Published:Updated:

AKS - 22 | ‘’இதுதான் கிராமத்து வளர்ப்பா?’’... பரத்தின் கேள்வியும், காயத்ரியின் கதவடைப்பும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
AKS - 22 | அதலினால் காதல் செய்வீர்
AKS - 22 | அதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (21-09-2021) வெளியான 22-வது எபிசோட் எப்படி இருந்தது?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிவா சொல்லும் புதிய வேலைக்கு செல்வதாக ஒப்புக்கொண்ட கவிதா, பாண்டியனிடம் முதல் மாத சம்பளம் வாங்கியதும் அவன் தனக்கு செலவு செய்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவதாக சவால் விடுகிறாள்.

காலையில் அலுவலகத்துக்கு புனிதாவும் காயத்ரியும் இருசக்கர வாகனத்தில் வருகிறார்கள். புனிதா நகரத்தில் வாகனம் ஓட்டுவதை பார்த்து வியந்து அவள் நன்றாக ஓட்ட கற்றுக் கொண்டதாக பாராட்டுகிறாள் காயத்ரி. புனிதா, தான் ஆரம்பத்தில் வாகனம் ஓட்டிப் பழகும்போது மிகவும் சிரமப்பட்டதாகவும், சிறு சிறு விபத்துகள் நேர்ந்ததை பற்றியும் காயத்ரியிடம் சொல்கிறாள். ஆனால் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து வாகனம் ஓட்டக் கற்றுக் கொண்டேன் என்கிறாள்.

AKS - 22 | அதலினால் காதல் செய்வீர்
AKS - 22 | அதலினால் காதல் செய்வீர்

பெண்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்வது இன்றியமையாததாகிவிட்டது. வேலைக்கு செல்லும், தொழில் செய்யும் பெண்களுக்கு வாகனம் வாங்க தமிழ்நாடு அரசு மானியம் கொடுத்து பெண்களின் பொருளாதார சுதந்திரத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆனால், இன்றும் கீழே விழுந்து அடிபட்டு விட்டால் உடலில் தழும்பு ஏற்படும் என்று பெண் பிள்ளைகளை சைக்கிள் ஓட்ட அனுமதிக்காத பெற்றோர்களும் இருக்கிறார்கள்.

சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது பெண் சுதந்திரத்துக்கான வழிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் பெண்கள் வெகு தூரம் பயணம் செய்து கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் முன்பு சைக்கிளும் பிறகு ஸ்கூட்டர்களும் பெரும் உதவியாக இருந்திருக்கின்றன. ஸ்கூட்டி போன்ற லைட்வெயிட் ஸ்கூட்டர்கள் வந்த பிறகு அதிக அளவில் பெண்கள் வாகனங்கள் ஓட்டக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். நடுத்தரக் குடும்பங்களில் பெண்கள் ஸ்கூட்டர் பயன்படுத்த ஆரம்பித்து 20 வருடங்கள் ஆகின்றன.

ஆனால், இன்னமும் பெண்களுக்கு வாகனம் ஓட்ட தெரியாது, சாலை விதிகள் தெரியாது, வாகனம் ஓட்டும் போது தங்கள் முகம் மற்றும் ஆடைகளில் கவனம் செலுத்துவார்கள், அதனால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்று பல்வேறு குற்றச்சாட்டுகளும் பெண்கள் மீது வைக்கப்படுகின்றன. மற்றவர்களின் கேலிப் பேச்சுகளை கேட்டு பலரும் வாகனம் ஓட்டுவதை பாதியில் விட்டுவிடுகின்றனர் அல்லது சிறு விபத்து ஏற்பட்டாலும் அதில் பயந்து வாகனம் ஓட்டுவதை கைவிடுகிறார்கள்.

AKS - 22 | அதலினால் காதல் செய்வீர்
AKS - 22 | அதலினால் காதல் செய்வீர்

புனிதா கூறியதுபோல வாகனம் ஓட்ட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் யார் என்ன சொன்னாலும் அதைக் காதில் வாங்காமல் முறையாக பயின்று தைரியமாக ஓட்ட வேண்டும். அலுவலகத்துக்கு வந்ததும் புனிதா காயத்ரியிடம் ஃபைல் ஒன்றை வண்டியில் மறந்து வைத்துவிட்டு வந்து விட்டதாகவும் அதை எடுத்து வரும்படியும் கூறுகிறாள்.

வாகனங்கள் நிறுத்தும் இடத்துக்கு செல்லும் காயத்ரி அங்கே சிலர் சிவாவை கட்டையால் அடிப்பதை பார்க்கிறாள். அவர்களிடமிருந்து தப்பித்து லிஃப்ட் பக்கமாக சிவா ஓடி வருகிறான். ஏற்கனவே லிஃப்டுக்குள் இருக்கும் காயத்ரி லிஃப்ட்டின் கதவை வேகமாக மூடி விடுகிறாள். சிவா அவர்களிடம் மீண்டும் மாட்டிக்கொள்கிறான்.

