Published:Updated:

``என்னை திட்டணும்னாகூட திட்டுங்க; ஆனா..?!" - `சர்வைவர்' கதை சொல்லும் பார்வதி

VJ Parvathy ( Photo: Instagram / VJ Parvathy )

``யாருமே கார்னர் செய்யாம நானாவேதான் கார்னர் செய்யப்பட்ட மாதிரி உணர்ந்ததா பலர் சொல்றாங்க. ஆனா, நான் கார்னர் செய்யப்பட்டது உண்மை." - பார்வதி

``என்னை திட்டணும்னாகூட திட்டுங்க; ஆனா..?!" - `சர்வைவர்' கதை சொல்லும் பார்வதி

``யாருமே கார்னர் செய்யாம நானாவேதான் கார்னர் செய்யப்பட்ட மாதிரி உணர்ந்ததா பலர் சொல்றாங்க. ஆனா, நான் கார்னர் செய்யப்பட்டது உண்மை." - பார்வதி

Published:Updated:
VJ Parvathy ( Photo: Instagram / VJ Parvathy )

அமர்க்களமான பேச்சால் ஆர்.ஜே.வாக மீடியா பயணத்தைத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து நடிகையாகவும் பரிணமித்திருக்கிறார் பார்வதி. ஹிப்-ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் வெளிவந்த `சிவகுமாரின் சபதம்' திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து சினிமாத்துறையில் அறிமுகமாகியிருக்கிறார் இவர். ஆப்பிரிக்காவில் ஜான்சிபார் தீவில் நடைபெறும் `சர்வைவர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததால் அந்தச் சமயத்தில் வெளிவந்த தன் முதல் திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லையாம். சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறியவரிடம் பேசினோம்.

VJ Parvathy
VJ Parvathy
Photo: Instagram / VJ Parvathy

``இந்தியாவுல நிறைய இடங்களுக்குப் போய் சுத்தியிருக்கேன். ஆனா, இந்தியாவைத் தாண்டினதில்ல. என்னோட பாஸ்போர்ட்டுலேயே ஆப்பிரிக்காதான் ஸ்டாம்ப் குத்தின முதல் வெளிநாட்டுப் பயணம். சர்வைவர் நிகழ்ச்சி பத்தி கேள்விப்பட்டதுமே எனக்கு பிடிச்சுப்போச்சு. நான் செமயான டிராவல் ஃப்ரீக், இந்த வாய்ப்பை எப்படி லேசுல விடுவேன். சர்வைவர்ல கொடுக்குற டாஸ்க்லாம் பண்ணவே முடியாத அளவுக்கு கஷ்டமா இருக்கும் பாருன்னு என்னோட ஃபிரெண்ட்ஸும் சொல்ல, லைட்டா உள்ளுக்குள்ள பீதி எட்டிப்பார்த்துச்சுதான். ஆனாலும், விடுறா வண்டியை ஜான்சிபார் தீவுக்குங்குற ரேஞ்சுல ரெடி ஆனேன். சர்வைவர் நிகழ்ச்சியில என்னோட அணியான வேடர்கள் குழு குடும்பம் மாதிரியும் மூன்றாம் உலகம் பேச்சுலர் ஹவுஸ் மாதிரியுமான ஃபீலை கொடுத்துச்சு. அந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டதுல நல்ல விஷயங்களும் நான் மனசளவுல காயப்பட்ட விஷயங்களும் நிறையவே இருக்கு" எனக் கலவையான உணர்வுகளோடு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் பார்வதி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டீங்க?"

``அட, நீங்க வேற. சர்வைவருக்கு முன் சர்வைவருக்குப் பின் அப்படின்னு எனக்கு மீம்ஸே கிளம்பியிருக்கு. வித் மேக்கப் வித்தவுட் மேக்கப்ன்னு என்னோட பழைய போட்டோக்களையும் புது போட்டோக்களையும் சேர்த்து மீம்ஸ் போடுறாங்க. போதாததுக்கு சிகரெட் பிடிச்சதாலதான் என்னோட உதடு கறுப்பா மாறியிருக்குன்னு ஆராய்ச்சி வேற. என்னைக் கேட்டா நான் இந்தியாவுல இருந்து ஆப்பிரிக்கா போகும்போது ஆப்பிள் மாதிரி இருந்தேன்னும், இப்போ நாவல் பழம் மாதிரி இருக்கேன்னும்தான் சொல்வேன். இதெல்லாம் தேவையா உனக்கு, சர்வைவருக்கு போனதாலதானே இப்படி ஆச்சு, அங்க போயிருக்கவே கூடாதுங்குற எண்ணம் எனக்குத் துளியும் இல்ல. நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கிட்ட சந்தோஷம்தான் மனசெல்லாம் நிறைஞ்சிருக்கு."

