சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஷபானா – ஆர்யன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷபானா – ஆர்யன்

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு சினிமாப் பக்கம் வந்திருக்கும் ‘மின்னல்’ தீபாவுக்கு ஒரு வருத்தம்.

‘ராஜமன்னார் வகையறா’ சீரியலில் நடித்துவரும் ஜெயக்குமார், ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ இயக்குநர் சந்தோஷின் தந்தை. மகன் அடுத்து பிரபுதேவாவை வைத்து இயக்கியிருக்கும் ‘பொய்க்கால் குதிரை’யிலும் சிறு வேடத்தில் நடித்திருக்கிற ஜெயக்குமாருக்கு சினிமாவைவிட சீரியல்களில் பேசப்படுகிற கேரக்டரில், அதுவும் நிரந்தரமாக நடிக்கவே ஆசையாம்.

விகடன் TV:  ரிமோட் பட்டன்

பிக்பாஸ் வாய்ப்பு வந்ததுமே ஏற்கெனவே அங்கு சென்று வந்த வனிதா விஜயகுமாரிடம் அது பற்றித் தெரிவித்து, அங்கு என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்கிற விஷயங்களையெல்லாம் கேட்டுவிட்டே நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறாராம் சஞ்சீவ்.

விகடன் TV:  ரிமோட் பட்டன்

மிர்ச்சி செந்தில் ஜீ தமிழ் பக்கம் வருகிறார். அங்கு ஏற்கெனவே ஒளிபரப்பாகி அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியான ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்: சீசன் 4’ விரைவில் தொடங்க இருக்கிறதாம், நடிகைகள் சினேகா, சம்யுக்தா ஆகியோருடன் நடுவர்களில் ஒருவராகப் பங்கேற்கிறார் செந்தில்.

விகடன் TV:  ரிமோட் பட்டன்

புதுச்சேரி பக்கமுள்ள ரிசார்ட் ஒன்றில் தேனிலவைக் கொண்டாடச் சென்றது. ஷபானா – ஆர்யன் ஜோடி. நான்கு நாள்கள் எனத் திட்டமிட்டுச் சென்றிருந்த நிலையில் இரண்டாவது நாளே முக்கியமான வேலை எனத் திரும்பி விட்டார்களாம்.

விகடன் TV:  ரிமோட் பட்டன்

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு சினிமாப் பக்கம் வந்திருக்கும் ‘மின்னல்’ தீபாவுக்கு ஒரு வருத்தம். சில மாதங்களுக்கு முன் ‘யாரடி நீ மோகினி’ சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நண்பர் ஒருவருடன் நிகழ்ந்த கைகலப்பு குறித்து மறக்காமல் பலரும் கேட்பதுதான் வருத்தத்துக்கான காரணம். ‘‘கூகுள்ல என் பெயரை சர்ச் செய்தாலே அந்த நியூஸ்தான் வருது, அதை எடுக்க என்னங்க செய்யணும்?’’ என அப்பாவியாகக் கேட்டுவருகிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

கடல் கடந்து போய் நிகழ்ச்சி நடத்திய ஆங்கர் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறாராம். ‘‘இந்த மாதிரி ஷோக்கள்ல கலந்துகொள்கிற போட்டியாளர்கள் மேலதான் நெகட்டிவ் பப்ளிசிட்டி விழுந்து பார்த்திருப்போம். ஆனா இந்த ஷோவுல உங்களைத் தப்பாப் பேசியவங்கதான் நிறைய. ஷோ பண்ணியதுல உங்களுக்குக் கெட்ட பேர்தான் மிச்சம்’’ என அவரது வீட்டிலிருந்தே வந்த கமெண்ட்தான் வருத்தத்துக்கான காரணம்.