Published:Updated:

AKS - 36 | காதலுக்கும், கம்ஃபர்ட் ஸோனுக்கும் இடையில் திருமணம் மாட்டிக்கொள்கிறதா?!

AKS - 36 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (11-10-2021) வெளியான 36-வது எபிசோட் எப்படி இருந்தது?!

AKS - 36 | காதலுக்கும், கம்ஃபர்ட் ஸோனுக்கும் இடையில் திருமணம் மாட்டிக்கொள்கிறதா?!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (11-10-2021) வெளியான 36-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:
AKS - 36 | ஆதலினால் காதல் செய்வீர்

சிவா மற்றும் பரத் இருவரிடமும் கவிதா, பாண்டியன் இடையில் இருக்கும் உறவு பற்றி ராஜேஷ் கேட்கிறான். சிவாவும், பரத்தும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்கின்றனர். ராஜேஷ் பதற்றமாகி, கவிதா மற்றும் பாண்டியனை தவறாக நினைக்கவில்லை என்றும் ஆனால் ஒரே அறையில் தங்கி இருப்பது தனக்கு புதிதாக இருப்பதால் கேட்கிறேன் என்றும் சொல்கிறான்.

”நீ கவிதாவிடம் காதல் சொல்லப் போவதாக சொன்ன போது அந்தப் பெண் உன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டால் நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்று தான் முன்பே சொன்னதை சிவா ராஜேஷுக்கு நினைவூட்டுகிறான். சிவா, பாண்டியன் மற்றும் கவிதாவின் இடையில் சிறு வயதிலிருந்து தொடரும் நட்பை பற்றி பெருமையாக கூறுகிறான். ராஜேஷுக்கு சிவா பேசிய பிறகு எல்லாம் தெளிவாகிறது.

சிவா கதாபாத்திரத்தில் நடிக்கும் முத்தழகனின் நடிப்பும், மேனரிஸமும் அருமையாக இருப்பதோடு நிறைய பெண் ரசிகர்களை அவருக்கு ஈட்டித் தந்திருக்கிறது. வாழ்த்துகள் முத்தழகன் aka சிவா!

AKS - 36 |  ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 36 | ஆதலினால் காதல் செய்வீர்

பொதுவாக பெண்கள் இருவர் நட்பாக இருந்தாலே அது வெகுநாட்கள் தொடர்வது மிகக் கடினம். பள்ளி அல்லது கல்லூரியோடு முடிந்து விடும். திருமணமான பிறகு நண்பர்களுடன் நேரம் செலவு செய்வது மிக அரிது. சமீப காலமாகத்தான் நகரங்களில் வேலைக்கு சென்று தனியாக இருக்கும் பெண்கள் தோழிகளுடன் தங்கி இருக்கும் வாய்ப்பு அதிகமாகிருக்கிறது.

பதின்வயது பெண் குழந்தைகள் தங்களை விட 2 – 3 வயது பெரிய பெண் பிள்ளைகளிடம் பழகினாலே பெற்றவர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். தங்கள் மகளிடம் தேவையில்லாத விஷயங்களை பேசக் கூடாது என்று அந்த மூத்த பிள்ளைகளை அறிவுறுத்தும் அம்மாக்கள் உண்டு. அப்படியிருக்க ஆண்-பெண் நட்பாக இருக்கும்போது எப்போதுமே அவர்கள் பின்னால் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது போல் யாராவது கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த நட்பு ஏதாவது ஒரு கணத்தில் காதலாகி விடாதா என்று எதிர்பார்க்கிறார்கள். அது காதலாகும்போது தாங்கள் இவ்வளவு ஆண்டுகளாக ஆண்-பெண் நட்பாக, பாலினம் கடந்து பழக முடியாது என்று சொல்லி வந்ததை மீண்டும் ஒருமுறை நிரூபித்து கொண்டதாக மகிழ்ச்சி அடைகிறார்கள். தங்களுக்கு சாத்தியமில்லாத ஒன்றை மற்றவர்கள் செய்யும்போது பொறுத்துக்கொள்ள முடியாத குணம் தான் அது.

இதுவெல்லாம் சாதாரணமாக இருவர் நட்பாக பழகும்போது இருக்கும் பிரச்னைகள். இதுவே பாண்டியன், கவிதாவை போல ஒரே அறையில் தங்கி இருப்பது நம் சமூகத்துக்கு மிகப் புதியது. பலருக்கும் அவர்களின் நட்பு புரிந்தாலும், வெளிப்படையாக அங்கீகரிக்க விரும்புவது இல்லை. அதில் கலாச்சாரம், பண்பாட்டு கெட்டுவிடும் என்கிற பயம் இருக்கிறது.

”பாண்டியன், கவிதாவின் இடையில் காதல் உறவு இருந்திருந்தால் ராஜேஷின் காதலை கவிதா ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே” என்று ராஜேஷிடம் சிவா கேட்கும் கேள்வி மிக முக்கியமானது. இது புரியாததால் தான் இன்றும் ஆண், பெண் நட்பை மற்றவர்கள் சந்தேகப்படுவது நடக்கிறது.

AKS - 36 |  ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 36 | ஆதலினால் காதல் செய்வீர்

அலுவலகம் வந்ததும் நேராக ராஜேஷிடம் வரும் கவிதா, தானும் பாண்டியனும் ஒரே அறையில் இருப்பது அவனுக்கு ஏதேனும் பிரச்னையா என்று கேட்கிறாள். இல்லை என்று சொல்லும் ராஜேஷிடம், வீடியோ காலில் தனக்கு அருகில் பாண்டியன் இருந்ததை கண்டு அவன் முகம் மாறியதை கவனித்ததாக சொல்கிறாள் கவிதா.

ராஜேஷ் முதல் முறையாக அவர்கள் இருவரையும் ஒரே அறையில் பார்த்ததால் சிறிது குழப்பம் இருந்ததாக கூறுகிறான். கவிதா, “நாங்கள் இருவரும் சிறுவயதிலிருந்து இப்படித்தான் வளர்ந்திருக்கிறோம். இதை நீங்கள் புரிந்து கொள்வது அவசியம், இல்லை என்றால் நம்முடைய உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது” என்று கூறுகிறாள். ராஜேஷ் தான் நன்றாக அவர்களை புரிந்து கொண்டதாக சொன்னதும் கவிதா நன்றி சொல்கிறாள்.

கவிதா மற்ற நேரங்களில் விளையாட்டுத்தனமாக இருப்பது போல் இருந்தாலும், வீடியோ காலில் ராஜேஷ் முகம் மாறியதை கவனித்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் ராஜேஷிடம் ஆரம்பத்திலேயே வெளிப்படையாக வந்து கேட்டதும் நல்லது. ஏற்கெனவே ராஜேஷுக்கு எல்லாம் தெரியுமல்லவா என்று நினைத்து கவிதா இதைப்பற்றி மீண்டும் பேசாமல் இருந்தால், ராஜேஷுக்கு அந்த குழப்பம் தொடரலாம். அப்படி தேவையில்லாத விஷயங்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி உருவாக்கப்படும் குழப்ப அடுக்குகள் மொத்த உறவையும் சரித்துவிடும்.

ராஜேஷின் அம்மா அலுவலகம் வருகிறார். கவிதாவைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திருமணத்தை பற்றி பேசுகிறார். கவிதாவின் பெற்றோர்களிடம் திருமணத்தை பற்றி பேச வேண்டும் என்கிறார். அதுபோக அலுவலகத்தில் இருக்கும் மற்றவர்களிடம் இனி நிர்வாகத்தில் கவிதாவும் முக்கியமான ஆள் என்றும் தன்னுடைய மருமகள் கவிதாவுக்கு எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் கூறுவிட்டு செல்கிறார்.

AKS - 36 |  ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 36 | ஆதலினால் காதல் செய்வீர்

கவிதாவுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. உடனடியாக அந்த சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் சென்றதும் கவிதா ராஜேஷிடம் கோபமாகப் பேசுகிறாள். ராஜேஷை புரிந்து கொள்ள இன்னும் கால அவகாசம் தேவை என்றும் அதற்குள் திருமணத்தைப் பற்றிப் பேசுவது சரியல்ல என்றும் சொல்கிறாள். ”உங்களுடைய அம்மாவின் மகிழ்ச்சிக்காக எனக்கு அழுத்தம் கொடுப்பது சரியல்ல” என்று சொல்லிவிட்டு செல்கிறாள்.

கவிதா தனக்கு ராஜேஷிடம் ஒரு Comfort Zone ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். ராஜேஷ் அவளிடம் காதல் சொன்ன உடனே இருவருக்குள்ளும் இருக்கும் ஈர்ப்பை மட்டும் வைத்துக் கொண்டு திருமணத்தைப் பற்றி முடிவு எடுப்பது சரியல்ல. ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ள சிறிது காலம் எடுக்கும்.

ஆனால் இதற்காக கவிதா இவ்வளவு கோபப்படவும் தேவை இல்லை. கவிதா மிக மன முதிர்ச்சியோடு தன்னுடைய காதல், திருமணம் பற்றியெல்லாம் யோசிக்கும் அதே அளவு மற்றவர்களைப் புரிந்து கொள்வதும் அவசியம். முன்பே ராஜேஷின் அம்மா அவன் திருமணம் செய்து கொள்ளாதது பற்றி மன வருத்தத்துடன் கவிதாவிடம் பேசியிருப்பார். அப்படி இருக்கையில் ராஜேஷ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சொன்னதும் அவர் மகிழ்ச்சி அடைவதும் உடனடியாக திருமணத்தை பற்றி பேசுவதும் நியாயமானது.

AKS - 36 |  ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 36 | ஆதலினால் காதல் செய்வீர்

கவிதாவுக்கு ராஜேஷிடம் பொறுமையாக பேசிப் புரிய வைத்து திருமணத்தை தள்ளிப் போடுவது சுலபம்தான். ஏனெனில் கவிதா தன் விருப்பம் போல் வேலை, வாழ்க்கைத் துணை எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கும் பெண்ணாகத்தான் இருக்கிறாள். ராஜேஷின் அம்மா பேசியதற்கு கோபப்படாமல் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்பதை புரிய வைத்து இருக்கலாம்.

பரத் புனிதாவுக்கு கால் செய்து மன்னிப்பு கேட்கிறான். அவளுக்கு ’வேற லெவல்’ மெச்சூரிட்டி இருப்பதாகவும், தான் புரிந்து கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் தவறு செய்வதாகவும் பரத் கூறுகிறான். ஆனால் பரத் தொடர்ந்து தவறுகள் செய்கிறான். புனிதாவை தவறாக புரிந்து கொண்டு காயப்படுத்துகிறான். பிறகு தான் செய்தது தவறு என்றும், அவளை புரிந்து கொண்டதாகவும் சொல்கிறான். ஒவ்வொரு முறையும் புரிந்து கொண்டதாகச் சொல்லும் பரத், ஒரு முறைகூட அதைப் பின்பற்றுவதில்லை.

பரத்துக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. தாழ்வு மனப்பான்மை இருக்கும் ஒருவர் தொடர்ந்து மற்றவரை ஒரு உறவில் சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அல்லது குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பரத்தின் தாழ்வு மனப்பான்மை புனிதா பரத்தின் உறவை ஒன்றும் இல்லாமல் கூட ஒரு நாள் ஆக்கிவிடும்.

காயத்ரிக்கு அலுவலகத்தில் Star of the Month பாராட்டு கிடைக்கிறது. காயத்ரி சிவாவிடம் நன்றி தெரிவிக்கிறாள். சிவாவுக்கும் காயத்ரிக்கும் இடையில் அன்பு ஒரு மெல்லிய கோடாக உருவாகிறது. திருமணம் மற்றும் காதலில் ராஜேஷின் உணர்வுகளை கவிதா புரிந்துகொள்வாளா?

காத்திருப்போம்!