Published:Updated:

AKS - 31 | திருமணத்துக்கு முன்பான ஆண்களின் அக்கறையும், திருமணத்துப் பிறகான அலட்சியமும் ஏன்?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
AKS - 31 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 31 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (04-10-2021) வெளியான 31-வது எபிசோட் எப்படி இருந்தது?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிவாவும், காயத்ரியும் வீட்டிலிருந்தே ப்ராஜெக்ட் வேலையை செய்யத் தொடங்குகிறார்கள். சிவாவின் அறைக்கு வேலை செய்ய காயத்ரி வரும்போது சிவா புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறான். அதை பார்த்ததும் காயத்ரி திரும்பிச் செல்ல எத்தனிக்கிறாள். சிவா சிகரெட்டை அணைத்து விட்டு காயத்ரியை உள்ளே வருமாறு அழைக்கிறான். காயத்ரி சிவாவிடம் ஏன் மீண்டும் புகைப்பிடிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று கேட்கிறாள். சிவா அமைதியாக இருக்கவே தான் தன்னுடைய எல்லையை கடந்து பேசுவதாக சொல்லி மன்னிப்பு கேட்கிறாள்.

சிவா சில நாட்களாக வீட்டிலேயே இருப்பதால் ஒரு வெறுமை இருப்பதாகவும் அதனால் புகை பிடித்ததாகவும் கூறுகிறான். காயத்ரி அவனிடம் காரணங்கள் கையில் இருந்தால் நியாயப்படுத்த தோன்றும் என்கிறாள். சிவா சற்று யோசித்துவிட்டு இனிமேல் தான் எப்போதும் புகைப்பிடிக்க மாட்டேன் என்று காயத்ரியிடம் உறுதி கூறுகிறான்.

AKS - 31 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 31 | ஆதலினால் காதல் செய்வீர்

சிவா மனநல மருத்துவர் கூறிய எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பின்பற்றிக் கொண்டுவருகிறான். புகைப்பிடிக்கும் பழக்கத்தை முழுமையாக விட்டிருந்த சிவா தனிமையில் ஒரே இடத்தில் அடைந்து கிடப்பதால் மீண்டும் அதைத் தொடர நினைக்கையில் சரியான சமயத்தில் காயத்ரி அவனுக்கு பழைய விஷயத்தை ஞாபகப்படுத்துகிறாள்.

முதன்முதலில் டாக்ஸியில் ஒன்றாக வரும்போது சிவா சிகரெட்டை முகர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, அவன் புகை பிடிக்கிறான் என்று ஓட்டுனரிடம் தவறாக புகார் செய்து அவனை டாக்ஸியை விட்டு இறங்க செய்திருப்பாள் காயத்ரி. பிறகு இரண்டாவது முறை எல்லோரும் புனிதாவின் பார்ட்டிக்கு சென்று விட்டு டாக்ஸியில் திரும்பும்போதும், தனக்கு சிகரெட் மனம் பிடிக்காததால் வேறு காரில் வருவதாக கூறி பிரச்னை செய்து அப்போதும் சிவாவை கீழே இறங்கச் செய்தாள்.

அப்படி இருந்த காயத்ரி, இன்று சிவாவின் அறைக்கு வந்து அவன் புகைப் பிடிப்பதை பற்றி எரிச்சல் அடையாமல் பொறுமையாக, ‘இதை விட்டு விடலாமே’ என்று புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடச் சொல்லி பேசுவது மிகப் பெரிய மாற்றம். ஆனால் காயத்ரிக்கு சிவா மீது அக்கறையும், இந்த மாற்றமும் வருவதற்கு சிவா ஐந்தாறு பேரிடம் அடி வாங்கி காலில் கட்டுப் போட்டு வீட்டில் இருக்க வேண்டியிருக்கிறது.

சிவா அறையில் அடைந்து கிடப்பதால் தனக்கு மீண்டும் புகைப்பிடிக்கும் பழக்கம் தொடங்கியது என்று சொன்னதும் காயத்ரி ஒரு வாக்கர் ஏற்பாடு செய்து குறைந்தபட்சம் சிவாவை வீட்டைச் சுற்றி நடக்கச் செய்வாள் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.

