Published:Updated:

AKS - 37 | சமத்துவம் என்கிற பெயரில் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
AKS - 37 |  ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 37 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (12-10-2021) வெளியான 37-வது எபிசோட் எப்படி இருந்தது?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புனிதா, பாண்டியன் மற்றும் காயத்ரியை அழைத்து அவர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை கைகளில் கொடுக்கிறாள். ஊர்ப்புறங்களில் இருந்து முதன் முறை நகரத்திற்கு வேலைக்கு வருபவர்களின் கனவாக இருக்கும் முதல் மாத சம்பளத்தை கைகளில் வாங்குகிறபோது ஏற்படும் மகிழ்ச்சியை நேரில் பார்க்க விரும்பியதால் HR-ல் பேசி வாங்கி வந்ததாக புனிதா சொல்கிறாள். பாண்டியனும், காயத்ரியும் அதை வாங்கி மகிழ்ச்சி அடைகிறார்கள்.

காயத்ரி தன் சொந்த வருமானத்தில் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு திருமணத்திற்கு முன்பே ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் சென்னையில் வேலைக்கு செல்கிறாள். அவளுக்கு முதல் மாத சம்பளம் தன் உழைப்பில் ஈட்டியது என்று பெருமிதமாக இருக்கிறது. அன்றே குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு காயத்ரி ஊருக்கு செல்கிறாள். யாருக்கும் சொல்லாமல் ’சர்ப்ரைஸாக’ ஊரில் போய் இறங்கி தன் மாமாவுக்கு கால் செய்து அழைத்துப் போகச் சொல்கிறாள்.

AKS - 37 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 37 | ஆதலினால் காதல் செய்வீர்

காயத்ரி தான் வாங்கி வந்த பரிசுப் பொருட்களை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கொடுத்து அவர்கள் மகிழ்ச்சி அடைவதை பார்த்து பூரித்துப் போகிறாள்.

அந்த சமயம் காயத்ரிக்கு நிச்சியிக்கப்பட்ட மாப்பிள்ளை சுந்தர் அங்கு வருகிறான். காயத்ரி எல்லோருக்கும் பரிசு பொருட்கள் வாங்கி வந்திருப்பதாக காயத்ரியின் தாய் மாமா மகிழ்ச்சியாக சுந்தரிடம் சொல்கிறார். சுந்தரும் மகிழ்ச்சியாக தனக்கு என்ன வாங்கி வந்திருக்கிறாய் என்று கேட்கிறான். காயத்ரி சுந்தருக்கு எதுவும் வாங்கி வரவில்லை. அதனால் அமைதியாக ’சாரி’ சொல்கிறாள்.

”முதல்ல மாப்பிள்ளைக்கு தானே கிஃப்ட் வாங்கி வந்திருக்க வேண்டும்” என்று காயத்ரியின் தந்தை கேட்கிறார். ஆனால் பாருங்கள், வீட்டுக்கு வரும் மாப்பிள்ளையை ’முதலில்’ உட்காரச் சொல்ல வேண்டும் என்று மட்டும் அவருக்கு இன்னமும் தெரியவில்லை!

காயத்ரி மாப்பிள்ளைக்கு எதுவும் வாங்கி வரவில்லை என்றதும், நமது லிட்டில் பிரின்ஸசின் தந்தை அவசர அவசரமாக. “காயத்ரி எங்கள் கைகளிலேயே வளர்ந்த பிள்ளை... வெளியுலகம் தெரியாது” என்கிறார். இவ்வளவு பேருக்கும் பரிசு பொருட்கள் வாங்கத் தெரிந்த காயத்ரிக்கு சுந்தருக்கு வாங்க மட்டும் வெளியுலகம் தெரிய வேண்டுமா? ஆனாலும் இப்படி தங்கள் மகள்களின் தவறுகளுக்கு சப்பைக்கட்டாக பதில் சொல்லும் பெற்றோர்கள் எண்ணற்றோர் உண்டு.

AKS - 37 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 37 | ஆதலினால் காதல் செய்வீர்

ராஜேஷின் அம்மா திருமணத்தைப் பற்றி பேசியதற்காக கவிதா கோபித்துக் கொண்டதை பற்றி ராஜேஷ் பாண்டியனிடம் சொல்கிறான். பாண்டியன் கவிதாவை அழைத்து ராஜேஷிடம் நன்றாக பேசும்படி சொல்கிறான். கவிதாவிற்கு கோபம் அதிகமாகிறது. ராஜேஷிடம் சென்று அதைப் பற்றி கேட்கிறாள். யாரிடமும் எதுவும் கூற வேண்டாம் என்றாலும் மீண்டும் மீண்டும் ராஜேஷ் தவறு செய்வதாக கூறுகிறாள். ராஜேஷ் கவிதாவை ’இம்ப்ரஸ்’ செய்வதற்காக ஏதாவது செய்யப் போய் ஒவ்வொரு முறையும் அது சொதப்பல் ஆகி விடுகிறது என்கிறான். கவிதா சிரித்து சமாதானமாகி விடுகிறாள்.

கடற்கரையில் மாலை ராஜேஷும், கவிதாவும் பேசிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அங்கு பாண்டியன் இருவருக்கும் இடையில் வந்து குதிக்கிறான். ராஜேஷ் அவனைக் கண்டதும் ’மூட் அவுட்’ ஆகிறான். கவிதா பாண்டியனுக்கு போன் செய்து கடற்கரைக்கு வந்திருப்பதாக சொல்லி இருக்கிறாள். அதுவரையில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்த கவிதா பாண்டியனை கண்டதும் எழுந்து அவனுடன் அலைகளில் விளையாட ஓடுகிறாள். இருவரும் சிறிது நேரம் விளையாடிய பிறகு கவிதா மீண்டும் வந்து ராஜேஷுடன் உட்காருகிறாள்.

இருவரும் ஒருவரின் கண்களில் மற்றவர் காதலில் விழுந்து கடல் அலைகள் முதற்கொண்டு உலகமே மறந்திருக்கும் சமயம் ஓடி வந்து ராஜேஷின் மீது சாய்ந்து விழுகிறான் பாண்டியன். ராஜேஷிற்கு கோபம் வருகிறது. ஆனால் அதை காட்டிக் கொள்ள முடியாமல் அமைதியாக இருக்கிறான். அன்று காலை தனக்கும் பாண்டியனுக்கும் உள்ள உறவைப் பற்றி இனிமேல் விளக்கம் கொடுக்கும் சூழ்நிலையை உருவாக்காதீர்கள் என்று கவிதா ராஜேஷிடம் கூறியிருந்தாள். ஆனால் மீண்டும் அவர்கள் இருவரின் தனிப்பட்ட நேரத்தில் பாண்டியன் வந்து தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறான். ஏற்கெனவே சொன்னது போல கவிதா பாண்டியனின் உறவை ராஜேஷ் புரிந்து கொண்டாலும் எந்நேரமும் காதலர்கள் இடையில் மூன்றாவதாக ஒருவர் இருப்பதை ஏற்றுக் கொள்வது சிரமம்.

AKS - 37 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 37 | ஆதலினால் காதல் செய்வீர்

பரத் புனிதாவுக்கு வீடியோ காலில் அழைத்து பேசிக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கு வரும் புனிதாவின் புதிய ப்ராஜெக்ட் மேனேஜர் கிஷோரை பரத்துக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள். கிஷோர் மிக இயல்பாக புனிதாவின் தோளில் கைப்போட்டு வீடியோ காலில் இருக்கும் பரத்திடம் பேசுகிறான். பரத்துக்கு அது பிடிக்காமல் உடனடியாக முகத்தை திருப்பிக் கொள்கிறான்.

ஆணும், பெண்ணும் பாலினம் கடந்து பழகுவது, நட்பாக இருப்பது, ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவது எல்லாம் ஆண்-பெண் சமத்துவத்தை வளர்க்கும் என்கிறோம். அதேசமயம் பெண், ஆண் யாராக இருந்தாலும் மற்றவர்களை தேவை இல்லாமல் தொட்டு பேசுவது தவறு. இங்கே பரத் கோபப்படுகிறான் என்பதைத் தாண்டி ஒவ்வொரு முறையும் கிஷோர் பேசும் போது புனிதாவை தொட்டு பேசுவது தேவையற்ற ஒன்றாக இருக்கிறது. அதை புனிதா தான் முடிவு செய்ய வேண்டும் என்றாலும் ஒருவேளை தன்னுடைய மேலதிகாரி என்கிற காரணத்தினாலோ அல்லது தான் ஒரு முற்போக்கான பெண் என்பதை காட்டிக் கொள்வதற்காகவும் கூட அவள் அதை அனுமதிக்கலாம். ஆனால் சமத்துவம் என்கிற பெயரில் அநாகரிகமாக நடந்து கொள்ளக் கூடாது.

AKS - 37 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 37 | ஆதலினால் காதல் செய்வீர்

சிவா காயத்ரியின் அறைக்கு சென்று கதவை தட்ட முயற்சி செய்கிறான். பிறகு மனமில்லாமல் திரும்புகிறான். ஆனாலும் அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. சிவா ஹாலுக்கு வருகிறான். அங்கு புனிதாவும், கவிதாவும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். புனிதாவிடம் காயத்ரியை காணவில்லை என்பது பற்றி கேட்கிறான். காயத்ரி ஊருக்கு சென்றுள்ளது பற்றி புனிதா கூறுகிறாள்.

சிவா மிக அமைதியாக வருத்தமாக இருக்கிறான். அதை பார்த்த கவிதா, “காயத்ரி நிச்சயமான பெண் என்பதை நினைவில் கொள்ளுங்கள் சிவா” என்று விளையாட்டாக சொல்கிறாள். அப்போதும் சிவா அமைதியாகவே இருக்கிறான். சிவாவின் மனது காயத்ரியை தேட ஆரம்பித்திருக்கிறது. அது காதலாகவும் இருக்கலாம் அல்லது இவ்வளவு நாட்கள் உடனிருந்து பார்த்துக்கொண்ட அன்பாகவும் இருக்கலாம்.

பொருத்தமான இணையாக இருந்த புனிதா, பரத்தின் இடையில் விரிசல் ஏற்படுகிறது. ராஜேஷுக்கு கவிதாவின் மேல் பிரியம் இருந்தாலும் இடையில் பாண்டியன் உட்கார்ந்திருக்கிறான். காயத்ரியும் சிவாவும் முட்டி, மோதி அடித்துக் கொண்டதை எல்லாம் மறக்கச் செய்து, இருவருக்கும் இடையே மெல்லியதாக ஒரு அன்பின் இழை பின்ன ஆரம்பித்திருக்கிறது.

காத்திருப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு