Published:Updated:

விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்: “வில்லின்னா அடிக்கிறாங்க!”

அக்‌ஷயா
பிரீமியம் ஸ்டோரி
அக்‌ஷயா

மிகப்பெரிய சவாலா இருந்ததே நடிப்புதான்! என்னுடைய முதல் சீரியல் இதுதான்!

விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்: “வில்லின்னா அடிக்கிறாங்க!”

மிகப்பெரிய சவாலா இருந்ததே நடிப்புதான்! என்னுடைய முதல் சீரியல் இதுதான்!

Published:Updated:
அக்‌ஷயா
பிரீமியம் ஸ்டோரி
அக்‌ஷயா

விஜே-வாக நம்மிடையே அறிமுகமானவர் அக்‌ஷயா. தற்போது சன் டி.வி-யில் பிரைம் டைம் சீரியலான `ரோஜா' தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கே உரித்தான புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

‘‘ஜர்னலிசம் முடிச்சதும் கேம்பஸ் இன்டர்வியூ மூலமா சன் டி.வி-யில் புரொடக்‌ஷன் பிரிவுல எனக்கு வேலை கிடைச்சது. அசிஸ்டென்ட் புரொடியூசரா இருந்து பிறகு புரொடியூசரானேன். நானே சன் மியூசிக், சன் டி.விக்கெல்லாம் தொகுப்பாளரைத் தேர்ந்தெடுத்திருக்கேன். ஒரு நிகழ்ச்சியை எப்படிக் கொண்டு போகணுங்கிற நுணுக்கம் நல்லாவே தெரியும். கூட இருக்கிற ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ‘நீயே ஆங்கரா கிடலாம்’னு பல முறை சொல்லியிருக்காங்க. ‘சரி, டிரை பண்ணிப் பார்க்கலாமே’ன்னு ஆடிஷனில் கலந்துகிட்டேன். எல்லா ஆடிஷனிலும் செலக்ட் ஆகி ஆங்கரானேன்.

விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்: “வில்லின்னா அடிக்கிறாங்க!”
விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்: “வில்லின்னா அடிக்கிறாங்க!”
விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்: “வில்லின்னா அடிக்கிறாங்க!”

எனக்கு காலேஜ் படிக்கும்போதே போட்டோகிராபி மேல அதீத ஆர்வம் இருந்தது. அதனால, எப்பவுமே கேமரா பயம் எனக்கு இருந்ததில்லை. ஷோவுக்கு என்ன தேவைங்கிறது தெரியுங்கிறதனால எனக்கு ரொம்பவே சுலபமா இருந்துச்சு. எல்லாரும் நின்னுட்டேதான் ஆங்கரிங் பண்ணுவாங்க. ஆனா, நடந்துட்டும், டான்ஸ் ஆடிட்டுமெல்லாம் ஆங்கரிங் பண்ணியிருக்கேன். `ஹிட் லிஸ்ட்’, ‘ஃப்ரீயா விடு’, ‘செம மார்னிங்' போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கேன். லைவ் பொறுத்தவரை தலைப்பை முதலிலேயே சொல்லிடுவாங்க. அந்தத் தலைப்புக்கு ஏற்ற மாதிரி நமக்குத் தோணுற விஷயங்களை எல்லாம் பேசலாம். ஆனா, ரியாலிட்டி ஷோக்களைத் தொகுத்து வழங்குறப்போ டீம்ல சொல்ற விஷயங்களை மட்டும்தான் பேசணும். ஆங்கரிங் தொடர்பான சின்னச் சின்ன விஷயங்களைப் படிப்படியா கத்துக்கிட்டேன்.”

``சீரியல் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?’’

“கொரோனா லாக்டௌனில் எனக்குத் திருமணம் ஆச்சு. கொஞ்ச நாள் திருமணத்துக்காக பிரேக் எடுத்துட்டு மறுபடி ஆங்கரிங் பண்ணிட்டிருந்தேன். அந்தச் சமயம் ‘ரோஜா' சீரியலில் ‘அனு' கேரக்டரில் நடிச்சிட்டிருந்தவங்க கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகிட்டாங்கன்னு அந்த ரோலில் நடிக்கிறதுக்காக என்கிட்ட கேட்டாங்க. அப்பவும் டிரை பண்ணிப் பார்க்கலாம்னுதான் ஆடிஷனில் கலந்துகிட்டேன். முதல் சீரியல் ஆடிஷன், நடிப்பு அனுபவம் இல்லை, கண்டிப்பா செலக்ட் ஆக மாட்டேன்னே நினைச்சேன். ஆனா, செலக்ட் ஆகிட்டேன். ரொம்ப ஹேப்பி.’’

``சீரியல் அனுபவம் எப்படி இருந்தது?’’

“மிகப்பெரிய சவாலா இருந்ததே நடிப்புதான்! என்னுடைய முதல் சீரியல் இதுதான்! நடிப்புன்னா என்னன்னே தெரியாது. ஆரம்பத்தில் எப்படிப் பண்ணப் போறோமோன்னு ரொம்பவே பயந்தேன். வடிவுக்கரசி அம்மா, ராஜேஷ் சார், காயத்ரி மேம்னு சீனியர் ஆர்ட்டிஸ்ட் எல்லார்கூடவும்தான் என்னுடைய சீன் எடுத்தாங்க. அவங்க முன்னாடி பண்றப்போ அவ்வளவு பயம் இருந்தது. ஆனா, அவங்க எல்லாரும் என் பயத்தைப் போக்கி ரொம்ப ஃப்ரெண்ட்லியா பேசி இயல்பா நடிக்க வச்சாங்க?”

விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்: “வில்லின்னா அடிக்கிறாங்க!”
விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்: “வில்லின்னா அடிக்கிறாங்க!”
விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்: “வில்லின்னா அடிக்கிறாங்க!”
விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்: “வில்லின்னா அடிக்கிறாங்க!”

``நெகட்டிவ் ரோலில் நடிக்கணுமான்னு யோசிக்கலையா?’’

“யோசிச்சேன். ஏன்னா, நடிப்பே நமக்குப் புதுசு. இதுல வில்லியா நடிக்கணும்னா அதுக்கு சில விஷயங்கள் தேவை. இன்னொன்னு, ஏற்கெனவே அனு கதாபாத்திரத்தில் நடிச்சவங்க மக்கள் மத்தியில் ரிஜிஸ்டர் ஆகிட்டாங்க. அவங்களுக்கு பதிலா நடிக்கும்போது எப்படி என்னை ஏத்துப்பாங்க என்கிற தயக்கம் இருந்துச்சு. ஆரம்பத்தில் அவங்க அளவுக்கு நான் நடிக்கலைன்னெல்லாம் ஆடியன்ஸ் சொன்னாங்க. அனுவா என்னை அவங்க ஏத்துக்க கொஞ்சம் டைம் எடுத்துச்சு. என்னை ஆங்கராகப் பார்த்ததால இந்த சீரியலில் நான் நடிக்கிறேங்கிறதை ஆடியன்ஸ் புரிஞ்சுகிட்டாங்க. அதனால, ‘உங்களைத் திட்டணும்னு தோணலை... ஏன் ரோஜாவை இவ்வளவு டார்ச்சர் பண்றீங்க’ன்னு கேட்பாங்க. இதுவரை பெரிய அளவில் திட்டு வாங்கினதில்லை.”

``சீரியலில் நிறைய அடி வாங்குறீங்களே?’’

“அந்த சோகக்கதையை ஏன் கேட்குறீங்க? இந்த சீரியலில் வில்லி உடல்ரீதியா யாரையும் தாக்க மாட்டா. ஆனா, வில்லியை எல்லாரும் அடிப்பாங்க. கோவிட் சரியாகி நடிக்க வந்த முதல் நாளே அடி வாங்குற சீன்... செம அடி வாங்கினேன்.”

``சீரியலில் மறக்கமுடியாத ஒரு தருணம்?’’

‘‘நான் கோமாவில் இருக்கிற மாதிரி வீட்ல இருக்கிறவங்களை நம்ப வைக்கிற மாதிரியான சீன் எடுத்தாங்க. உண்மையாவே எனக்குக் கோமாதானான்னு செக் பண்ண என்னைக் கண் சிமிட்ட வைக்க முயற்சி பண்ணுவாங்க. அவங்க என்ன பண்ணுனாலும் நான் கண்ணைச் சிமிட்டக் கூடாது. அந்த சீன் எடுக்கும்போது நிஜமாகவே ரொம்ப நேரம் கண்ணைச் சிமிட்டாம இருந்ததால பல தடவை கண்ணீர் வந்துச்சு. அந்த சீன் டெலிகாஸ்ட் ஆனதும் பலரும் என் நடிப்பு நல்லாருந்ததுன்னு பாராட்டினாங்க.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism