சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: இசை அமெரிக்காவிலிருந்து வந்தது!

பிரனிதி, பிரியா, பிரவீன்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரனிதி, பிரியா, பிரவீன்

`எனக்கு பியானோவும் பிடிக்கும்னு அப்பாகிட்ட சொன்னேன். உடனே பியானோ கிளாஸ் சேர்த்துட்டாங்க.

`எஞ்சாயி எஞ்சாமி...' பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தப் பாடலை நமக்குக் குழந்தைப் பாடகராகப் பரிச்சயமான பிரனிதி பாட, அவரின் அம்மா பிரியா அதனை ரசித்தவாறு படம் பிடித்துக்கொண்டிருந்தார். மற்றொரு பக்கம் பிரனிதியின் தந்தை பிரவீன் மும்முரமாக லேப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்தார். அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு ரிட்டர்னான அந்த அழகிய குடும்பத்திற்குள் நாமும் நுழைந்தோம்.

``பிரனிதிக்கு சின்ன வயசில ரைம்ஸ் போட்டுக் காட்டுவோம். அந்த ரைம்ஸ்ல எந்த ராகத்துல பாடுறாங்களோ, அதே ராகத்துல அவ பாடுவா. நாங்க எந்தப் பாட்டு பார்க்கிறோமோ, அதை அவ அப்படியே காப்பி பண்ணி, பாட முயற்சி பண்ணுவா. அவளுக்கு ரெண்டு வயசா இருக்கும்போதே பாடறதில் ஆர்வம் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டோம். அவளுக்கு மூணு வயசாகுறப்போ ரஹ்மான் சாரோட `கே.எம் காலேஜ் ஆஃப் மியூசிக் அண்டு டெக்னாலஜி'யில் சேர்த்திட்டோம். அங்க கத்துக்க ஆரம்பிச்ச பிறகுதான் `சன் சிங்கர்' ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கிட்டு டைட்டில் வின் பண்ணினா. ரியாலிட்டி ஷோவுக்கு வர்றதுக்கு முன்னாடியே அவ `அருவி' படத்துல அறிமுகமாகிட்டா'' என்கின்றனர் இருவரும்.

விகடன் TV: இசை அமெரிக்காவிலிருந்து வந்தது!

``எனக்கு பியானோவும் பிடிக்கும்னு அப்பாகிட்ட சொன்னேன். உடனே பியானோ கிளாஸ் சேர்த்துட்டாங்க. அம்மாவுக்கு, மியூசிக் புரொடக்‌ஷன் முழுசா நான் கத்துக்கணும்னு ஆசை. அதுல எனக்கும் ஆர்வம் இருக்குங்கிறதனால இப்போ அது தொடர்பான `மியூசிக் தியரி' கத்துட்டிருக்கேன்' என்றதும் சிரித்தவாறு பிரியா ஆரம்பித்தார்.

``இப்ப பிரனிதி, இயக்குநர் அருண் வைத்தியநாதன் சாரோட டைரக்‌ஷனில் ஒரு படத்தில் நடிச்சிட்டிருக்காங்க. குழந்தைகளுக்கான அந்தப் படத்தில் பிரனிதி பாடகராகவே நடிக்கிறா. நடிக்கிறதைவிடப் பாடுறதில்தான் அவ ரொம்ப ஆர்வமா இருக்கா. இந்தக் கதை அவளுக்குப் பிடிச்சதால நடிக்கிறேன்னு எங்ககிட்ட பர்மிஷன் கேட்டா. அவளுக்குப் பிடிச்சதைப் பண்ணட்டும்னு நாங்களும் சம்மதிச்சோம்” என்கிறார்.