அலுவலகத்துக்கு வந்து பயத்தில் தண்ணீர் குடித்துவிட்டு புனிதாவிடம் அவசரமாக சிவாவை யாரோ சிலர் அடிப்பதை பற்றி சொல்கிறாள். கூடவே தான் லிஃப்ட்டின் கதவை மூடி விட்டதையும் குற்றவுணர்ச்சியில் கூறுகிறாள். புனிதா அவளை கடிந்து கொள்கிறாள். அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் சிலரை அழைத்துக்கொண்டு புனிதா வேகமாக சிவா இருக்கும் இடத்திற்கு ஓடுகிறாள். சிவாவை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்கிறாள். உடன் பதற்றத்துடன் காயத்ரியும் ஆம்புலன்ஸில் செல்கிறாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பரத் காயத்ரியை திட்டுகிறான். “நீ ஏதோ அவன்மேல் வெறும் கோபமா இருக்குறன்னு நினைச்சேன்... இவ்ளோ வன்மம் வெச்சிருப்பன்னு தெரியாது... இதுதான் உன்னோட கிராமத்து வளர்ப்பா?” என்று காயத்ரியை பார்த்து பரத் பேசுகிறான். புனிதா அவனை தடுக்கிறாள். சிவா அடிபட்டு கிடப்பதே காயத்ரிக்காகத்தான் என ஏற்கனவே உணவகத்தில் நடந்த சண்டை பற்றி பரத் சொல்லுகிறான். காயத்ரி தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறாள்.

இது தமிழ் சினிமாவின் முரட்டு கதாநாயகனுக்கும் அவனிடம் சண்டைக்கோழியாய் நடந்துகொள்ளும் கதாநாயகிக்கும் இடையில் காதல் மலர்வதற்கு பயன்படுத்தும் Traditional Template. கதாநாயகன் யாருடனாவது சண்டைப் போட்டு அடிப்பான். கோபமாக இருக்கும் கதாநாயகியிடம் யாராவது வந்து உனக்காக சண்டை போட்டுத்தான் அவனுக்கு அடி பட்டிருக்கிறது என்று சொல்வார்கள். உடனே கதாநாயகிக்கு காதல் வந்துவிடும். ஆனால், இங்கே காயத்ரிக்கு காதல் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

AKS - 22 | அதலினால் காதல் செய்வீர்
AKS - 22 | அதலினால் காதல் செய்வீர்

காயத்ரி முதலில் லிஃப்டை மூடினாலும் பிறகு திறந்து சிவாவை காப்பாற்றுவாள் என்று எண்ணினேன். காயத்ரி கோபமாக லிஃப்டை மூடி சிவாவை அடிவாங்க விட்டது அதிர்ச்சியாக இருந்தது. யாருமே செய்யத் துணியாத காரியம்... அதை ஒரு இளம்பெண் எப்படி செய்யமுடியும் என்று நினைக்கையில் காயத்ரியைபோல் நிஜவாழ்க்கையில் கண்டிருந்த சிலர் கண்முன் வந்து போனார்கள். அதன்பின் அதிர்ச்சி குறைந்து மனிதர்கள் இவ்வளவு கீழ்மையாக நடந்துகொள்ளக் கூடியவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்ள முடிந்தது.

ஒருவருக்கு பெரும் துரோகம் இழைப்பவர்கள், தோல்விகளுக்கு காரணமாக இருப்பவர்கள் பெரும்பாலும் குடும்பம், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று அதுவரையில் உடன் இருந்தவர்களாகத்தான் இருப்பார்கள். உண்மை தெரியவந்து ஒரு கட்டத்தில் அவர்கள் உறவே வேண்டாம் என்று வெறுத்து பேச்சை நிறுத்திக் கொண்டாலும்கூட வாழ்வில் எப்போதாவது அவர்களுக்கு விபத்து போன்ற பிரச்னைகள் நடக்கும்போது சாதாரண மனிதர்களால்கூட அதை பார்த்துக்கொண்டு எளிதாக கடந்து செல்ல முடியாது. முதல் ஆளாய் உதவி செய்வார்கள்.

நகரங்களில் யாரும் யாருடனும் பேச மாட்டார்கள், மற்றவர்களுக்கு உதவ மாட்டார்கள் எனும் பிம்பங்களை 80 மற்றும் 90-களில் வந்த தமிழ் சினிமாக்கள் உருவாக்கியிருக்கின்றன. கிராமங்களில் மட்டுமே ஒருவருக்கொருவர் அனுசரணையாக, உறவாக இருப்பார்கள் என்று கிராமங்களை ரொமான்ட்டிசைஸ் செய்து சொர்க்க பூமி போல் ஒரு மாய பிம்பம் கட்டப்பட்டிருக்கிறது.

AKS - 22 | அதலினால் காதல் செய்வீர்
AKS - 22 | அதலினால் காதல் செய்வீர்

உண்மையில் கிராமங்களில்தான் சாதிய பிரச்னை முதற்கொண்டு சிறு சிறு பிரச்னைகளுக்கும் கூட அடிதடியில் ஈடுபடுகிறார்கள். நகரங்களில் எந்த உறவு முறையும் இல்லாவிட்டாலும்கூட ஒருவருக்கொருவர் உறவாய் இருந்து உதவி செய்வதை அனுபவத்தில் பார்த்திருக்கிறோம்.

காயத்ரியை பார்க்கும் போது அமைதியாக சிரித்துப் பேசும் கிராமத்து வெள்ளந்தி பெண்ணாக தெரிந்தாலும் அவளுக்குள் சிவாவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்கிற வன்மம் இருந்துக் கொண்டே இருந்திருக்கிறது. பொதுமைப்படுத்துவதில் உடன்பாடு இல்லை என்றாலும் காயத்ரி லிஃப்ட்டை மூடும்போது நகரத்து பெண்ணாக இருந்திருந்தால் இவ்வாறு செய்திருக்க மாட்டாள் என்று தோன்றாமல் இல்லை.

காயத்ரி உண்மையிலேயே மனம் திருந்துவாளா? சிவா காயத்ரி செய்த தவறை மன்னிப்பானா?

காத்திருப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு