Published:Updated:

`சித்ராவின் ரசிகர்களுக்காகத்தான் அந்த போட்டோஷூட் பண்ணேன்!' - சித்ராவின் `லுக் அலைக்' கீர்த்தனா

கீர்த்தனா
கீர்த்தனா

சித்ரா போன்றே இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் சித்ராவின் புகைப்படத்துடன் இணைக்கப்பட்டு, இவர்தான் அடுத்த முல்லை என்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து கீர்த்தனா என்ற அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு பேசினோம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்த சித்ரா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து இனி அந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து சித்ரா போன்றே இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் சித்ராவின் புகைப்படத்துடன் இணைக்கப்பட்டு, இவர்தான் அடுத்த முல்லை என்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து கீர்த்தனா என்ற அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு பேசினோம்.

முல்லை
முல்லை

``நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு இருக்கேன். டான்ஸ் மாஸ்டரும்கூட. நிறைய டிவி நிகழ்ச்சிகளுக்கு கோரியோகிராப் பண்ணிருக்கேன். மாடலிங்கும் பண்ணிட்டு இருக்கேன். ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சீஸன் - 2-ல கலந்துகிட்டேன். வி.ஜே சித்து சீஸன் - 1 போட்டியாளரா இருந்தாங்க. நான் சீஸன் - 2-வில் என்ட்ரி ஆனதுமே, மேக்கப் ஆர்டிஸ்ட், காஸ்டியூம் டிசைனர்னு நிறைய பேர் நீங்க வி.ஜே சித்து மாதிரியே இருக்கீங்கனு சொல்லியிருக்காங்க. சின்ன சித்துனுதான் என்னைக் கூப்பிடுவாங்க. ஷூட்டிங் போகும்போது சித்ராவும் எனக்கு அறிமுகம் ஆனாங்க.

`நான் உங்கள மாதிரி இருக்கிறதா நிறைய பேர் சொல்றாங்க'னு நான் சித்ராகிட்டயே சொல்லிருக்கேன். `அப்படியா?'னு ஆச்சர்யமா கேட்டாங்க. நான் டிக்டாக்கில் நிறைய வீடியோக்கள் பண்ணுவேன். என்னை வீடியோவில் பார்க்கிற நிறைய பேர் சித்ரா மாதிரியே முகபாவனை இருக்குதுனு கமென்ட் பண்ணுவாங்க. சமூக வலைதளங்கள்ல பகிரப்படும் படங்களுக்கு கூட அப்படியான கமென்ட்ஸ் வரும். அடுத்தடுத்து எல்லாரும் சித்ரா கூட என்னை ஒப்பிடும்போது எனக்குனு இருக்கும் அடையாளத்தை நான் தொலைச்ச மாதிரி இருந்திருக்கு. கோபம் கூட வந்திருக்கு.

கீர்த்தனா
கீர்த்தனா

ஆனா, சித்ராவவோட மறைவுக்குப் பின்னாடி, சித்ராவோட ரசிகர்கள் நிறைய பேர், `உங்களைப் பார்க்கும்போது சித்ரா இன்னும் எங்க கூடதான் இருக்கிற மாதிரி இருக்கு'னு சொல்லும்போது உண்மையில் சந்தோஷமா இருக்கு. என்னை சித்ரா மாதிரி இருக்கீங்கனு சொன்னதெல்லாம் அன்பின் வெளிப்பாடுனு புரிஞ்சுக்க முடியுது.

சமூக வலைதளங்களில் இப்போ பரவிட்டு இருக்குற படங்கள் திங்கள்கிழமை எடுத்த போட்டோஷூட். என்னோட முகம் கிட்டத்தட்ட அவங்க முகம் மாதிரி இருக்கும். அதனால் அவங்க பாண்டியன் ஸ்டோரில் யூஸ் பண்ணின மாதிரியே டிரெஸ் போட்டுகிட்டு போட்டோஷூட் பண்ணேன். உண்மையில் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்கும்னோ, புகழ் தேடியோ இதைப் பண்ணல. சித்ரா அவங்க உழைப்பால் `முல்லை' கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்காங்க. சித்ராவை இழந்து வேதனையில் இருக்குறவங்களுக்கு சின்ன சந்தோஷத்தைக் கொடுக்க முடியும்னு ஒரு நம்பிக்கையில்தான் இந்த போட்டோஷுட்டை பண்ணேன்.

கீர்த்தனா
கீர்த்தனா

ஆனா, இப்போ நான்தான் அடுத்த `முல்லை'னு நிறைய பேர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துட்டு இருக்காங்க. அப்படியான எந்த அழைப்பும் இப்போ வரை எனக்கு வரல. வந்தா நிச்சயம் மக்களின் விருப்பத்தை ஏத்துப்பேன்.'' என்றார் கீர்த்தனா.

அடுத்த கட்டுரைக்கு