்சும் வெளியில போனா, பார்க்கிறவங்க, முதல்ல ‘ஹை... தேவயானி’ன்னு சொன்னாக்கூட அடுத்த சில செகண்டுல ‘அபி மேடம்’னு கூப்பிட்டுடுவாங்க. தேங்க்ஸ் டூ விகடன், திருச்செல்வம் சார். இப்பக்கூட பாருங்க, ‘கோலங்கள்’ வெற்றி ஜோடின்னுதான் மறுபடியும் சேர்ந்து நடிக்கச் சொல்லிக் கூப்பிட்டிருக்காங்க.’’

‘கோலங்கள்’ ஜோடியான தேவயானி-‘மோகமுள்’அபிஷேக் இருவரும் ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலில் மீண்டும் சேர்ந்து நடிப்பது குறித்துக் கேட்டதும், உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் தேவயானி...

“ ‘கோலங்கள்’ சீரியல் முடிஞ்சு பத்து வருஷத்துக்கு மேல ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன். ஆனாலும் அதே ஜோடி நடிச்சா சீரியல் ஹிட் ஆகும்னு நம்பிக் கேக்கறாங்கன்னா, சீரியல் ரசிகர்கள் மீண்டும் தங்கள் அபிமான அபி-பாஸ்கர் ஜோடியை எதிர்பார்க்கிறாங்கன்னுதானே அர்த்தம். அதேநேரம் ‘கோலங்கள்’ கதை வேற. ‘புதுப்புது அர்த்தங்கள்’ கதை வேற. இந்த சீரியல்ல நடிக்கக் கேட்டு எங்கிட்ட வந்து கதை சொன்னபோதே, ஜோடியா யார் பண்றாங்கன்னெல்லாம் கேக்காம, உடனே சம்மதம் சொல்லிட்டேன். ஏன்னா, ஹோம்லி ஸ்டோரி, அதேநேரம் ஹ்யூமரும் இருக்கு. சென்டிமென்டும் இருக்கு. ஒரு குடும்பத்துல இருக்கிற எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரியான கதைங்கிறதுதான் முக்கியமான விஷயம்.அப்புறம்தான், ‘உங்களுக்கு ஜோடியா நடிக்கறது அபிஷேக்’னு சொல்றாங்க.

அந்த செகண்ட், இன்னும் சந்தோஷமா இருந்தது. அபிஷேக் சார் அருமையான நடிகர். ஸ்வீட்டான கோ ஆர்ட்டிஸ்ட். ஒரு ஹிட் சீரியல் முழுக்க நாங்க சேர்ந்து ட்ராவல் பண்ணியிருக்கோம். அப்படிப்பட்ட ஒருத்தருடன் பத்து வருஷம் கழிச்சு மறுபடியும் சேர்ந்து ஒர்க் பண்றதுன்னா ஹேப்பியாதானே இருக்கணும்.

சந்தோஷமாத் தொடங்கியிருக்கு. பட்டிமன்றம் லியோனி சார் முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கார். அவருடைய நகைச்சுவைப் பேச்சையெல்லாம் நான் முன்னாடி ரசிச்சிருக்கேன். அதேபோல ‘நீ வருவாய் என’ படத்துல எங்கூட நடிச்ச இயக்குநர் ரமேஷ் கண்ணா சார் இந்த சீரியல் மூலமா முதல்முதலா டிவிக்கு வந்திருக்கார். தினமும் ஜாலியா போயிட்டிருக்குது ஷூட்டிங்.’’

விகடன் TV: பத்து வருடங்களுக்குப் பிறகு அதே ஜோடி!

``கடந்த ஆண்டு நீங்க நடிச்ச ‘ராசாத்தி’ சீரியல் கோவிட் லாக்டௌன் காரணமாத்தான் முடிக்கப்பட்டுச்சா?’’

‘‘ஆமாங்க. அந்த சீரியல்ல கெஸ்ட் ரோல்லதான் கமிட் ஆகியிருந்தேன். ஆனாலும் அந்தக் கேரக்டர் கொஞ்சம் நல்லாப் போனதால நீட்டிச்சாங்க. கொரோனா வந்ததால சீரியலையே முடிக்க வேண்டியதாகிடுச்சு.’’

``லாக்டௌன் நாள்கள்ல என்ன செய்தீங்க?’’

“அந்தியூர் பக்கத்துல உள்ள அவருடைய (கணவர் ராஜகுமாரனின்) சொந்த ஊருக்குக் குடும்பத்தோடு போயிட்டோம். அந்த ஊர்ல ஒரு வீடு கட்டி சுத்தி தென்னை மரங்களுக்கு நடுவுல அழகான தோட்டம் அமைச்சிருக்கோம். சமையலுக்குத் தேவையான காய்கறிகள் அங்கேயே விளையும். அங்கதான் குடும்பத்துடன் லாக் டௌன் நாள்களை முழுக்கக் கழிச்சோம். கிராமம்கிறதால கொரோனா பீதியெல்லாம் இல்லாம குழந்தைகளோடு நல்லாவே நகர்ந்துச்சு அந்த நாள்கள். செய்தியெல்லாம் பார்க்கறதே இல்லை. ஆனாலும் அப்பப்ப எப்படியாச்சும் யார் மூலமாவது கொரோனா புள்ளிவிவரங்கள் காதுக்கு வந்துட்டேதான் இருந்தது. ஒருவழியா மீண்டு, வேலைகளைப் பார்க்கலாம்னா இப்ப மறுபடியும் ரெண்டாவது, மூணாவது அலைன்னு என்னென்னவோ சொல்றாங்க. மறுபடியும் அந்தியூர்தான் போக வேண்டியிருக்குமோ என்னவோ? கொஞ்சம் பயமாதான் இருக்குது. கடவுளே காப்பாத்துன்னு ப்ரேயர் பண்ணிட்டிருக்கேன்.’’

விகடன் TV: பத்து வருடங்களுக்குப் பிறகு அதே ஜோடி!

``சினிமா, வெப் சீரிஸ் வாய்ப்புகள்?’’

“கன்னடத்துல ஒரு பெரிய படம் பண்ணியிருக்கேன். தெலுங்குல அடுத்த மாசம் ஒரு படம் ரிலீஸ் ஆகப்போகுது. தமிழ்ல இப்போதைக்கு படங்கள் இல்லை. வெப்சீரிஸைப் பொறுத்தவரைக்கும் இதுவரைக்கும் யாரும் கேக்கலை. வந்தா, கதை பிடிச்சிருந்தா பண்ண வேண்டியதுதான்.’’

``இனியா, பிரியங்கா எப்படி இருக்காங்க?’’

‘‘நல்லா இருக்காங்க. இனியா பத்தாவது படிக்கிறா. பிரியங்கா எட்டாவது. ரெண்டு பேரும் வளர்ந்துட்டாங்க. நல்லா பாடுறாங்க. கீ போர்டு, கிடார் வாசிக்கிறாங்க. நல்லா படம் வரையறாங்க. ரெண்டு பேருக்கும் சிலம்பம் சுத்தறதுல பெரிய போட்டியே நடக்கும். கூடவே நல்லா படிக்கவும் செய்வாங்க. சிம்பிளா சொல்லணும்னா, எனக்குக் கிடைச்ச ரெண்டு பேருமே ரொம்ப நல்ல பசங்க.’’