Published:Updated:

AKS - 24 |பெண்கள் என்ன பேசினாலும் ஆண்கள் தலையாட்டுவார்களா… காயத்ரி சிவாவிடம் எதிர்பார்ப்பது என்ன?

AKS - 24 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (23-09-2021) வெளியான 24-வது எபிசோட் எப்படி இருந்தது?!

AKS - 24 |பெண்கள் என்ன பேசினாலும் ஆண்கள் தலையாட்டுவார்களா… காயத்ரி சிவாவிடம் எதிர்பார்ப்பது என்ன?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (23-09-2021) வெளியான 24-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:
AKS - 24 | ஆதலினால் காதல் செய்வீர்

புனிதா சிவாவுக்கும், பரத்துக்கும் உடைகளை கவிதாவிடம் கொடுத்து அனுப்புகிறாள். காயத்ரி தானும் கவிதாவுடன் மருத்துவமனைக்கு செல்ல புனிதாவிடம் அனுமதி கேட்கிறாள். பரத் காயத்ரியின் மீது கடுமையான கோபத்தில் இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு புனிதா அலுவலகத்துக்கு புறப்படுகிறாள். கவிதா காயத்ரியிடம், தான் அழைத்து போவதாக சொல்கிறாள். தான் சொன்னால் சிவா கேட்பார் என்றும் சிவாவை எப்படி சமாளிப்பது என்று தனக்கு தெரியும் என்றும் சொல்லி அழைத்துச் செல்கிறாள்.

அம்மாக்கள் சீரியல் பார்க்கும் போது பேசுவதை போல ”ஹாஸ்பிடல் போய் கவிதா சிவாவிடம் நல்லா வாங்கி கட்டப் போறா” என்ற நினைப்பும் அதேபோல் காயத்ரிக்கு ஆதரவாக பேசும் கவிதாவை சிவா திட்டும் போது ஒரு குரூர மகிழ்ச்சியும் வராமல் இல்லை. (நீயும் காயத்ரியை போல் ஆகிக்கொண்டிருக்கிறாய் என்று இடையில் புகுந்து எச்சரிக்கிறது மைண்ட் வாய்ஸ்).

AKS - 24 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 24 | ஆதலினால் காதல் செய்வீர்

உயிருக்கு ஆபத்து வரும் நிலையில்கூட பழிவாங்கும் ஒருத்தியை ஒரே நாளில் மன்னித்து விடவேண்டும் என்று கவிதா எதிர்பார்ப்பது அவளது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

நம் வீட்டில் குழந்தைகள் ஐந்தாறு வயதில் பத்து, பன்னிரண்டு வயது பிள்ளைகளைப் போல சில விஷயங்களில் நடந்து கொள்வார்கள். அதேபோல் பன்னிரண்டு, பதினாங்கு வயதில் இருபது வயதினரை போல நடந்து கொள்ளும் பிள்ளைகளும் உண்டு. ஏதாவது ஒரு கட்டத்தில் பெரிய விஷயங்களில் முடிவு எடுக்கும்போது அவர்களின் குழந்தைத்தன்மை வெளிப்பட்டுவிடும். அவர்கள் அதுவரை பேசிய அறிவு புரிதலினால் இல்லை என்றும் பெரியவர்கள் பேசியது மற்றும் தொலைக்காட்சிகளில் கேட்டு அப்படியே ஒப்புவித்தது மட்டுமே என்கிற உண்மை வெளிவந்து விடும். ஆனாலும் அவர்கள் குழந்தைகள் என்பதால் நம்மால் அதை ரசிக்க முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கவிதாவுக்கு இதுவரையிலும் இருந்த மனமுதிர்ச்சி என்பதும் கிட்டத்தட்ட அந்த குழந்தைகளை போலத்தான். ஆனால் கவிதா சிவாவிடம் காயத்ரியை மன்னிக்கும்படி சொல்வதை ரசிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தில் சிவாவின் இடத்திலிருந்து கவிதா யோசிக்கவே இல்லை. கவிதாவுக்கு எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கும் ஆர்வக்கோளாறு மட்டுமே இருப்பதாக இந்த காட்சியில் தோன்றுகிறது.

”கொஞ்சம் சிரித்து பேசினால் உடனே உரிமை எடுத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா, பொண்ணுங்க சிரித்துப் பேசினால் ஆண்கள் தலையாட்ட வேண்டுமா” என்று சிவா கவிதாவிடம் கேட்கிறான். இரண்டு முறை கவிதா பேசியதற்கு சிவா சிரித்தவுடன், தான் என்ன சொன்னாலும் சிவா கேட்பான் என்கிற முடிவுக்கு கவிதா வந்து விடுகிறாள்.

AKS - 24 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 24 | ஆதலினால் காதல் செய்வீர்

பெண்கள் பேசினால் ஆண்கள் தலை ஆட்டுவார்கள் என்பதெல்லாம் திரைப்படங்களும், சமூக வலைதளங்களும் உருவாக்கி வைத்தது. நிஜ வாழ்க்கையில் அவை சாத்தியமாக இருந்தால் பெண்ணுரிமை, பெண்ணியம் என்று யாரும் இவ்வளவு போராட வேண்டிய தேவை இருந்திருக்காது. ஆண்களிடம் பேசியே புரிய வைத்துவிடலாம். ஆனால் இதையெல்லாம் பெண்கள் அனுபவப்பட்டு புரிந்து கொள்ள பல வருடங்கள் ஆகிவிடுகிறது.

கவிதாவின் மனமுதிர்ச்சி புரிதலினால் உண்டானது இல்லை என்பதற்கு இன்னொரு உதாரணம், பாண்டியனிடம் கவிதா, மருத்துவமனையில் நடந்ததை பற்றி கூறும் காட்சி.

சிவா தன்னை மிக மோசமாக திட்டி விட்டான் என்றும் அவனை லிஃப்ட்டுக்குள் ஏற விடாமல் காயத்ரி செய்தது சரிதான் என்றும் கோபத்தில் சொல்கிறாள். உயிர்போகும்படி அடிவாங்கும் நேரத்தில்கூட பழிவாங்கும் காயத்ரியை உடனே சிவா மன்னித்துவிட வேண்டும் என எதிர்பார்க்கும் கவிதா, சிவா தன்னை அறையை விட்டு வெளியே போகச் சொன்னதற்காக இவ்வளவு கோபப்படுகிறாள். அதாவது காயத்ரிக்கும், கவிதாவுக்கும் தங்களை யாராவது திட்டினால் அவர்கள் ரத்தம் வரும்வரை அடி வாங்க வேண்டும் என்பதுதான் மனதில் இருக்கிறது.

காயத்ரி செய்தது தவறு என்று முதல் நாள் அவள் மேல் கோபப்படுகிறாள் கவிதா. தான் இதுவரை மனமுதிர்ச்சியுடைய பெண்ணாக, எல்லாவற்றையும் ’ஈசியாக’ எடுத்துக் கொள்ளும் பெண்ணாக காட்டிக்கொண்ட கவிதாவும் இறுதியில் தனக்கு ஒரு பிரச்னை என்று வரும்போது காயத்ரியின் முடிவைத் தான் எடுக்கிறாள். இவ்வளவுக்கு பிறகும் கவிதா சிவாவுக்கு காயத்ரியை மன்னிக்கும் மனிதத்தன்மையும், மன முதிர்ச்சியும் இல்லை என்று அவனை குறை சொல்கிறாள். ஆனால் சிவா திட்டிய உடன் அவனுக்கு அடிப்பட்டது சரிதான் என்கிறாள் கவிதா. தனக்கு வந்தாள் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி கதைதான்.