AKS - 31 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 31 | ஆதலினால் காதல் செய்வீர்

இதுவே காயத்ரிக்கு காலில் அடிப்பட்டிருந்தால், இந்நேரம் வாக்கர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதோடு காயத்ரியை காரில் ஏற்றி பூங்கா, கடற்கரை என அழைத்துச் சென்று, ஐஸ்கிரீம், மக்காச்சோளம் வாங்கி கொடுத்திருப்பான் சிவா. ஆனால் ’நமக்கு என்ன போச்சு’ என்று காயத்ரி சிவாவை கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டு, ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா’ என்று கடுப்பில் புலம்புகிறது நம் மைண்ட்வாய்ஸ்.

இது போன்ற விஷயங்களில் எல்லாம் ஆண்களே தேவை அறிந்து சிந்தித்து செயல்படுகிறார்கள். நிற்க! இவையெல்லாம் நட்பு, காதல் வரையில்தான். திருமணமான பின்பு ஆண்களின் இந்த அக்கறையை அகழ்வாராய்ச்சி வல்லுநர்களை வைத்து தேடிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

காயத்ரி நன்றாக வேலை செய்திருக்கிறாள் என்று சிவா பாராட்டும்போது, காயத்ரி அதற்குத்தானே சம்பளம் கொடுக்கிறார்கள் என்று முன்பு சிவா சொன்னதை சொல்லி குத்திக் காட்டுகிறாள். ஆனால் சிவா மிகப் பொறுமையாக காயத்ரியிடம் பேசுகிறான். அவள் சொல்வதற்கெல்லாம் சிரித்துக் கொள்கிறான். அதை வியந்து சிவாவின் உள்ளிருக்கும் குழந்தைத்தனம் பற்றி காயத்ரி புனிதாவிடம் பேசுகிறாள்.

சிவா படிக்கும் புத்தகங்கள் பற்றியும் சொல்கிறாள். புனிதாவுக்கு காயத்ரிக்கு சிவாவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று புரிகிறது. ”இப்பொழுதெல்லாம் நீ சுந்தரை பற்றி பேசுவதை விட சிவாவை பற்றித்தான் அதிகம் பேசுகிறாய்” என்ற புனிதா சொல்லும்போது காயத்ரி அதிர்ந்து மறுக்கிறாள். அப்படி பேச வேண்டாம் என்கிறாள். புனிதா சென்று விட காயத்ரிக்கு குழப்பமாக இருக்கிறது. காயத்ரிக்கு சுந்தருடன் நிச்சயம் முடிந்திருந்தாலும் அவன் அவள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

பிக் பாஸ் - 2|வெப்சீரிஸ்னா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மொபைல்ல வருமே… வெள்ளந்திகளும், உவ்வேக் ஜோக்குகளும்!
AKS - 31 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 31 | ஆதலினால் காதல் செய்வீர்

ஒருவரை பார்த்து பேசி, புரிந்து பின்பு திருமணத்துக்கு தயாராக வேண்டும். பார்த்ததும் காதல் வரலாம், ஆனால் பார்த்ததும் அவசரப்பட்டு திருமணம் செய்து கொள்வது எளிதல்ல. ஏற்பாட்டு திருமணங்களை விமர்சனம் செய்யும்போது பலரும் இவ்வளவு ஆண்டு காலமாக முன்னோர்கள் வாழவில்லையா என்கிறார்கள். பாட்டிகளும் அம்மாக்களும் பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு பிடிக்காத திருமணங்களில் அடிமையாக மன உளைச்சலோடு வாழ்ந்தார்கள். அதில் பெண் சுதந்திரம், பெண்ணுரிமை, குறைந்தபட்சம் பெண்களுக்கு நிம்மதிகூட இருந்தது இல்லை.

திருமணத்துக்கு முன்பே ஒருவருக்கு ஒருவர் பிடித்திருக்கிறதா என்பதை பழகிப், பார்த்து தெரிந்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் சொன்னதற்காக அப்போதைக்கு திருமணம் செய்து கொண்டு 2-3 ஆண்டுகளில் பிரிபவர்கள் தங்களுடைய கால நேரத்தை வீணாக்குவதுடன் நிம்மதியையும் இழக்கிறார்கள். காயத்ரி யாரை திருமணம் செய்து கொண்டாலும் பழகிப் புரிந்துகொண்டு தன் மனதுக்குப் பிடித்ததை செய்வது நலம்.

இந்த எபிசோடின் மறுபாதி இன்னொரு திருமணத்தை பற்றியது. அலுவலகத்தில் இருந்து கிளம்பும் கவிதாவிடம், ராஜேஷ் தன் அம்மா பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறான். ராஜேஷ் யாரையாவது காதலிக்கிறானா என்று அவன் அம்மா கேட்டதைப் பற்றி கூறுகிறாள். ராஜேஷ் எதிர்பாராத விதமாக சட்டென்று, ‘நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா’ என்று அவளிடம் கேட்கிறான். கவிதாவுக்கு அந்த கேள்வி அதிர்ச்சியாக இருக்கிறது.

சர்வைவர் - 23|அசத்திய பார்வதி… கடுப்பில் காயத்ரி... மொத்தமாக எலிமினேட் ஆன ராம்!
AKS - 31 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 31 | ஆதலினால் காதல் செய்வீர்

அவள் சிறிது கால அவகாசம் தேவை என்றும் தன்னுடைய நண்பன் பாண்டியனிடம் பேசி விட்டு கூறுவதாகவும் சொல்கிறாள். மேலும் பாண்டியனின் முடிவுதான் தன்னுடைய முடிவு என்றும் கூறுகிறாள். பாண்டியனிடம் நடந்த விஷயங்களை கவிதா கூறுகிறாள். பாண்டியனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் அவனிடம் பெரிதாக மகிழ்ச்சி ஏதுமில்லை. பாண்டியன் குழப்பமாக இருப்பது போல் தெரிகிறது. கவிதா பாண்டியன் தான் தனக்கு ராஜேஷ் பொருத்தமாக இருப்பானா என்பதை கண்டறிந்து சொல்ல வேண்டும் என்று மொத்த பொறுப்பையும் பாண்டியனின் தலைமீது போட்டுவிட்டு நிம்மதியாக இருக்கிறாள்.

பாண்டியன் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறான். எந்த ஒரு பெண்ணுக்கும் பாண்டியனைப் போல தன்னை நன்றாக பார்த்துக் கொள்ளும், தன்மீது அக்கறையாக இருக்கும் ஒரு நண்பன் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கும். கவிதா தன்னுடைய திருமணத்தை பற்றி பாண்டியன் முடிவெடுக்க வேண்டும் என்று கேட்பதும் ராஜேஷை பாண்டியனுக்கு பிடித்தால் மட்டும்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வதும் நண்பர்களாக இருவருக்குமிடையே சரியாக தோன்றலாம்.

அந்த வெண்ணெய்தான் ஹீரோ… கூச்சமே படாத விஜய் சேதுபதியும், 8 ஆக குறைந்த மாஸ்டர் செஃப் போட்டியாளர்களும்!

ஆனால் தன்னுடைய வாழ்க்கைத் துணையை தான் தான் முடிவு செய்ய வேண்டும். ராஜேஷ் கவிதா உறவில் இன்னொருவர் முடிவெடுப்பது ராஜேஷின் தனிப்பட்ட வாழ்க்கையில் இன்னொருவர் நுழைவதை போன்றது.

புனிதா காயத்ரியிடம் சுந்தரை பற்றி பேசியதும்தான் காயத்ரிக்கு சுந்தரின் ஞாபகம் வருகிறது. காய்த்ரியின் மனக் குழப்பங்களுக்கு தீர்வு என்ன? பாண்டியன் வைக்கும் பரிட்சையில் ராஜேஷ் தேர்வானா?

காத்திருப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு