Published:Updated:

`அந்த பத்து மணியை இப்ப வரை எங்களால கடக்கவே முடியலை!' - கலங்கும் சித்ராவின் பெற்றோர்!

சித்ராவின் பெற்றோர்

"வீடு முழுக்க சித்ராவின் புகைப்படங்கள். அவர் வாங்கிக் குவித்த விருதுகள். குடும்பப் புகைப்படங்களில் இருந்த புன்னகையை சித்ராவின் குடும்பத்தினரிடம் பார்க்க முடியவில்லை!"

`அந்த பத்து மணியை இப்ப வரை எங்களால கடக்கவே முடியலை!' - கலங்கும் சித்ராவின் பெற்றோர்!

"வீடு முழுக்க சித்ராவின் புகைப்படங்கள். அவர் வாங்கிக் குவித்த விருதுகள். குடும்பப் புகைப்படங்களில் இருந்த புன்னகையை சித்ராவின் குடும்பத்தினரிடம் பார்க்க முடியவில்லை!"

Published:Updated:
சித்ராவின் பெற்றோர்

விஜே சித்துவாக நமக்கு பரிச்சயமானவர், சித்ரா. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லையாக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டவர். அவரின் திடீர் மரணம் பலருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. சித்ரா இறந்து ஒருவருடம் ஓடிவிட்டது. அவருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி! அவருடைய இல்லத்திற்கு சென்றோம்.

சித்ரா
சித்ரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீடு முழுக்கவும் சித்ராவின் புகைப்படங்கள். அவர் வாங்கிக் குவித்த விருதுகள். குடும்ப புகைப்படங்களில் இருந்த புன்னகையை சித்ராவின் குடும்பத்தினரிடம் பார்க்க முடியவில்லை. அத்தனை கலைநயத்துடன் நம் வீடு என சிறுக, சிறுக கட்டிய அவருடைய கனவு இல்லம் தற்போது கலையிழந்திருந்தது. அவருடைய பெற்றோரிடம் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எப்படி இந்த ஒரு வருஷம் ஓடிப் போச்சுன்னே எங்களுக்கு தெரியலை. அவ இல்லாத ஒவ்வொரு நொடியும் வார்த்தையால விவரிக்க முடியாத அளவு வலியை கொடுத்துச்சு. அவ போனதுக்கு அப்புறம் எங்க குடும்பத்தோட சந்தோசமே போச்சு. நைட்டெல்லாம் தூக்கம் வர மாட்டேங்குது. காலையில் ஷூட்டிங் கிளம்பி போயிடுவா. கரெக்டா பத்து மணிக்கு அவளுக்கு ஃபோன் பண்ணி சாப்டியான்னு கேட்பேன். தினமும் பத்து மணி வந்தாலே அவ ஞாபகம் தான்! அந்த பத்து மணியை இப்ப வரை எங்களால கடக்கவே முடியலை. அப்பாவுக்கு என்ன வேணும், அம்மாவுக்கு என்ன வேணும்னு ஒவ்வொன்னும் பார்த்துப்பார்த்து பண்ணுவா. அவளே போனதுக்கு அப்புறம் நாங்க இருந்து என்ன பண்ணன்னு பல முறை செத்துடலாம்னு கூட யோசிச்சிருக்கோம். இப்படி எங்களை அனாதையா விட்டுட்டு போவான்னு கொஞ்சமும் நினைச்சுப் பார்க்கலை.

சித்ரா
சித்ரா

ஹேம்நாத்தான் என் புள்ளையை கொன்னுட்டான்... அவன் வாழ்க்கையில் வரலைன்னா அவ இன்னைக்கு சந்தோஷமா இருந்திருப்பா. அவன்தான் என் புள்ளையை அடிச்சு கொன்னுட்டான். எல்லா உண்மையையும் மறைச்சிட்டாங்க. 90 நாள் கழிச்சுதான் அந்த ஹோட்டலில் அவ இருந்த ரூமை பார்க்கவே விட்டாங்க. அப்போகூட பெட்ல ரத்தக்கரை இருந்துச்சு. தூக்கு மாட்டி இறந்திருந்தா தொண்டைக்குழி உடைஞ்சிருக்கும். ஆனா, எங்க பொண்ணுக்கு தொண்டைக்குழி உடையல. போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல மூச்சுத்திணறி இறந்திருக்கான்னு சொன்னாங்க. ஆனா, அந்த ரிப்போர்ட்டைகூட இன்னும் எங்க கையில் கொடுக்கலை.

சித்ராவும் சரி, ஹேம்நாத்தும் சரி சத்தமா பேசுறவங்க. அவங்க சண்டை போடுறப்போ கண்டிப்பா ஹோட்டலில் உள்ள எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அவ்வளவு பெரிய ஹோட்டலில் சிசிடிவி ரிப்பேர்னு சொல்றாங்க. அவங்க வெளியில் சொன்னா ஹோட்டல் பெயர் கெட்டுவிடும் உண்மையை மறைச்சிட்டாங்க.

சித்ரா
சித்ரா

பொய்யான சர்டிபிகேட் வச்சு அவசர, அவசரமா ஏன் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணனும்? ஏன் உடனே நிச்சயதார்த்தம் பண்ண சொல்லி வற்புறுத்தணும்? நாங்க தெளிவா சொன்னோம்.. 2020 அவ்வளவா நல்லா இல்லை.. 2021-ல் நிச்சயம், கல்யாணம்னு எல்லாத்தையும் வச்சுக்கலாம்னு சொன்னோம். ஆனா, ஹேம்நாத் கேட்கவே இல்ல.

சித்ராவை, ஹேம்நாத் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னப்போ நாங்க வேண்டாம்னு தான் சொன்னோம். அவன் அம்மாதான் என் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறேன்னு சொல்லி கூட்டிட்டு போனாங்க. நாங்க அவங்க வீட்ல இருக்கிறதாதான் நினைச்சிட்டு இருந்தோம். ஹோட்டலில் அவங்க தங்கியிருந்த விஷயமே எங்களுக்கு ஒருநாள் முன்னாடிதான் தெரியும்.

சித்ரா
சித்ரா

என் புள்ளையை சதி பண்ணி வேணும்னே சாவடிச்சிட்டாங்க. இப்போவரை அவனும் சரி, அவங்க வீட்லேயும் சரி எங்ககிட்ட ஒரு வார்த்தைகூட பேசலை. தப்பு பண்ணாதவன் அவ சாவுக்கு ஏன் வரலை? இன்னைக்கு வரைக்கும் ஏன் எங்களை வந்து பார்க்கலை? அவன் சாவுக்கு காரணம் இல்லைன்னா யார் காரணம்னு சொல்ல சொல்லுங்க" என்றவர் சில நொடி மெளனத்திற்கு பின் தொடர்ந்தார்.

``எங்களால காருக்குத் தொடர்ந்து இஎம்ஐ கட்ட முடியலை. அதனால, காரைத் தூக்கிட்டு போய்ட்டாங்க. இப்ப நாங்க இருக்கிற வீட்டையும் காலி பண்ண சொல்லிட்டாங்க. நாங்கதான் கொஞ்ச நாள் டைம் கேட்டிருக்கோம். அவ ஆசைப்பட்டு வாங்கின வீடும் கைவிட்டுப் போகப்போகுது.

சித்ரா - ஹேம்நாத்
சித்ரா - ஹேம்நாத்

ஏதோ இடம் வாங்கணும்னு அவனுக்கு எங்க கண்ணு முன்னாடி ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தா. சேர்த்து வச்சிருந்த பணம் எல்லாத்தையும் அவன் கேட்கும்போதெல்லாம் தூக்கிதூக்கி கொடுத்தா. ரோட்டில பிச்சை எடுக்கிறவங்க இறந்துட்டாகூட கேஸ் நடத்தி அவர் எப்படி இறந்தார்னு ரிப்போர்ட் கொடுப்பாங்க. ஆனா, எங்களுக்கு இதுவரை எங்க பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு எந்த ரிப்போர்ட்டும் கொடுக்கலை. அவ சாவுக்கான நீதி இன்னமும் கிடைக்கலை. உண்மையை எல்லாரும் சேர்ந்து மறைச்சிட்டாங்க. நாங்க சட்டத்தை நம்பினோம். ஆனா, சட்டம் எங்களை கைவிட்டுடுச்சு.

பணம் இருந்ததால அவங்க உண்மையை மறைச்சிட்டாங்க. எங்ககிட்ட பணம் இல்லாததனால உண்மைக்குக்கூட போராட முடியலை. அவளோட ரசிகர்கள் அப்பப்போ எங்களை வந்து பார்த்துட்டு அவங்களால முடிஞ்ச உதவியை செய்துட்டு போவாங்க.

சித்ரா
சித்ரா

தப்பு பண்ணவனுக்கு கடவுள் கண்டிப்பா தண்டனை கொடுப்பார்! அவன் தான் என் பொண்ணை கொன்னுட்டான். என் பொண்ணு தற்கொலையெல்லாம் பண்ணிக்கலை!" என்றார் உடைந்த குரலில்.