Published:Updated:

AKS - 35 | பெண்ணை காதலி என்று சொல்வதைவிட ’பொண்டாட்டி’ என்று சொல்வதில் அதிக உரிமை இருக்கிறதா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
AKS - 35 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 35 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (08-10-2021) வெளியான 35-வது எபிசோட் எப்படி இருந்தது?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கவிதாவும் ராஜேஷும் உணவகத்துக்கு சாப்பிடச் செல்கின்றனர். கவிதா பாண்டியனையும் அழைத்திருந்தாள். பாண்டியனும் கவிதாவும் உணவகத்தில் விளையாட்டுத்தனமாக சண்டையிட்டு கொண்டிருக்கின்றனர். அதை பார்க்கும் ராஜேஷ் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறான். இதுவரையும் கைகழுவி விட்டு சாப்பிட வருமாறு அழைக்கிறான். கை கழுவச் சென்ற இடத்தில் சென்சார் குழாயை இயக்கத் தெரியாமல் இருவரும் முதலில் குழம்புவதும் பிறகு அதை கண்டுபிடித்ததும் அதில் விளையாடுவதுமாக இருக்கின்றனர். நேரமாகியும் இருவரையும் காணவில்லை என்று ராஜேஷ் அங்கே வருகிறான். இருவரும் விளையாடிக் கொண்டிருப்பது அவனுக்கு எரிச்சல் ஆகிறது.

கை கழுவி விட்டு வந்து ராஜேஷின் அருகில் அமர்ந்திருக்கும் கவிதா, பாண்டியன் வந்ததும் அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்கிறாள். உணவு பரிமாறப்படும்போது பாண்டியனும், கவிதாவும் முன்பு நடந்தது போலவே ஆர்வக் கோளாறாக நடந்து கொள்கின்றனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் உணவை ஊட்டிக்கொள்ளும் போது ராஜேஷ் எரிச்சல் அடைகிறான். அவனை மேலும் கோபப்படுத்தும் விதமாக அவனிடம் போனை கொடுத்து இருவரையும் போட்டோ எடுத்து தருமாறு பாண்டியன் கேட்கிறான்.

AKS - 35 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 35 | ஆதலினால் காதல் செய்வீர்

ஒரு பெண்ணுக்கு ஆண் நண்பர் இருப்பதும், அதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்வதும் சரிதான். ஆனால் காதலர்கள் இருவர் தனியாக நேரம் செலவழிக்க செல்லும் இடத்தில் ஒருவர் மட்டும் தன்னுடைய நண்பரையும் அழைத்து வருவது நாகரிகமான செயல் இல்லை. இன்னொருவருக்கு தங்களுடைய தனிமையான காதல் நேரம் பாதிக்கப்படுவது குறித்து வருத்தம் இருக்கும்.

வீட்டுக்கு வந்ததும் கவிதாவுக்கு ராஜேஷ் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்கிறான். கவிதாவும் அவனிடம் நன்றாக பேசுகிறாள். வீடியோ கால் பேசலாமா என்று ராஜேஷ் கேட்கிறான். கவிதா ராஜேஷிடம் பேசிக் கொண்டிருக்கும்போது கவிதாவின் அருகில் படுத்திருக்கும் பாண்டியன் அவள் பின்னால் இருந்து எழுந்து வீடியோ காலில் ராஜேஷுக்கு ‘சர்ப்ரைஸ் - ஷாக் என்ட்ரி’ கொடுக்கிறான்.

அதுவரை கவிதா மட்டுமே இருப்பதாக நினைத்து ராஜேஷ் பேசிக் கொண்டிருக்கிறான். அந்த சமயத்தில் இன்னொருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பது அவ்விடத்தில் ராஜேஷுக்கு அவமானமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது. ராஜேஷ் பிறகு பேசுவதாக சொல்லி விட்டு அழைப்பை துண்டிக்கிறான். தான் மட்டுமே பேசிக் கொண்டிருப்பதாக நினைத்து காதலியிடம் பேசும்போது அதை வேறு ஒருவர் கேட்டு விட்டு பதில் சொல்வது யாராக இருந்தாலும் அந்த நேரத்தில் கோபம் வரும்.

கவிதாவுக்கு பாண்டியன் முக்கியமாக இருக்கலாம், ஆனால் கவிதாவும் ராஜேஷும் காதலிக்கும் பொழுதல்லாம் பாண்டியன் உடன் இருப்பதும், அவர்கள் பேசுவதை கவிதா அவனுக்கும் தெரியப்படுத்துவதும் தவறு. கவிதாவின் அருகில் பாண்டியன் இருப்பது ராஜேஷுக்குத் தெரியாத போது, கவிதா, ராஜேஷிடம் என் கண்கள் அழகாக இல்லையா, கூந்தல் அழகாக இல்லையா என்பது போன்ற மிகவும் தனிப்பட்ட கேள்விகளை கேட்பது அநாகரிகம். ஒருவகையில் இது ராஜேஷை ஏமாற்றுவது போன்றது.

கவிதா தன்னுடைய அந்தரங்கத்தை இன்னொருவருக்கு தெரியப்படுத்துவது அவளது தனிப்பட்ட விஷயம். ஆனால் ராஜேஷின் அந்தரங்கத்தை பாண்டியனிடம் தெரியப்படுத்துவது தவறு.

AKS - 35 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 35 | ஆதலினால் காதல் செய்வீர்

உண்மையில் இவ்வளவு மன முதிர்ச்சியும் அனுபவமும் உள்ள கவிதாவுக்கு இந்த சாதாரண விஷயம் கூடத் தெரியாத அளவுக்கு அவளுடைய நட்பு அவள் கண்களை மறைக்கிறது. நாம் சம்பந்தப்பட்ட உறவுகளை நாம் பார்க்கிறது போலவே நம்முடைய வாழ்க்கை துணை அல்லது காதலர் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எல்லோருக்கும் தனி மனித சுதந்திரம் மற்றும் சுயமரியாதை இருக்கின்றது. நாம் அதை இன்னொருவரிடம் விட்டுக் கொடுக்க முடியாது.

புனிதா தனக்கும் பரத்துக்கும் இடையில் இருக்கும் லிவ்-இன் உறவைப் பற்றி காயத்ரிக்கு எடுத்து சொல்லி புரிய வைத்து பரத்தின் அறைக்கே மாறிக் கொள்கிறாள். அதனால் பரத் மகிழ்ச்சியாக இருக்கிறான். காயத்ரி புரிந்து கொண்டதைப் போல ஊரில் இருப்பவர்கள் தங்கள் உறவை புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.

பரத் புனிதாவை ’பொண்டாட்டி’ என்று சொல்லி அழைக்கிறான். புனிதா அதற்கு எரிச்சலாகி அப்படி சொல்லக் கூடாது என்கிறாள். பிறகு அது எங்கு வந்து நிற்கும் என்று தெரியும் என்கிறாள். இதற்கு புனிதா திருமணம் வேண்டாம் என்று சொல்லும்போது புரிந்துகொண்டதை போல நடந்து கொண்டாலும், பரத் மீண்டும் திருமணத்தை நோக்கியே வந்து நிற்கிறான். அவனுக்கு பார்ட்னர், கேர்ள் ஃபிரண்ட் எனும் வார்த்தைகள் பிடிக்கவில்லை. புனிதாவை மனைவி என்று சொல்வது தான் பிடித்திருக்கிறது என்கிறான். நம்முடைய சமூகம், குடும்ப அமைப்பை சார்ந்தது. அதில் திருமண உறவு மிக முக்கியமானது. ஆண்கள் தாங்கள் காதலிக்கும் பெண்ணை காதலி என்று சொல்வதைவிட ’பொண்டாட்டி’ என்று சொல்வதில் அதிக உரிமை இருப்பதாக நினைக்கிறார்கள். பரத் புனிதாவை அப்படி அழைக்க ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அது வெறும் ஆசையாக இல்லாமல் திருமணத்தில் விருப்பம் இல்லாத புனிதாவை திருமணம் செய்து கொள்ள மறைமுகமாக கட்டாயப்படுத்தும் உள்நோக்கமும் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புனிதாவின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வருகிறது. அவளது புது ப்ராஜெக்ட் மேனேஜர் அவளைப் பாராட்டி செய்தி அனுப்பியிருக்கிறான். புனிதா மிக எக்சைட்டாகி புது ப்ராஜெக்ட் மேனேஜர் பற்றி பரத்திடம் பேசுகிறாள். அவன் எல்லோரையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதை பெருமையாக கூறுகிறாள். தானும் எதிர்காலத்தில் தனது டீமில் அவளது புது பிராஜக்ட் மேனேஜரை போல இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டதாக பரத்திடம் சொல்கிறாள். பரத்துக்கு அந்த மெசேஜில் ஏதோ தவறு இருப்பது போலப்படுகிறது. ’இது அடுத்தது டியர், டார்லிங் என்று போய் இறுதியாக லவ் ப்ரபோசலில் வந்து நிற்கும்’ என்று எச்சரிக்கை செய்கிறான். புனிதா பரத்துக்கு பொசசிவ்னஸ் வந்து அப்படி பேசுகிறான் என்று சொல்லி சிரித்து அவனை கேலி செய்கிறாள்.

AKS - 35 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 35 | ஆதலினால் காதல் செய்வீர்

காலையில் புனிதா அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கையில் அவளுக்கு அழைப்பு வருகிறது. அழைப்பை ஸ்பீக்கரில் போட்டு புனிதா பேசிக் கொண்டிருக்கிறாள். பேசி முடிக்கும் போது புது ப்ராஜெக்ட் மேனேஜர் புனிதாவை டியர் என்று சொல்லி பேசுகிறான். அருகில் தூங்கிக் கொண்டிருந்த பரத், அதைக் கேட்டு சட்டென்று எழுந்து, தான் முன் தினம் சொன்னது நடந்து விட்டது என்று சொல்கிறான். புனிதா இந்த தலைமுறை மக்களிடம் இதுவெல்லாம் சகஜம் என்றும் முன் அறிமுகம் இல்லாதவர்களை சோஷியல் மீடியாவில் டியர் என்றழைப்பது பற்றியும் பரத்திடம் சொல்லி அதை பெரிதுபடுத்த வேண்டாம் என்கிறாள். மேலும் அவனை இந்த விஷயங்களை புரிந்து கொண்டு வளரச் சொல்கிறாள்.

இதற்கு மேல் ஏதாவது பேசினால் புனிதா தனக்கு தாழ்வு மனப்பான்மை உண்டு என்று சொல்லுவாள் என்பதால் பேச்சை நிறுத்தி எழுந்து போகிறான் பரத்.

புனிதா, பரத்தின் இடையில் கிஷோர்..

ராஜேஷ், கவிதாவின் இடையில் பாண்டியன்..

இரண்டு கதைகளிலும் வெல்ல இருப்பது காதலா, பொசசிவ்னெஸா?

காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு