Published:Updated:

AKS 13 | டீம் லீடர் சிவாவிடம் வேலைக்கு சேரும் காயத்ரி… ஆபிஸ் ஹராஸ்மென்ட் என்றால் என்ன?

AKS 13 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (08-09-2021) வெளியான 13-வது எபிசோட் எப்படி இருந்தது?!

AKS 13 | டீம் லீடர் சிவாவிடம் வேலைக்கு சேரும் காயத்ரி… ஆபிஸ் ஹராஸ்மென்ட் என்றால் என்ன?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (08-09-2021) வெளியான 13-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:
AKS 13 | ஆதலினால் காதல் செய்வீர்

முதல் நாள் வேலைக்கு வந்திருக்கும் காயத்ரியிடம் யாராவது ஆண்கள் வழிந்தால் அவளுக்கு ஏற்கனவே ஆள் இருப்பதாக சொல்லச் சொல்கிறான் சுந்தர். அவனிடமிருந்து தப்பிப் பிழைத்தால் போதும் என அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது என்று சொல்லி காயத்ரி இணைப்பை துண்டித்துவிட்டு பாண்டியனுடன் செல்கிறாள்.

காயத்ரியின் சல்வார்-கமீஸ்-துப்பட்டா, நெற்றியில் சந்தனம், திருநீறு, ஜடை பின்னிப் பூ வைத்திருப்பது, காதில் ஜிமிக்கி என எல்லாவற்றையும் மற்றவர்கள் விநோதமாக பார்த்து தங்களுக்குள் புன்னகைத்துக் கொள்கிறார்கள். முதல் நாள் கவிதா, இரண்டாம் நாள் காயத்ரி என அடுத்தடுத்த நாட்களில் வேறு வேறு பெண்களுடன் வருவதால் தன்னுடைய இமேஜ் கெட்டுவிட்டதாகவும், அதனால்தான் மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதாகவும் காயத்ரியிடம் சொல்கிறான் பாண்டியன். காயத்ரி அவனை சிரித்துக்கொண்டே கண்டிக்கிறாள். அதோடு இனி அவன் உதவி தேவையில்லை என்றும் சொல்லிச் செல்கிறாள். பாண்டியன் இப்படி பேசுவது அவனுடைய வெகுளித்தனம் என்றாலும் பல நேரங்களில் இந்த வெகுளித்தனமான, வெளிப்படையான பேச்சு ஆபத்துகளை கொண்டு வரலாம்.

AKS 13 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS 13 | ஆதலினால் காதல் செய்வீர்

அந்தக்காலம் முதலே கிராமத்திலிருந்து நகரத்துக்கு படிக்க அல்லது வேலைக்கு செல்பவர்களின் உடை அலங்காரம், பேச்சு வித்தியாசமாக இருப்பதும் அவர்களை மற்றவர்கள் கேலி செய்து சிரிப்பதையும் பல்வேறு திரைப்படங்களில் கண்டிருக்கிறோம். கல்லூரியில் உடைகளுக்கு பொருத்தமாக அதே கலரில் வளையல், தோடு என்று வரும் சக மாணவிகளை கேலி செய்திருக்கிறோம். வயது கூடும்போது மனமுதிர்ச்சி ஏற்பட்டு மற்றவர்கள் எப்படி இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரலாம். ஆனாலும் இடத்துக்கு ஏற்றவாறு உடுத்தும் பழக்கத்தை நம்மால் முழுவதுமாக விட முடிவதில்லை.

யாருக்காகவும், எந்த இடத்துக்காகவும் தம்மை மாற்றிக்கொள்ளாமல், எப்போதும் எப்படி இருக்கிறோமோ அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்வது அவரவர் உரிமை. அப்படி செல்ல முடிவது ஒரு ஜென் நிலை. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேலிப் பார்வைகளை தாண்டி காயத்ரி ஜிமிக்கி, சல்வார், பூ என அழகாக இருக்கிறாள். எக்ஸ்பிரஷன்ஸ், வசனங்கள், உடை எல்லாமும் பொருத்தமாக ரசிக்கும்படி இருக்கிறாள்.

பரத்தின் அறையில் கதவு லேசாக திறந்திருப்பதால் வெளியில் இசை சத்தம் கேட்டு கவிதா எட்டிப் பார்க்கிறாள். புனிதாவும், பரத்தும் நடனமாடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களிருவரும் நடனமாடியது அவளுக்கு பிடித்துப்போகவே மறைந்திருந்து ரசிக்கிறாள். நடனத்தின் முடிவில் புனிதாவை முத்தமிட பரத் நெருங்கும்போது கவிதா அதிர்ச்சியில் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை கீழே போட்டு விடுகிறாள். சத்தம் கேட்டு இருவரும் வெளியே வந்து பார்க்கிறார்கள். கவிதா எட்டிப்பார்த்தது தவறு என்று சங்கடத்துடன் புனிதாவிடம் மன்னிப்பு கேட்கிறாள்.

AKS 13 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS 13 | ஆதலினால் காதல் செய்வீர்

புனிதாவுக்கு லேசாக பயம் ஏற்படுகிறது. புனிதா கவிதாவிடம் வெளியில் சொல்ல வேண்டாம் என்கிறாள். கவிதா அந்த வீட்டுக்கு வந்தவுடனே இருவரும் லிவ்-இன் உறவில் இருப்பதை புரிந்துகொண்டு விட்டதாகவும், ஆனால் இதுவரை பாண்டியனிடம் கூட சொல்லவில்லை என்றும் இனிமேலும் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்கிறாள்.

இந்தியாவில் திருமண உறவில் இருக்கும் பிரச்னைகளை பார்த்து பயப்படும் இந்த தலைமுறையினர் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் உறவை #LivingTogether தேர்வு செய்கின்றனர். நிறைய பேருக்கு லிவிங் டுகெதர் உறவு குறித்த சரியான புரிதல் இல்லாமல் அதை தவறு என்கிறார்கள். 18 வயது நிரம்பிய யார் வேண்டுமானாலும் யாருடனும் சேர்ந்து ஒரு வீட்டில் வசிப்பது இந்தியாவில் சட்டப்படி தவறில்லை. ஆனால், இருவரில் ஒருவர் திருமண உறவில் இருந்து கொண்டு இன்னொருவருடனுடன் லிவ்-இன்னில் இருப்பது இந்தியாவில் சட்டப்படி குற்றம்.

திருமண உறவில் இருக்கும் கட்டாயமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை, வருமானம் மற்றும் சொத்துக்களுக்கு திருமண உறவு மூலம் யாரோ ஒருவரை உடனடியாக வாரிசாக்குவது, பிடிக்கவில்லை என பிரிய வேண்டுமானால் விவகாரத்து நடவடிக்கைகள், இன்னும் திருமணத்தின் அடிப்படை விஷயங்களில் உடன்பாடில்லாதவர்கள் லிவ்-இன் உறவை தேர்வு செய்கிறார்கள். ஆனால் பலரும் நல்ல புரிதல் வந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைப்பவர்கள்.

பரத்துக்கு திருமணம், குடும்பம், குழந்தைகள் என வாழ விருப்பம். ஆனால் புனிதாவுக்கு திருமண உறவில் விருப்பம் இல்லை. அவளது லட்சியம் எல்லாம் பெரிய தொழிலதிபர் ஆவது மட்டுமே. புனிதாவுக்கு தன்னுடைய ஆசையை புரியவைத்து திருமணம் செய்துகொள்ளலாம் என பரத் காத்திருக்கிறான். புனிதாவை போல் திருமண உறவில் விருப்பம் இல்லாத ஒருவர் திருமணத்தை நோக்கி காத்திருக்கும் ஒருவருடன் சேர்ந்து இருக்கும் உறவு வெகு சீக்கிரமாக பிரிந்துவிட வாய்ப்புகள் அதிகம்.

AKS 13 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS 13 | ஆதலினால் காதல் செய்வீர்

குடும்ப உறவுகளை முதன்மையாக நம்பும் இந்திய சூழலில் லிவ்-இன் உறவுகளில் இருந்தாலும் கூட திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளும் உறவுக்குள் நுழையவே பலரும் நினைக்கிறார்கள். லிவ்-இன் உறவு பற்றி ஒரு கதையோ, திரைப்படம், சீரிஸ் வரும்பொழுது பலரும் அது கலாச்சாரத்தை கெடுத்துவிடும், குடும்ப அமைப்பு உடைந்து விடும் என்று அஞ்சுகிறார்கள். உண்மையில் இதற்கெல்லாம் பின்னால் இருப்பது பெண்ணின் சுதந்திரம்தான். சுய வருமானத்தில் இருக்கும் பெண்கள் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பை தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் வாரிசு உருவாக்கி தரமாட்டார்கள் என்கிற அச்சமும், யாருக்கும் அடங்கி நடக்க மாட்டார்கள் என்கிற எண்ணமும் ஆண்களுக்கு இருக்கிறது.

பரத், புனிதாவிடம் நாம் இருவரும் 18 வயது நிரம்பியவர்கள். நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு வாழ்வதற்கு கூட மற்றவர்களை பார்த்து பயப்பட தேவை இருக்கிறது என்று சொல்லி வருந்துகிறான். அதேசமயம் இதுதான் சாக்கு என்று இருவரது வீட்டிலும் தங்கள் காதலை பற்றி சொல்லிவிடலாம் என்றும் கூறுகிறான். புனிதா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறாள்.

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே காயத்ரி புது ப்ராஜெக்ட் டீமில் சேர்த்துக் கொள்ளப்படுகிறாள். ப்ராஜெக்ட் லீடரை சந்திக்கச் செல்லும்போது அங்கு சிவா இருக்கிறான். அவளுக்கு வேலையை ஒதுக்கித் தரும் சிவா, ப்ராஜெக்ட் ஆரம்பிக்க இன்னும் ஒரு வாரம் இருப்பதால் அதுவரையிலும் ஜாலியாக ஹனிமூன் பீரியட் போல எண்ணிக்கொண்டு இருக்காமல் ஏதாவது கற்றுக்கொள்ள இந்த காலத்தை பயன்படுத்திக் கொள் என்கிறான்.

இதைபற்றி புனிதாவிடம் சொல்லும் காயத்ரி, சிவா தன்னை ’Harass’ செய்ததாக புகார் அளிக்க முடியுமா என்று கேட்கிறாள். புனிதா இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள சொல்லி அறிவுரை சொல்கிறாள். சிவா இதுபோன்ற ஒரு வார்த்தையை தனக்கு கீழ் வேலை பார்க்கும் ஒருவரிடம் கூறியது தவறு. அதேபோல் காயத்ரி பொய்யாக சிவா தன்னை ஹராஸ் செய்ததாக புகார் அளிக்க நினைப்பதும் தவறு. நமது சுதந்திரத்தை நிலைநிறுத்திக்கொள்ள கிடைக்கும் உரிமையை அடுத்தவர்களை பழிவாங்க பயன்படுத்துவது சரியல்ல.

காயத்ரி உடை விஷயத்தில் இப்படியே இருப்பாளா அல்லது புனிதாவை போல் இடத்துக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்வாளா?

காத்திருப்போம்!