Published:Updated:

``வருமானம் குறைச்சல்தான்.. ஆனா, மகிழ்ச்சி கிடைக்குது!" - ஆனந்த கண்ணனின் மாறுபட்ட `கலை அவதாரம்'

anandha kannan
News
anandha kannan

``நான் செய்ற ஆத்மார்த்தமான மற்றும் அர்த்தமுள்ள பணிகளால், வாழ்நாள் தாண்டியும் என் பெயர் நீண்டகாலம் வாழும்."

சன் டிவி மற்றும் சன் மியூசிக் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பிரபலமானவர், ஆனந்த கண்ணன். கிராமியக் கலைகள் மீதான ஆர்வத்தால் சிங்கப்பூரில் குடியேறியவர், தான் கற்ற பாரம்பர்ய தமிழ்க் கலைகளை மேடை நாடகங்கள், தெருக்கூத்துகள், கதைகள் வாயிலாக அந்நாட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கிறார். துடும்பு மற்றும் பறை இசைப் பயிற்சிக்காகச் சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

anandha kannan
anandha kannan

``சன் நெட்வொர்க்ல தொகுப்பாளரா வேலை செய்திட்டிருந்தப்போ, நா.முத்துசாமி ஐயாகிட்ட கூத்துப்பட்டறைப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அப்போதுதான், கிராமியக் கலைகளின் மீதும் ஆர்வம் ஏற்பட்டுச்சு. கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமியக் கலைகளை, அனுபவம் பெற்ற பயிற்சியாளர்களிடம் பல ஆண்டுகளாகக் கத்துக்கிறேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னையில பத்து வருஷம் வாழ்ந்திருக்கேன். ஏழு வருஷத்துக்கு முன்பு சிங்கப்பூரில் குடியேறிட்டேன். நான் கத்துக்கிட்ட கிராமியக்கலைகளை, `ஆனந்தக் கூத்து' என்ற பயிற்சி அமைப்பின் மூலம் சொல்லிக்கொடுக்கிறேன். கிராமியக் கலைகளையும், மேடை நாடகக் கலைகளையும் சிங்கப்பூரிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று இலவசமாகவும் சொல்லிக்கொடுக்கிறோம். இதுவரை 85,000 மாணவர்கள் எங்ககிட்ட பயிற்சி எடுத்திருக்காங்க. இதற்காக இரு அமைப்புகளை நடத்திட்டிருக்கேன்.

anandha kannan
anandha kannan

நம்ம தமிழகத்தில் தோன்றிய கிராமியக் கலைகளை சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமன்றி அந்த நாட்டு மக்களுக்கும் பயிற்றுவிக்கிறோம். இந்தப் பணிகள்தாம் இப்போதைய என் அடையாளம். இதில் எனக்கு வருமானம் குறைவாகக் கிடைச்சாலும், அளவில்லா மகிழ்ச்சி கிடைக்குது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சினிமா நடிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேலை செய்றப்போ, பலரையும் மகிழ்ச்சிப்படுத்தலாம். அது அந்தத் தருணத்துடன் முடிஞ்சுடும். ஆனா, இப்போ என் குழுவினருடன் நான் செய்ற ஆத்மார்த்தமான மற்றும் அர்த்தமுள்ள பணிகளால், வாழ்நாள் தாண்டியும் என் பெயர் நீண்டகாலம் வாழும்.

anandha kannan
anandha kannan

அதனால, தற்சமயம் என் உயிர் போனாலும் சந்தோஷப்படுவேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறும் ஆனந்த கண்ணன், துடும்புப் பயிற்சியில் மும்முரமானார்.