Published:Updated:

ஆங்கர் to ஆக்டர்: “கோயிலில் டான்ஸ் ஆடியதுதான் ஆரம்பம்!”

வி.ஜே கதிர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஜே கதிர்

விகடன் TV

ஆங்கர் to ஆக்டர்: “கோயிலில் டான்ஸ் ஆடியதுதான் ஆரம்பம்!”

விகடன் TV

Published:Updated:
வி.ஜே கதிர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஜே கதிர்

“கோயில் திருவிழாக்களில் டான்ஸ் ஆடிட்டு இருந்தேன்... திருவிழாவின் போது மைக் பிடிச்சுப் பேசுவேன்... அதுதான் என் ஆங்கரிங் பயணத்துக்கான விதை. அதைத் தொடர்ந்து, லோக்கல் சேனலில் ஆங்கரிங் பண்ணிட்டிருந்தேன். பல கட்டப் போராட்டத்திற்குப் பிறகு, இன்னைக்கு எனக்கான அங்கீகாரம் கிடைச்சிருக்கு!” எனப் புன்னகைக்கிறார், வி.ஜே கதிர். இவர், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

“சொந்த ஊர் கோயம்புத்தூர். சின்ன வயசில இருந்தே எனக்கு டான்ஸ் ஆடுறது, கலகலன்னு பேசுறதுன்னா ரொம்பப் பிடிக்கும். எங்க ஊரைச் சுற்றி நடக்கிற கோயில் திருவிழாக்களில் அடிக்கடி டான்ஸ் ஆடப் போவேன். அப்படிப் போகும்போது மேடையில் மைக் பிடிச்சுப் பேசவும் தயங்கமாட்டேன். திருவிழாவில் பலரும் என் பேச்சு நல்லாருக்குன்னு சொல்லுவாங்க. ஸ்கூல், காலேஜ் டைம்ல எல்லாம் நான் அத்லெட்டிக் பிளேயர். ஸ்போர்ட்ஸ்தான் என் எதிர்காலம்னு சுத்திட்டிருந்த சமயம், லோக்கல் சேனலில் ஆங்கரிங் பண்ண வாய்ப்பு கிடைச்சது. அதைப் பண்ணிட்டிருக்கும்போதே, ஊர்ப்பக்கம் நடக்கிற சினிமா ஆடியோ லான்ச், கார்ப்பரேட் ஈவன்ட்ஸ் எல்லாத்தையும் தொகுத்து வழங்கவும் ஆரம்பிச்சேன்.

ஆங்கர் to ஆக்டர்: “கோயிலில் டான்ஸ் ஆடியதுதான் ஆரம்பம்!”

ஒரு ஈவன்ட் பண்ணும்போது டான்ஸ் மாஸ்டர் ஷெரீப்புக்கு என்னோட ஆங்கரிங் பிடிச்சுப் போச்சு. ’நீங்க ஏன் சென்னையில் முன்னணி சேனல்களில் ஆங்கரிங் டிரை பண்ணக் கூடாது’ன்னு கேட்டார். இதே கேள்வியை என்கிட்ட பலரும் இதுக்கு முன்னாடியும் கேட்டிருக்காங்க. நானும், லோக்கல் சேனலில் ஆங்கரிங் பண்ணிட்டிருந்த சமயம் எல்லா சேனல்களுக்கும் வாய்ப்பு கேட்டுப் போயிருக்கேன். பெண் ஆங்கர்தான் எங்களுக்குத் தேவைன்னு வெளிப்படையாவே சொல்லி ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க. இந்த விஷயத்தை அவர்கிட்ட சொன்னேன். அவர் ‘எனக்கு ஏதாச்சும் ஆடிஷன் தெரிஞ்சா உங்களுக்குச் சொல்றேன்’னு சொல்லிட்டுப் போனார். அப்படி அவர் சொல்லித்தான் ஜீ தமிழில் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். ஆங்கரிங்கிற்காக வாய்ப்பு கேட்டு அந்த ஷோவுக்கு வந்தேன். ஆனா, அவங்க ‘ஆங்கரை ஏற்கெனவே செலக்ட் பண்ணிட்டோம்... நீங்க போட்டியாளராகக் கலந்துக்கிறீங்களா’ன்னு கேட்டாங்க. பிறகு, போட்டியாளருக்கு நடந்த ஆடிஷனில் கலந்துகிட்டேன். இரண்டுகட்டத் தேர்வுக்குப் பிறகு என்னை செலக்ட் பண்ணுனாங்க.”

ஆங்கர் to ஆக்டர்: “கோயிலில் டான்ஸ் ஆடியதுதான் ஆரம்பம்!”

``பிறகு ஆங்கரிங் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?’’

``அந்த டான்ஸ் ஷோ பண்ணிட்டிருக்கும்போதே, டான்ஸில் எந்த அளவுக்கு பெர்ஃபாம் பண்றேனோ அதுக்கு ஈக்குவலா ஆங்கரிங்கும் பண்ணிடுவேன். அதைப் பார்த்த பலருக்கும் என் பேச்சு பிடிச்சிருந்தது. அப்படித்தான், ஜீ தமிழில் செலிபிரிட்டி ஸ்பெஷல் ஷோ, ரெட் கார்பெட் எல்லாம் ஆங்கரிங் பண்ண வாய்ப்பு கொடுத்தாங்க. செலிபிரிட்டி ஸ்பெஷல் ஷோவில், விஜய் சேதுபதியைத்தான் முதன்முதலில் இன்டர்வியூ பண்ணினேன். இன்டர்வியூ முடிஞ்சதும், ‘இது உன் முதல் ஷோ மாதிரியே தெரியல... ரொம்ப நல்லா ஆங்கரிங் பண்றே’ன்னு பாராட்டினாரு. அந்த மொமென்ட் ரொம்பவே ஸ்பெஷல்!’’

``சீரியல் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?’’

`` ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ முடிஞ்சதும் ‘டான்சிங் கில்லாடிஸ்’ என்கிற இன்னொரு டான்ஸ் ஷோவில் கலந்துகிட்டேன். அதுக்குப் பிறகு, பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் இல்லை.பொறுமையா காத்திருந்தப்ப ‘செம்பருத்தி’ சீரியலுக்கு செக்கண்ட் லீடு ரோலில் நடிக்கக் கேட்டாங்க. கிடைச்ச வாய்ப்பை சரியாப் பயன்படுத்திப்போம்னு தோணுச்சு. அதனால, ஓகே சொல்லிட்டேன்.’’

ஆங்கர் to ஆக்டர்: “கோயிலில் டான்ஸ் ஆடியதுதான் ஆரம்பம்!”
shabana-shajahan-77

``சீரியல் அனுபவம் எப்படி இருந்தது?’’

``ஆரம்பத்தில் நடிக்கும்போது, உடல்மொழி ஆங்கர்னு காட்டிக்கொடுத்திடும். அதைச் சரி பண்ண கொஞ்சம் டைம் எடுத்துச்சு. ஒரே நாளில், பத்துக்கும் மேற்பட்ட காஸ்ட்யூம் மாற்ற வேண்டியிருக்கும். சில சமயங்களில் விடிய விடியக்கூட ஷூட் போகும். இந்த அனுபவம் எல்லாமே ஆரம்பத்தில் புதுசாதான் இருந்துச்சு. பின் பழகிடுச்சு! இப்போ ‘செம்பருத்தி’ 1,200 எபிசோடு தாண்டி ஒளிபரப்பாகிட்டு இருக்கு. அதில் நானும் ஓர் அங்கமா இருக்கேன்னு சந்தோஷம்!

2014-ல் `கத்தி’ படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் நடந்துச்சு. அந்த நிகழ்ச்சியை நான்தான் தொகுத்து வழங்கினேன். அத்தனை கூட்டத்தையும் ஒரு ஆங்கரா நான் மேனேஜ் பண்ணணும். அந்த நேரத்தில் எனக்கு தளபதி ரசிகர்கள் ரொம்பவே சப்போர்ட் பண்ணினாங்க. தளபதி பட வசனங்களில், பாதியை நான் சொல்லி மீதியை ரசிகர்களைச் சொல்ல வச்சேன். அந்த ஈவன்ட் முடியவும், தளபதி எனக்கு தம்ஸ் அப் காட்டினார். அந்த நிகழ்வை எப்பவும் மறக்க மாட்டேன்.’’