Published:Updated:

"புதிய உயிரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்" - பெர்சனல் பகிரும் VJ தியா

தியா

அவரை எழுப்பவும், `ஏன் இவ்வளவு பதட்டத்தோட எழுப்புற... நீ ஓகே தானே'ன்னு கேட்டார். அவர்கிட்ட காட்டினதும் அவர் சந்தோஷப்பட்டு என்னை கட்டிப் பிடிச்சிக்கிட்டார்.

"புதிய உயிரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்" - பெர்சனல் பகிரும் VJ தியா

அவரை எழுப்பவும், `ஏன் இவ்வளவு பதட்டத்தோட எழுப்புற... நீ ஓகே தானே'ன்னு கேட்டார். அவர்கிட்ட காட்டினதும் அவர் சந்தோஷப்பட்டு என்னை கட்டிப் பிடிச்சிக்கிட்டார்.

Published:Updated:
தியா
விஜேவாக நம்மிடையே அறிமுகமானவர் தியா. துறுதுறுவென நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் தியா கில்லாடி. தற்போது பிரசவ இடைவேளையில் இருருக்கும் அவரிடம் பேசினோம்.

"என்னுடைய திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கரியரில் கவனம் செலுத்திட்டு தான் இருந்தேன். கொரோனா லாக்டவுன் வரையிலும் பிஸியாக ஆங்கரிங் பண்ணிட்டு இருந்தேன். என் கணவருடன் சிங்கப்பூரில் இருந்ததால என் யூடியூப் சேனலில் மட்டும் கவனம் செலுத்திட்டு இருந்தேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருநாள் டெஸ்ட் கிட் வாங்கிட்டு வந்தப்போ காலையில் எழுந்ததும் டெஸ்ட் பண்ணனும்னு சொல்லுவாங்க. விடிந்த பிறகு எழுந்து பார்க்கும் அளவுக்கு பொறுமை இல்ல. நைட் ரெண்டு மணிக்கு எழுந்து டெஸ்ட் பண்ணி பார்த்தேன். குட் நியூஸ் தெரிஞ்சதும் செம ஹாப்பி ஆகிடுச்சு. கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்ல. என் கணவர் தூங்கிட்டு இருந்தார். அவரை எழுப்பவும், `ஏன் இவ்வளவு பதட்டத்தோட எழுப்புற... நீ ஓகே தானே'ன்னு கேட்டார். அவர்கிட்ட காட்டினதும் அவர் சந்தோஷப்பட்டு என்னை கட்டிப் பிடிச்சிக்கிட்டார். மறுநாள் விடிஞ்ச பிறகு தான் வீட்டுக்கு போன் பண்ணி எல்லார்கிட்டேயும் சொன்னேன். எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்.

தன் கணவருடன் தியா
தன் கணவருடன் தியா

முதல் மூன்று மாசம் ரொம்ப வாந்தி எடுத்துட்டு இருந்தேன். ஒரு நாளைக்கு 20,30 தடவை வாந்தி எடுப்பேன்னா பார்த்துக்கோங்க! என் வாழ்க்கையிலேயே அப்படியான கஷ்டத்தை நான் அனுபவிச்சதேயில்ல. அந்த நேரம் வீட்டையும், என் அம்மாவையும் ரொம்பவே மனசு தேடுச்சு. அம்மா கையால சாப்பாடு சாப்பிடணும் போல இருந்தது. வெயிட் லாஸூம் ஆகிடுச்சு. நானும், என் கணவரும் மட்டும் சிங்கப்பூரில் இருந்ததால நாங்களே தான் அதெல்லாம் சமாளிச்சிட்டு இருந்தோம். வீட்ல சமைக்கிற ஸ்மெல் பிடிக்காம இருந்துச்சு. பெரும்பாலும் ஆர்டர் பண்ணிதான் சாப்பிட்டோம். ஆரம்பத்தில் சிங்கப்பூரில் தான் டெலிவரி வரைக்கும் இருக்கணும்னுலாம் பிளான் பண்ணினோம். ஆனா, முதல் மூணு மாசத்துலேயே வீட்டுக்கு எப்ப போவோம்னு தோண ஆரம்பிச்சிடுச்சு. மூன்றாவது மாசத்தில் அம்மா இங்க வந்துட்டாங்க. அம்மா வந்ததும் எல்லாமே சரி ஆகிடுச்சு. 5 மாசம் முடியுற தருணம் அம்மா கூட ஊருக்கு வந்துட்டேன்.

நான் வீட்டுக்குள் நுழையும் போது என் அக்கா, அக்கா பையன், நண்பர்கள் எல்லாரும் அங்க இருந்தாங்க. என் அக்கா சீரியல் ஆர்ட்டிஸ்ட்ங்கிறதால அவங்க ஷூட்டுக்காக சென்னையில் இருப்பாங்க. அவங்க இப்போதைக்கு வர மாட்டாங்கன்னு தான் நினைச்சேன். ஆனா, எனக்காக அத்தனை பேர் வருவாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல. அக்கா ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூப்பிட்டாங்க. 'தாய்மை' பாடல்கள் எல்லாம் பிளே பண்ணி செம சர்ப்ரைஸ் கொடுத்தாங்க. ரொம்ப எமோஷனலான தருணமாக இருந்ததால அழுதுட்டேன்.

தியா
தியா

ஊருக்கு வந்ததுமே 7வது மாசம் வளைகாப்பு வச்சிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். நான் பெரிய அளவில் வளைகாப்பு ஃபங்ஷனெல்லாம் அட்டெண்ட் பண்ணினதில்லை. அதனால என் ஃபங்ஷனை நல்லா என்ஜாய் பண்ணினேன். என் மாமியார் வீட்ல எல்லா சடங்கும் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. மனநிறைவா வளைகாப்பு விழா இருந்துச்சு என்றவர் தொடர்ந்து பேசினார்.

அடுத்த மாசம் எனக்கு டெலிவரி டேட் சொல்லியிருக்காங்க. எனக்கு எந்தக் குழந்தைன்னாலும் ஓகே தான்.. ஆனா, என் அக்கா பையன் என்னோட மூத்த பையன் மாதிரி.

தன் அக்காவுடன் தியா
தன் அக்காவுடன் தியா

அவனை என் சொந்தப் பையனாக தான் நினைக்கிறேன். ஒரு பையன், ஒரு பொண்ணுங்கிற ஆசையில் பெண் குழந்தை பிறந்தா நல்லா இருக்கும்ல என்கிற எண்ணம் அப்பப்ப வரும். அதனால எந்த எதிர்பார்ப்பும் இல்ல. எதுவாக இருந்தாலும் எங்க வீட்டுக்கு வர இருக்கிற புதிய உயிரை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்!' என்றார்.