Published:Updated:

AKS 16 | டாக்ஸிக் சீரியல்களில் இருந்து ‘ஆதலினால் காதல் செய்வீர்' எங்கே வேறுபடுகிறது?!

AKS 16 | ‘ஆதலினால் காதல் செய்வீர்'

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (13-09-2021) வெளியான 16-வது எபிசோட் எப்படி இருந்தது?!

AKS 16 | டாக்ஸிக் சீரியல்களில் இருந்து ‘ஆதலினால் காதல் செய்வீர்' எங்கே வேறுபடுகிறது?!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (13-09-2021) வெளியான 16-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:
AKS 16 | ‘ஆதலினால் காதல் செய்வீர்'

தூக்கக் கலக்கத்தில் சுந்தரிடம் சரியாகப் பேசாமல் காயத்ரி இணைப்பை துண்டித்து விட்டதால் சுந்தர் அவள் வீட்டுக்கு சென்று அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்கிறான். பதற்றத்தில் காயத்ரிக்கு கால் செய்யும் காயத்ரியின் அண்ணனிடம் புனிதா பேசுகிறாள். காயத்ரியை வீடியோ காலில் பேச சொல்வதாகச் சொல்கிறாள். வீடியோ காலில் காயத்ரியை கண்டதும் அவளது அண்ணன், அப்பா, பாட்டி எல்லோரும் பதற்றமாகப் பேசுகிறார்கள். காயத்ரி தனக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் இரவு சரியாக தூங்காததால் காலையில் சற்று அதிக நேரம் தூங்கிவிட்டதாகவும் சொல்கிறாள்.

பேச்சுவாக்கில் சிவாவின் குறட்டை சத்தத்தில் தூங்க முடியவில்லை என்று காயத்ரி சொல்லும்போது அவள் மொத்த குடும்பமும் ”சிவாவா” என்று பதற்றம் அடைகிறார்கள். உடனே இடைமறிக்கும் சுந்தர், அது சிவசங்கரி எனும் பெண்தான் என்றும், அவளை இவர்கள் சிவா என்று அழைப்பதாகவும் சொல்கிறாள். காயத்ரி பெருமூச்சு விடுகிறாள். காயத்ரிக்காக சுந்தர் செய்யும் முதல் உருப்படியான காரியம்(?!) இதுதான்.

AKS 16 | ‘ஆதலினால் காதல் செய்வீர்'
AKS 16 | ‘ஆதலினால் காதல் செய்வீர்'

போன எபிசோடில் குறிப்பிட்டிருந்ததை போலவே காயத்ரிக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் பயந்துபோய் சுந்தர் அதிகாலையிலேயே வீட்டிற்கு நேராக வந்ததை காயத்ரியின் பாட்டி பெருமையாக சொல்கிறார். ”காயத்ரி கொடுத்து வைத்தவள்” என்கிறார். ஒருவேளை காயத்ரிக்கும், சுந்தருக்கும் திருமணமானால் இந்த பேச்சு இப்படியே நிலை பெற்றுவிடும். பின்னாளில் காயத்ரிக்கு என்ன பிரச்னை நடந்தாலும் அவள் குடும்பம் முதலில் சுந்தரின் பேச்சைத்தான் நம்பும்.

இறுதிவரை ஒருவர் கூட காயத்ரிக்கு உடல்நிலை சரியில்லாததாக சுந்தர் கூறியதைப் பற்றி அவனிடம் மறுகேள்வி கேட்கவே இல்லை. இதுதான் நிஜ வாழ்க்கையிலும் நம் குடும்பங்களில் நடக்கும். சுந்தர் கூறியது பொய் என்று யோசிக்காமல் அதை காயத்ரியின் மீதிருந்த அக்கறை என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுந்தரை பற்றி காயத்ரியின் வீட்டில் பெருமையாக பேசும்போது ஒரு மாறுதலுக்கு இதேபோல் மாப்பிள்ளை வீட்டுக்குப் பெண் கிளம்பி போயிருந்தால் என்னவாகியிருக்கும் என்கிற யோசைனையும் வருகிறது. மாப்பிள்ளை வீட்டினர், ‘வரப்போகிற மருமகள் இப்போதே தங்கள் பையன் மீது இவ்வளவு அன்பாக இருக்கிறாள்’ என்றுதானே புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அப்படி நினைக்க மாட்டார்கள். வரப்போகும் மருமகள், “இப்போதே இப்படி நடிக்கிறாள், நம் பையனை கைக்குள் வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறாள்” என்றோ, ”நம் வீட்டிற்கு வருவதற்கு முன்பே அதிக உரிமை எடுத்துக் கொள்கிறாள்” என்றோதான் பெரும்பாலானோர் பேசுவார்கள். ஆனாலும் இன்று பல குடும்பங்களில் நிலைமை மாறிக்கொண்டிருப்பது சிறிது நம்பிக்கை அளிக்கிறது.

காயத்ரிக்கு உடல்நிலை சரியில்லை என்று சுந்தர் சொன்னதை வைத்து வயிற்றுவலி இருக்கிறதா என்றும், மாதவிடாய் நாளுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறதே என்றும் காயத்ரியின் அண்ணி காயத்ரியிடம் கேட்கிறாள். அந்த அக்கறையை கண்டு புனிதா கேலியாக சிரிக்கிறாள். இந்த அக்கறை சிறிது ஓவர் டோசை போல் தெரிந்தாலும் இத்தகைய அக்கறை சகோதரர்களின் மனைவிகளிடம் இருந்து வருவது அரிது. காயத்ரி தன்னுடைய அண்ணி தனக்கு ஒரு அம்மாவைப் போல் இருப்பதாக ஏற்கனவே சொல்லி இருப்பாள். மிகக் குறைந்த வயது வித்தியாசத்தில் இருக்கும் இரண்டு பெண்களில் ஒருவர் இன்னொருவரை தனது சொந்த தங்கையாக, மகளாக பார்ப்பது ஆரோக்கியமான விஷயம்.

AKS 16 | ‘ஆதலினால் காதல் செய்வீர்'
AKS 16 | ‘ஆதலினால் காதல் செய்வீர்'
பெண்களை பெண்களே கொடுமைப்படுத்தும் டாக்ஸிக் தொலைக்காட்சி சீரியல்களுக்கு மத்தியில், டிஜிட்டல் சீரிஸில் குடும்பத்திற்குள்ளே பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக, பிரியமாக இருப்பது போன்ற காட்சிகள் வரவேற்கத்தக்கது.

இந்த களேபரங்களுக்கு மத்தியிலும் சுந்தர் காயத்ரியின் வீட்டுக்கு வந்ததை சுட்டிக்காட்டி காயத்ரியின் அண்ணி தனது கணவரிடம், “பாருங்க ஊர், உலகத்துல எப்படி இருக்காங்க... நீங்களும்தான் இருக்கீங்களே” என்பதை ஒற்றை முகச்சுளிப்பில் சொல்லிவிடுவது அருமை.

காலையில் அலுவலகம் கிளம்பும் நேரம் இரவு சிவா குறட்டை விட்டதை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். சிவா தான் குறட்டை விட்டதை நம்பாமல் ஆச்சர்யமாக கேட்கிறான். அவன் கோபப்படக்கூடாது என்று நினைத்து புனிதா அவசரமாக, ’இது மிக சாதாரணம்தான், தினசரி பழக்க வழக்கங்களில் மாற்றம் வரும்போது குறட்டை வருவது சகஜம், பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை’ என்கிறாள். கவிதா அவன் குறட்டை விட்டது ராகத்துடன் பாடியது போல இருந்ததாகச் சொல்கிறாள். சிவாவின் குறட்டையில் ராகங்களும் இடையில் ’கஸல் டச்’ இருந்ததாகவும், அதை கேட்டு கவிதா சிவாவின் குறட்டைக்கு விசிறி ஆகிவிட்டதாகவும் சொல்கிறாள்.

எல்லோரும் அவன் கவிதாவை திட்டுவான் என்று எதிர்பார்த்திருந்த நேரம் சட்டென்று சிரிக்கும் சிவா, கவிதாவின் ஆட்டிட்யூட் பிடித்திருப்பதாக சொல்கிறான். எல்லோரும் சந்தோஷமாக சிரிக்கிறார்கள். ஆனால் கவிதா சிவாவை கலாய்க்கும்போது மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி, பதிலுக்கு சிவா கவிதாவை பாராட்டும்போது முகம் வாடிப் போகிறாள்.

பரத்தை ப்ரோ என்று விழிக்கும் கவிதா சிவாவிடம் பேசும்போது அவனையும் ப்ரோ என்று அழைத்து விடுவாளோ என்று பதற்றத்துடன் இருக்கையில், கவிதா அவனை, ”சார்” என்று அழைத்து பின்பு ”தல” என்று சொல்லி நம்மை ஆசுவாசப்படுத்துகிறாள். சிவாவும் அவளை பிடித்திருக்கிறது என்று சொல்கிறான். சிவாவுக்கு கவிதாவின் மீது காதல் மலருமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அலுவலகத்தின் முதல்நாள் காயத்ரியை வீடியோ காலில் பார்க்கும் சுந்தர், அவள் எங்கே சென்றாலும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே இருப்பதற்கு பாராட்டு சான்றிதழ் கொடுக்கிறான். காயத்ரி இறுதிவரை அப்படியே இருக்கப்போகிறாள் என்று நம்பிக்கொண்டிருக்கும் சுந்தருக்கும், நமக்கும் இரண்டாவது நாளே ஷாக் கொடுக்கிறாள் காயத்ரி. தன் ஜிமிக்கி, சடை பின்னல், பூ, கொலுசு எல்லாவற்றையும் விட்டுவிட்டு லூஸ்ஹேரில் மாடர்னாக மாறிவிடுகிறாள். தன்னுடைய மாற்றம் சரியாக இருக்கின்றதா அல்லது இன்றும் எல்லோரும் கேலி செய்வார்களா என்கிற யோசனையில் கிளம்புகிறாள் காயத்ரி. கவிதா காயத்ரியிடம், ”நாம் மற்றவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை, நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும்” என்று சொல்கிறாள்.

அலுவலகத்தில் காயத்ரியை ஆண்கள் எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர். சிவாவும் காயத்ரியை கண்டு ஓரிரு விநாடி ஆச்சரியப்பட்டு பின் கவனிக்காதது போல பேசுகிறான்.

AKS 16 | ‘ஆதலினால் காதல் செய்வீர்'
AKS 16 | ‘ஆதலினால் காதல் செய்வீர்'

ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் மற்றவர்களுக்காக மாறிக்கொண்டே இருந்து, ஒரு கட்டத்தில் திரும்பி பார்த்தால், நம் வாழ்க்கை முழுவதும் மற்றவர்கள்தான் இருந்திருப்பார்கள். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசித்துக்கொண்டே இருந்தால் வாழ்வில் நிம்மதி, மகிழ்ச்சி எதுவுமே இருக்காது. நாம் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல் நம்மை மாற்றிக் கொள்வது நல்ல விஷயம்தான் என்றாலும் அந்த மாற்றம் நமக்கும் கம்ஃபர்ட்டபிளாக இருக்க வேண்டும். நமக்கு பிடிக்காத ஒன்றாக மற்றவர்களுக்காக மாறிக் கொள்ளும்போது அந்த மாற்றம் நிரந்தரமாக இருக்காது.

காயத்ரி வேலை நேரத்தில் மேசையில் படுத்திருப்பதை சிவா காண்பதோடு இன்றைய எபிசோட் முடிகிறது. சிவா காயத்ரியை எல்லோர் முன்னிலையிலும் திட்டுவானா? அல்லது காலையில் காயத்ரியின் மாற்றங்கள் அவனிடம் ஏற்படுத்திய இரண்டு வினாடி ஆச்சர்யத்தின் பாதிப்பால் தன்மையாக பேசுவானா?

காத்திருப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism