Published:Updated:

AKS - 34 | திருமணத்துக்குப்பிறகு ஒரு பெண்ணுக்கு ஆண் நண்பர் இருக்கலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
AKS - 34 |  ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 34 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (07-10-2021) வெளியான 34-வது எபிசோட் எப்படி இருந்தது?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காலில் அடிபட்டு இருப்பதால் சிவாவை மருத்துவர் புரோட்டின் மற்றும் கால்சியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். அதற்காக அசைவம் சேர்த்துக் கொள்ள சொல்கிறார். காயத்ரி சிவாவுக்காக அசைவம் சமைக்கிறாள். சமைக்கும்போது உப்பு சரி பார்க்க எண்ணி, பிறகு காயத்ரிக்கு தான் அசைவம் சாப்பிட மாட்டோம் என்பது நினைவில் வருகிறது. அவள் சமைத்ததை ருசி பார்க்காமலே சிவாவின் அறைக்கே கொண்டு சென்று சிவாவுக்கு பரிமாறுகிறாள்.

அசைவம் சாப்பிடாத காயத்ரி சிவாவுக்காக சமைத்து எடுத்து வந்திருப்பதை கேட்டு சிவா நெகிழ்ந்து போகிறான். காயத்ரி மிக அருமையாக சமைத்து இருப்பதாக சொல்கிறான். அதோடு முதல் முறை காயத்ரி புலாவ் செய்து இருந்ததையும் நினைவுப்படுத்தி நன்றாக இருந்ததாக கூறுகிறான். சிவாவுக்கு காயத்ரி தனக்காக சமைத்தது அவனது சிறு வயது ஞாபகங்களை கிளறி விடுகிறது. சிவாவின் மாற்றங்கள் சிறிது சிறிதாக காயத்ரிக்கு மன மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

AKS - 34 |  ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 34 | ஆதலினால் காதல் செய்வீர்

சிவாவுக்குத் தன்னால் அடிபட்ட காரரணத்தினால் அவனை பார்த்துக் கொள்கிறேன் என்று காயத்ரி புனிதாவிடம் சொல்கிறாள். அவள் அப்படி சொல்லி தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறாள். காயத்ரிக்கு சிவாவின் மீது அன்பு உருவாகியிருக்கிறது. அது முழுவதும் நட்பாக மாறவில்லை என்றாலும் அவனுக்கு சமைத்துக் கொடுத்து அவனை பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அக்கறை இருக்கின்றது. அதுபோக அவனது பாடல்கள், அவன் வாசிக்கும் புத்தகங்கள் என்று சில விஷயங்கள் சிவாவின் மீது காயத்ரிக்கு இயல்பான ஈர்ப்பு ஏற்படுத்தி இருக்கின்றன. காயத்ரியின் எண்ண ஓட்டத்தை சிவா முழுவதுமாக ஆக்கிரமித்து இருக்கிறான். சிவாவுக்கு காயத்ரியின் அன்பும், அக்கறையும் புரிகிறது. ஆனால் அதைத் தாண்டி அவனுக்கு அவள் மீது எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை.

காயத்ரிக்கு சுந்தர் கொரியரில் சீம்பால் அனுப்பி வைக்கிறான். அதை காயத்ரி சிவாவுக்கு சாப்பிடக் கொடுக்கிறாள். கிராமங்களில் மாடு கன்று ஈனும் சமயத்தில் உறவினர்கள் ஒருவருக்கொருவர் சீம்பால் பரிமாறிக் கொள்வது பற்றி காயத்ரி சிவாவிடம் சொல்கிறாள். சிவா அப்போதுதான் முதன்முறையாக சீம்பால் சாப்பிடுவதாக சொல்கிறான். சீம்பால் பற்றி காயத்ரி ஆர்வமாக பேசுவதைக் கேட்ட சிவா சீம்பாலை யார் அனுப்பியது என்று கேட்கிறான். சுந்தரின் நினைவு வந்து காயத்ரியின் முகம் சோர்ந்து போகிறது. பிறகு சிவாவிடம் தனக்கு நிச்சயக்கப்பட்டவர் அனுப்பி உள்ளார் என்று கூறுகிறாள்.

காயத்ரிக்கு சீம்பால் பிடிக்கும் என்பதாலோ, அல்லது கிராமத்தில் இது ஒரு சடங்கு என்பதற்காகவோ சுந்தர் அனுப்பியிருக்கிறான். ஆனால் சிவா, “சுந்தர் சீம்பால் அனுப்பியது நல்ல விஷயம் என்றாலும் தனக்கு அது வேடிக்கையாக இருக்கிறது” என்று சொல்கிறான். நகரத்தில் தனிமையில் வளர்ந்த சிவாவுக்கு இது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் கிராமங்களில் இது மிகவும் சகஜம்.

காயத்ரி வீட்டுக்கு சுந்தர் திருமண பத்திரிகை அடிப்பது பற்றிய தகவல் கேட்க வந்திருக்கிறான். சுந்தர் மிக ஆர்வமாக திருமண வேலைகளை செய்து கொண்டிருக்கிறான். மறுபக்கம் சுந்தர் வந்தது பற்றியும் திருமண அழைப்பிதழ் குறித்து பேசியது பற்றியும் காயத்ரியின் குடும்பத்தினர் அவளுக்கு தொலைபேசியில் அழைத்து சொல்கின்றனர். காயத்ரி அதைக் கேட்டு மிகவும் குழம்பிப் போகிறாள். அவளது திருமணம் நெருங்குவது அவளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை.

AKS - 34 |  ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 34 | ஆதலினால் காதல் செய்வீர்

சுந்தர் வீட்டுக்கு வரும்போது காயத்ரியின் தந்தை, அண்ணன், தாய்மாமா மற்றும் பாட்டி நால்வரும் கூடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுந்தரை கண்டதும் அவர்கள் வாயார வரவேற்கிறார்கள். ஆனால், அந்த வரவேற்பு அவர்களின் உடல் மொழியில் இல்லை.

நான்கு பேரில் ஒருவர் கூட எழுந்து இடம் கொடுக்கவோ, ஒரு நாற்காலியை எடுத்துப் போடவோ இல்லை. திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தால் ஓடி ஓடி கவனிப்பார்கள் என்று சொல்வார்கள். அவ்வளவு ஆர்ப்பாட்டம் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் வெளியிலிருந்து வந்திருப்பவர்களை உட்காரச் சொல்வதுதானே நாகரிகம்? உள்ளிருந்து கூடத்திற்கு வரும் காயத்ரியின் அண்ணியும்கூட அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருக்கும் சுந்தரை கண்டு கொள்ளவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை எழுதும்போது, “ஏன் வாங்கன்னு சொல்லாட்டி அவன் அப்படியே ஓடிருவானாமா” என்று கவுண்டமணியின் குரல் காதில் கேட்டாலும் தமிழர் பண்பாடு என்று ஒன்று உண்டல்லவா? உச்சபட்சமாக திருமண அழைப்பிதழ் பற்றிப் பேச வந்திருக்கும் சுந்தரிடம், “இதைத்தான் நீங்கள் போனிலேயே சொல்லி இருக்கலாமே... இதற்கு இவ்வளவு தூரம் வர வேண்டுமா” என்று காயத்ரியின் தந்தை கேட்கிறார். கிராமத்து மக்கள் மரியாதையானவர்கள், விழுந்து விழுந்து உபசரிப்பார்கள் என்பதையெல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட்டில் மேண்டிலை உடைக்கும் நடிகர் செந்திலைப்போல ஒரே காட்சியில் காயத்ரியின் குடும்பத்தினர் உடைத்து விடுகின்றனர்.

AKS - 34 |  ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 34 | ஆதலினால் காதல் செய்வீர்

ராஜேஷும், கவிதாவும் உணவகம் செல்கின்றனர். வரவேற்பறையில் பாண்டியனுக்காக காத்திருக்கிறார்கள். கவிதா பாண்டியனை தொலைபேசியில் அழைக்கிறாள். பாண்டியன் அலுவலகத்தில் முக்கியமான வேலையில் இருப்பதாகவும் வர முடியாத சூழ்நிலை என்றும் கவிதாவிடம் சொல்கிறான். கவிதா வருத்தம் அடைகிறாள். ஆனால் ராஜேஷ் மகிழ்ச்சி அடைகிறான். கவிதா பாண்டியனிடம், “நாங்கள் இருவரும் உன்னை மிகவும் எதிர்பார்க்கிறோம்” என்று சொல்லும்போது ராஜேஷின் நிலைமையை எண்ணி சிரிப்பு வருகிறது.

பாண்டியன் வரவில்லை என்று கவிதா சொல்கிறாள். ராஜேஷ், சந்தானம் ஆர்யாவுக்கு சொல்லிக் கொடுத்ததை போல வெற்றிக்குறி செய்கிறான். அப்போது கவிதாவின் பின்னாலிருந்து பாண்டியன் எழுந்து ’சப்ரைஸ்’ கொடுக்கிறான். பிறகு பாண்டியனும், கவிதாவும் எப்போதும்போல் அடித்துக் கொள்கிறார்கள். ராஜேஷுக்கு அது எரிச்சலாக இருக்கிறது. நேற்றே குறிப்பிட்டதை போல முதல் நாளே ராஜேஷுக்கு பாண்டியனின் வருகை எரிச்சலை உண்டாக்குகிறது. இனி நாள்கள் செல்லச் செல்ல கவிதா பாண்டியனுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், ராஜேஷ் கவிதாவின் இடையில் பாண்டியன் இருப்பதும் ராஜேஷுக்கு பிடிக்காமல் போகும்.

திருமணத்துக்குப்பிறகு ஒரு பெண்ணுக்கு ஆண் நண்பர் இருப்பது தவறு என்றும், அதை கணவனோ, காதலனோ ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை என்றும் சமூகத்தின் பொதுபுத்தியில் இருக்கிறது. நண்பன் என்றில்லை, பெரும்பாலான ஆண்களுக்கு தங்கள் மனைவியின் தந்தை மற்றும் சகோதரர்கள் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவது அல்லது அன்பாக நடந்து கொள்வதும்கூட பிடிப்பது இல்லை. தங்கள் மனைவிக்கு எல்லாமுமாக தாங்களே இருக்கவேண்டும் என்கிற எண்ணம் ஆண்களுக்கு இருக்கிறது.

இங்கே ராஜேஷின் பிரச்னை, கவிதா மற்றும் ராஜேஷ் இருவருக்குமான தனிப்பட்ட நேரம் முழுக்க ராஜேஷ் கவிதாவுடன் இருக்க ஆசைப்படுகிறான். ஆனால் அந்த நேரத்தில் பாண்டியன் வருவதால் கவிதாவிடம் மனம் விட்டு பேச முடியாது, அவள் கைகளை பற்றிக் கொள்ள முடியாது என்பதால் கோபப்படுகிறான்.

ராஜேஷ் - கவிதாவின் காதல் மணவறையில் கைகள் பற்றிக்கொள்வது வரை நீளுமா?

காத்திருப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு