சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

சரண்யா,  ராகுல்
பிரீமியம் ஸ்டோரி
News
சரண்யா, ராகுல்

காமெடி, குணச்சித்திர வேடம் எனச் சின்னத்திரையில் பயணித்துவந்த அழகப்பன் ஒருவழியாக முன்னணி சேனலில் ஹீரோவாக கமிட் ஆகியிருக்கிறார்

சரண்யா,  ராகுல்
சரண்யா, ராகுல்

சரண்யாவிடம் ராகுல் குறித்தும் அவருடனான காதல் குறித்தும் பேசும் சிலர், ‘உங்களுக்கென்ன, காதல்ல எந்தப் பிரச்னையும் இருக்காதே’ என்று சாதாரணமாகச் சொல்லிவிடுகிறார்களாம். ‘எவ்ளோ எதிர்ப்புகள், அதைத் தாண்டி இந்தக் காதலை ஜெயிக்க வைக்க நாங்க எப்படி ஓடிட்டிருக்கோம்கிறது எங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியும்’ என்கிறார் சரண்யா.

விகடன் TV: ரிமோட் பட்டன்

இயக்குநர் மோகன்ஜி டைப் படமாகத் தயாராகியிருக்கும் ஒரு படம் ‘கிடுகு.’ சமீபமாக சின்னத்திரையில் இருந்து ஒதுங்கியிருந்த பிர்லா போஸை அணுகி முதலில் ‘வில்லன் பாத்திரம்’ என்றார்களாம். ஷூட்டிங் நெருக்கத்தில் ‘நீங்கதான் ஹீரோ’ எனச் சொல்லியிருக்கிறார்கள். கதையை டீடெய்லாகச் சொல்லாமல் வேளாங்கண்ணி சென்று ஷூட்டிங்கும் தொடங்கியிருக்கிறது. திராவிட மாடலுக்கெதிரான டயலாக்குகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் தெறிக்க, அப்போதுதான் பிர்லாவுக்கு ‘ஏதோ விவகாரமான படம்’ எனத் தெரிந்திருக்கிறது. பேசியபடி சம்பளமும் தரப்படவில்லை. பாதிச் சம்பளமே கிடைத்திருக்கிறது. வேறு ஆளை டப்பிங் பேச வைத்ததுடன் கடைசி நேரத்தில் பிர்லாவுக்கு டூப்பாக இன்னொருவரை வைத்தும் காட்சிகளை எடுத்தார்களாம். எல்லாம் முடிந்து ஆடியோ லாஞ்ச்சுக்கு அழைக்க, ‘போங்கய்யா நீங்களும் உங்க படமும்’ என்ற பிர்லா, நிகழ்ச்சிக்குச் செல்லவே இல்லை.

விகடன் TV: ரிமோட் பட்டன்

காமெடி, குணச்சித்திர வேடம் எனச் சின்னத்திரையில் பயணித்துவந்த அழகப்பன் ஒருவழியாக முன்னணி சேனலில் ஹீரோவாக கமிட் ஆகியிருக்கிறார். ’உழைப்புக்கேத்த பலன் கிடைச்சிருக்கு’ என நண்பர்கள் வட்டாரத்திலிருந்து தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்துவருகிறதாம் இவருக்கு. சன் டி.வி-யில் தொடங்கியிருக்கும் ‘ஆனந்த ராகம்’ அழகப்பன் வாழ்க்கையில் ஒரு மைல் கல் என்றால் மிகையில்லை.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘சத்யா’ தொடர் முடிவுக்கு வரலாம் எனத் தெரிகிறது. ஹீரோயினாக நடித்துவந்த ஆயிஷாவுக்குப் பெரியதொரு வாய்ப்பு வந்திருப்பதாகவும், அதனால் சீரியலிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் பேச்சு கேட்கிறது சீரியல் வட்டாரத்தில். ‘பிக் பாஸ்’ செல்லப்போகிறாரா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

ஒளிபரப்பு தொடங்கப்பட்ட நாளை சில தினங்களுக்கு முன் கொண்டாடிய அந்தச் சேனல், ஊழியர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து தந்து திக்குமுக்காட வைத்ததாம். தொடர்ந்து சிக்கல்களைச் சந்தித்து வந்துகொண்டிருந்த நிலையில், சமீபத்திய சில அரசியல் நடவடிக்கைகள் தங்களுக்குச் சாதமாக அமைந்திருப்பதாகக் கருதுகிறார்களாம். ‘அடுத்த வருஷம் இதே நேரம் நாம பழைய நிலைக்கு வந்துடலாம்’ என ஊழியர்களை உற்சாகப்படுத்தவும் செய்தார்களாம்.