Hip hop Aadhi with VJ Parvathy
Hip hop Aadhi with VJ Parvathy
Photo: Instagram / VJ Parvathy

``சர்வைவர் நிகழ்ச்சிக்குள்ள நீங்க இருக்கும்போது உங்களுடைய முதல் படமான `சிவகுமாரின் சபதம்' வெளிவந்துச்சு. இனி நடிகையாகவும் ஃபுல்டைமா திரையில உங்ளைப் பார்க்கலாமா?"

``மதுரையில ஆர்.ஜே.வா இருந்தப்போ ஆதியை முதல்முறையா சந்திச்சேன். அது நல்ல நட்பா மாறி தொடர்ந்துகிட்டு வந்தது. அப்படிதான் ஆதி அவர் இயக்கவிருக்குற படத்தைப் பத்தி என்கிட்ட சொல்லி, என்னை நடிக்கக் கேட்க, நானும் டபுள் ஓகே சொன்னேன். இந்தப் பொண்ணுக்குள்ள என்னமோ இருக்கு பாரேன்னு தோணியிருக்கும் போல அவருக்கு. படம் ரிலீஸ் ஆன அன்னைக்கு என்னோட உடம்பு மட்டும்தான் சர்வைவர் நிகழ்ச்சிக்குள்ள இருந்துச்சு. மனசெல்லாம் படம் எப்படி இருக்கப்போகுதோ, மக்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோன்னு இங்கயேதான் சுத்திக்கிட்டு இருந்துச்சு. இன்னமும்கூட நான் படத்தைப் பாக்கலைங்க."

``சர்வைவர் நிகழ்ச்சியில உங்க கூட கலந்துகிட்ட போட்டியாளர்கள் எல்லாரும் ஏற்கெனவே உங்களுக்கு அறிமுகமானவங்களா, அதுல யார் யார் கூட நிகழ்ச்சிக்கு அப்புறமும் தொடர்புல இருக்க விருப்பப்படுறீங்க?"

``சர்வைவர் நிகழ்ச்சியில கலந்துகிட்டதுல 5, 6 பேரை ஏற்கெனவே நல்லா தெரியும். அதுல சிலரை இன்டர்வியூவும் எடுத்திருக்கேன். என்னதான் முன்னாடியே தெரிஞ்சிருந்தாலும்கூட புரொஃபஷனலாதான் அவங்களைத் தெரியும். நெருங்கி பழகுறதுக்கான வாய்ப்பும் சர்வைவர்லதான் உருவாச்சு. சிலரால மனக்கசப்புகள் ஏற்பட்டிருக்குதான். அதுக்காக இவங்ககிட்டதான் பேசுவேன், இவங்கள பார்த்தாக்கூட கண்டுக்கவே மாட்டேன்னெல்லாம் எனக்கு எதுவுமே இல்ல. அது வெறும் கேம், அவ்ளோதான்."

சர்வைவர்
சர்வைவர்

``சர்வைவர் நிகழ்ச்சியில பல இடங்கள்ல நீங்க டென்ஷன் ஆகியிருந்தீங்க. கார்னர் செய்யப்பட்டதாவும் சொல்லியிருந்தீங்க. என்னாச்சு?"

``சர்வைவர் நிகழ்ச்சியைப் பொறுத்தவரைக்கும் அடிப்படை வசதிகள் மட்டுதான் அங்க தருவாங்க. சிட்டி வாழ்க்கை வாழறவங்க எல்லாம் அங்க கொஞ்ச நாள் தாக்குப்பிடிக்குறதே பெரிய விஷயம். அது முழுக்க முழுக்க புதுசான இடம், இத்தனைக்கும் ஒரு தீவு. புது இடமும், கூட இருக்குற மனுஷங்களும் பழக்கப்படுறதுக்கே பல நாளாகும். சரியான சாப்பாடு, தூக்கம்னு எதுவுமே கிடையாது. அதோட டிவியில நம்ம இமேஜ் தப்பா புரொஜெக்ட் ஆகிடக்கூடாதுங்குற பதற்றமும் கூட சேர்ந்துடுச்சு.

இப்படி கண்ணுக்கு மறைஞ்சு இருக்குற விஷயங்கள் ரொம்பவே அதிகம். பொண்ணுங்களுக்கு அங்க பீரியட்ஸ் நேரங்களைப் பத்தி சொல்லவே வேண்டியதில்லை. மனநிலை மாற்றங்கள் உடல்நிலை மாற்றங்கள்னு போராட்டங்கள் ரொம்ப அதிகம். நாம எப்படி நடந்துக்குறோம்ங்குறது எப்பவுமே நம்ம கையில மட்டுமே இருக்குறதில்லங்குறதுதான் நிதர்சனம். படாத பாடு பட்டுட்டேன். யாருமே கார்னர் செய்யாம நானாவேதான் கார்னர் செய்யப்பட்ட மாதிரி உணர்ந்ததா பலர் சொல்றாங்க. ஆனா, நான் கார்னர் செய்யப்பட்டது உண்மை."

``சர்வைவர் நிகழ்ச்சியில கழிப்பறை பயன்படுத்துறதுக்கு குளிக்குறதுக்கான வசதிகள் எப்படி இருந்துச்சு?"

``சர்வைவர் நிகழ்ச்சி கஷ்டமா இருக்கும்னு என் ஃபிரெண்ட்ஸ் சொன்னப்ப எல்லாம் பார்த்துக்கலாம் போ'ங்குற மனநிலைதான் எனக்கு. கழிப்பறை போறதுக்கும் குளிக்குறதுக்கும் கஷ்டப்பட்டபோதான் அவங்க சொன்னதோட வீரியமே புரிஞ்சது. நான் சரியா குளிச்சே கிட்டத்தட்ட இருபது நாள்களுக்கு மேல ஆகுது. சிட்டி வாழ்க்கை வாழ்ந்த எங்களை அதோ அங்கதான் பாத்ரூம் போகணும்னு பார்க்குற இடத்தை கைகாமிச்சதும் மிரண்டுட்டோம். நல்லவேளையா பாத்ரூம் போறதுக்கு மட்டும் ஏதோ ஒரு வழியை அமைச்சுக்கொடுத்தாங்க. ஆழமான குழிக்கு மேல டாய்லெட்டை பொருத்தின மாதிரியான செட்டப்தான் எங்களை நாங்க ஆசுவாசப்படுத்திகுறதுக்கான இடம். இதுவாச்சும் அமைச்சுக்கொடுத்ததாலதான் பீரியட்ஸ் டைமை சமாளிக்க முடிஞ்சது. இல்லைன்னா அவ்ளோதான் நாங்க. "

பார்வதி
பார்வதி

``பிக்பாஸுக்கு ஜூலின்னா சர்வைவருக்கு பார்வதின்னு உங்களைக் கிண்டல் அடிக்குறாங்களே? ட்ரோல்களுக்கு உங்க பதிலென்ன?"

``நான்லாம் முழுக்க முழுக்க ட்ரோல்களாலேயே வளர்ந்து வந்த பொண்ணு. என்னை ட்ரோல் பண்றாங்களேன்னு கோபப்படுறதுக்கோ வருத்தப்படுறதுக்கோ எதுவுமே இல்ல. ஸ்க்ரீனுக்கு முன்னாடியும் பின்னாடியும் நான் இப்படிதான். என்னை ஏத்துக்குறவங்க ஏத்துக்கட்டும். பிடிக்காதவங்களுக்காக என்னை நான் மாத்திக்க முடியாது. ஜூலியை பத்தி பேசுறதுக்கோ ட்ரோல் பண்றதுக்கோ எனக்கு எந்த உரிமையும் இல்ல. என்னை ட்ரோல் பண்றவங்க பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க; என்னை ட்ரோல் பண்ணணும்ன்னா பண்ணுங்க, திட்டணும்ன்னா கூட திட்டுங்க. ஆனா, எனக்குன்னு ஒரு தனித்தன்மை இருக்கு. இவங்கள மாதிரி அவங்கள மாதிரின்னு என்னை கம்பேர் பண்ணிப் பேசுறதுலாம் எனக்குப் பிடிக்காது."

``சர்வைவர் நிகழ்ச்சியில பொண்ணுங்களை பாலியல் துன்புறுத்தல்கள் பண்ணுறதா செய்தி வெளிய பரவிவருது. அதையே லேடி காஷும் சொல்லியிருக்காங்க. உண்மை என்ன?"

``லேடி காஷுக்கும் எனக்கும் நல்ல பாண்டிங் இருக்கு. பர்சனலா எனக்கு அந்த மாதிரி எந்த அசௌகர்யமும் ஏற்படலை."

VJ Parvathy
VJ Parvathy
Photo: Instagram / VJ Parvathy

``சர்வைவர் ஷோவுக்கு அப்புறம் நீங்க மாத்திக்கணும்ன்னு நினைக்குற விஷயங்கள் ஏதாவது இருக்கா?"

``மனசுல தோணுறத ரொம்பவே வெளிப்படையா பேசிடுவேன். ஏதாவது பிரச்னை ஏற்படுறப்போ என்னோட தரப்புல இருக்குற நியாயத்தைப் புரியவைக்க முயற்சி பண்ணுவேன். என் பக்கத்துல இருக்குற நியாயத்தைப் புரியவைக்க நினைக்குறப்போ அது சண்டை போடுற மாதிரியான டோன்ல மத்தவங்களுக்கும் போய்ச்சேர, அதுவே மத்தவங்க என்னை கலாய்க்குறதுக்கான வாய்ப்பாவும் மாறிடும். அது பிரச்னையோட முடிஞ்சா பரவாயில்ல; ஏழரையையும் சேர்த்துக் கூட்டிடும் எனக்கு. அதுதான் சர்வைவர் நிகழ்ச்சியிலயும் நடந்துச்சு. எந்த வாதமா இருந்தாலும் அதை இன்னும் பக்குவமா எடுத்துவைக்கணும்ங்குறதை நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்."