Published:Updated:

இளைஞர்களுக்கான புத்தம் புதிய டிஜிட்டல் சீரிஸ் - `ஆதலினால் காதல் செய்வீர்' இன்று முதல்!

ஆதலினால் காதல் செய்வீர்
News
ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்க, இன்று முதல் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் 'ஆதலினால் காதல் செய்வீர்' டிஜிட்டல் சீரிஸ் ஒளிபரப்பாகிறது.

'மெட்ராஸ் தின' கொண்டாட்டத்தின் உற்சாகம் தீர்ந்து போவதற்குள் நவீன சென்னையின் மில்லினியல்ஸ் கதை சொல்லும் விகடனின் புதிய டிஜிட்டல் சீரிஸ் ரெடி...

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்க, இன்று முதல் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் 'ஆதலினால் காதல் செய்வீர்' டிஜிட்டல் சீரிஸ் ஒளிபரப்பாகிறது.

ஆதலினால் காதல் செய்வீர்
ஆதலினால் காதல் செய்வீர்

படிப்பு, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வரும் ஆறு பேரை சென்னை எப்படி வரவேற்கிறது, அவர்கள் சென்னையில் ஒரே வீட்டில் தங்க வேண்டிய சூழல் எப்படி அமைகிறது, ஆணும் பெண்ணுமாய் ஒரே ஃபிளாட்டில் அவர்கள் தங்குவது அவர்களின் பெற்றோருக்குத் தெரியுமா, அவர்கள் திடீரென சென்னை வந்தால் என்னென்ன அதிரடி அடிதடிகள் அரங்கேறும்... இப்படி எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் ஏராளமான கேள்விகளுக்குத் தொடரில் பதில் சொல்லப்போகிறது 'ஆதலினால் காதல் செய்வீர்'.

தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றை இயக்கிய ராஜிவ்.கே பிரசாத் இயக்க, திரைக்கதை எழுதியிருக்கிறார் வே.கி.அமிர்தராஜ். கதை ஜோ ஜார்ஜ்.

இளைஞர்களே ரெடியா?!

முதல் எபிசோடை இரவு 8.30 மணி முதல் கீழ்க்காணும் விகடன் டெலிவிஸ்டாஸ் யூடியூப் லிங்கில் காணலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz