சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: டி.ஆர்.பி சீக்ரெட்!

 டி.ஆர்.பி சீக்ரெட்!
பிரீமியம் ஸ்டோரி
News
டி.ஆர்.பி சீக்ரெட்!

என்னைப் பொறுத்தவரை எவர்கிரீனா கைகொடுக்கிற விஷயமா காதலை நினைக்கிறதால அதையே தேர்ந்தெடுப்பேன்.

ஒரு சீரியல் `ஹிட்’டா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது டி.ஆர்.பி. ஒவ்வொரு வியாழக் கிழமையும் வெளியாகும் இந்தப் புள்ளிகளே சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாவதைத் தீர்மானிக்கிறது. டி.ஆர்.பி-யில் அதிக புள்ளிகளைப் பெற, அதாவது ரசிகர்களிடம் பெருவாரியாக ரீச் ஆக, சீரியல்களில் என்னதான் செய்கிறார்கள்?

`செம்பருத்தி’ சீரியலை ஆரம்பத்தில் இயக்கியவரும், தற்போது ‘சித்தி 2’ தொடரை இயக்கிவருபவருமான இயக்குநர் சுலைமானிடம் பேசினேன்.

‘‘டி.ஆர்.பி ரேட்டிங் வாரத்துக்கு ஒருமுறைதான் வெளியாகுது. ஆனா ஒவ்வொரு நாளுமே ரசிகர்களை சீரியலை விட்டு நகராதபடி பார்த்துக்க வேண்டியிருக்குது. பெரிய சவாலான விஷயம் இது. ஏன்னா, போட்டிகள் இன்னைக்கு ஏராளம்.

ஒவ்வொரு சீரியல்லயும் அந்த சீரியலின் கதைக்கேற்ப அல்லது அதை இயக்குகிற இயக்குநர்களின் ஐடியாப்படி ரேட்டிங் கிடைக்க யோசிப்பாங்க. என்னைப் பொறுத்தவரை எவர்கிரீனா கைகொடுக்கிற விஷயமா காதலை நினைக்கிறதால அதையே தேர்ந்தெடுப்பேன்.

விகடன் TV: டி.ஆர்.பி சீக்ரெட்!
விகடன் TV: டி.ஆர்.பி சீக்ரெட்!

அதாவது ஒரு சீரியல்ல நல்லதொரு ஜோடி இருக்காங்கன்னா, அவங்களுக்கிடையிலான கெமிஸ்ட்ரி, அதாவது ரொமான்ஸ், சின்னச் சின்னச் சண்டை, அந்தச் சண்டைக்குப் பிறகு உண்டாகும் பிரியம்னு காட்சிகளைக் கொண்டு போறது சக்சஸ் தருது.

‘செம்பருத்தி’யை நான் இயக்கினப்ப கார்த்திக்-சபானா ஜோடியை அப்படித்தான் பிரபலமாக்கினோம். இன்னைக்கு அந்த சீரியல்ல கார்த்திக் இல்லாட்டிக்கூட இப்பவும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸா பலரும் அந்த ஜோடி சம்பந்தப்பட்ட காட்சிகளை வைக்கிறதைப் பார்க்க முடியுது. அந்த சீரியலுக்கு அப்ப சிறந்த ரொமான்ஸ் ஜோடிக்கான விருதும் கிடைச்சது.

கலைவாணன்
கலைவாணன்

அதேபோலத்தான் இப்ப சித்தி 2 தொடர்லயும் கவின் –வெண்பா ஜோடிக்கு சீரியல் ரசிகர்களிடையே அவ்வளவு வரவேற்பு. என்னைப் பொறுத்தவரைக்கும் இதுதான் சேஃப் ஜோனா நினைக்கிறேன். இதை விட்டுட்டு, மாமியார் மருமகளுக்கு ஆக்ரோஷமான சண்டை, அல்லது வில்லிகளின் வித்தியாசமான வில்லத்தனம்னே தொடர்ந்து கொண்டு போனா, அது ஒரு சில வாரங்களுக்கு வேணும்னா கைகொடுக்கலாம். ஆனா, ஒருகட்டத்துல ரசிகர்கள் சீரியலை விட்டு நகர்ந்துபோயிடுவாங்கன்னு நம்புறேன். ஏன்னா, இப்ப ரேட்டிங் கிடைக்கிற எல்லா சீரியல்களையுமே பாருங்க, அந்த சீரியல்கள்ல ஒரு க்யூட்டான ஜோடி இருப்பாங்க’’ என்கிறார்.