AKS - 24 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 24 | ஆதலினால் காதல் செய்வீர்

காயத்ரி தான் செய்த தவறின் குற்ற உணர்ச்சியிலிருந்து ஒரே நாளில் வெளிவர வேண்டும் என எண்ணுகிறாள். சிவாவிடம் மன்னிப்பு கேட்டால் தான் தன்னுடைய மனம் ஆறுதல் அடையும் என்கிறாள். ஒருவர் சாகும் அளவு அடிபட்டு கிடக்க ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்துவிட்டு, அடிபடும்போது தப்பிச் செல்ல விடாமல் வேண்டுமென்றே கதவுகளை அடைத்துவிட்டு, இப்போது உயிர் பிழைத்தவனிடம் மன்னிப்பு கேட்டால் தான் தன் மனம் ஆறும் என்று சொல்லும் காயத்ரியிடம் இருப்பது முழுக்க முழுக்க சுயநலம் அன்றி வேறில்லை.

மனிதர்கள் இவ்வளவு சுயநலமாக இருக்கிறார்களா என்கிற சலிப்பு ஏற்படுகிறது. பொதுவாக நம்மால் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் நம்மீது கோபமாக பேசாமல் அல்லது போனில் நமது அழைப்பை ஏற்காமல் இருந்தால், நாம் செய்த தவறுக்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்டால் தான் மனம் ஆறும் என்பது போல தோன்றும். மேலோட்டமாக பார்த்தால் நமது தவறை உணர்ந்துதான் நாம் மன்னிப்பு கேட்கிறோம் என்றும் மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்பு கேட்கறவன் பெரிய மனுஷன் என்றெல்லாம் நம்மை நாமே நினைத்துக் கொள்வோம்.

ஆனால், அவர்களுக்கு நம்மால் ஏற்பட்ட பாதிப்பு எதுபற்றியும் நாம் யோசிப்பதில்லை. நம் எண்ணம் முழுக்கவும் நாம் கெட்டவர் இல்லை என்று நிரூபிப்பதிலேயே தான் இருக்கும்.

AKS - 24 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 24 | ஆதலினால் காதல் செய்வீர்

இவையெல்லாம் சாதாரண வாய் வார்த்தை பிரச்னைகளுக்கு சரியாகப்படலாம். ஆனால் உயிர் போகும் அளவுக்கு ஆபத்து உள்ள அடிதடி பிரச்னையில் தப்பிக்க விடாமல் கதவை அடைத்து சிவாவை மரணத்தை தொட்டு பார்க்க வைத்துவிட்டு அடுத்த நாளே வந்து மன்னிப்பு கேட்டால் மனம் ஆறும் என்று காயத்ரி சொல்வதிலேயே அவள் செய்த தவறுக்கு வருந்தி திருந்தவில்லை என்பது தெரிகிறது. தான் நல்லவள் என்று குறைந்தபட்சம் தன்னுடைய மனசாட்சியை நம்ப வைக்கவே அவ்வாறு செய்கிறாள்.

தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்கும் போதெல்லாம் உண்மையில் மனம் திருந்தி மன்னிப்பு கேட்கிறோமா அல்லது அந்த நேரத்தில் ”ஃபார்மாலிட்டிக்காக” மன்னிப்பு கேட்கிறோமா என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள ஒரு திரைப்படம் நினைவில் வரும்.

The Shawshank Redemption!

சிறுவயதில் அறியாமல் செய்த தவறுக்காக 40 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்த பின்னரும் அந்த தவறுக்காக இன்னமும் வருத்துவதாக ’ரெட்’ கதாபாத்திரத்தில் இருக்கும் மார்கன் ஃப்ரீமேன் பரோல் போர்டில் உள்ளவர்களிடம் கூறுவார். தன் தவறை உணர்ந்து அதற்காக மனதார வருந்துபவன், தண்டனையை ஏற்றுக்கொள்ளவே செய்வான். மன்னிப்பு கேட்டால் மனம் ஆறும் என்று தன் மனதை சமாதானப்படுத்துவதில் குறியாக இருக்க மாட்டான்.

காயத்ரியும் சிவாவும் இனி ஒரே வீட்டில் இருப்பார்களா, பரத் மற்றும் சிவாவை காயத்ரி எப்படி எதிர்கொள்வாள்?

காத்திருப்போம்!