Published:Updated:

யூடியூபர் பார்வதி : "நானே ஒரு பெரிய சைக்கோ `சர்வைவர்'ல 18 பேரை சமாளிக்க மாட்டேனா?"

யூடியூபர் பார்வதி
யூடியூபர் பார்வதி

''செக்ஸ் பத்தி வெளிப்படையா பேசறதுல தப்பில்லைன்னு நினைக்கிறேன். எத்தனை பேர் செக்ஸ்ல திருப்தி இல்லாமலேயே வாழ்க்கையை நகர்த்திட்டிருக்காங்க தெரியுமா?'' - யூடியூபர் பார்வதி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செப்டம்பர் 12 முதல் ஒளிபரப்பாக இருக்கும் ரியாலிட்டி ஷோ 'சர்வைவர்'. ஜான்சிபார் எனப்படும் டான்ஸானியாத் தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கி இருக்க, அங்கிருந்து ஒளிபரப்பாக இருக்கிறது நிகழ்ச்சி. போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்வாகி ஜான்சிபார் தீவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் யூடியூபர் பார்வதியிடம் பேசியிருந்தோம்.

'சர்வைவர்' நிகழ்ச்சிக்கு உங்களை எப்படித் தேர்ந்தெடுத்தாங்க... 90 நாட்கள் எப்படி இருக்கப் போறீங்க?

யூடியூபர் பார்வதி
யூடியூபர் பார்வதி

ஆக்சுவலி நானே ஒரு பெரிய சைக்கோ. என்னைப் பத்திப் பொதுவா என்ன ஒரு அபிப்ராயம்னா 'இந்தப் பொண்ணு 18 ப்ளஸ்ஸாதான் கேள்வி கேப்பா'னு சொல்வாங்க. ஆனா இதுதான் என் ஆட்டிடியூட். 'சர்வைவர்'ங்கிற பெயரே என்னுடைய இந்த ஆட்டிடியூடுக்கு ஏத்த மாதிரி இருக்கிறதால வாய்ப்பு வந்ததும் டக்குனு பிடிச்சுக்கிட்டேன். எந்த நாடா இருந்தா என்ன? ஒரு பதினெட்டு பேரை சமாளிக்க முடியாதா? இதுவரை எத்தனை பேரை மேனேஜ் பண்ணியிருப்பேன். அதனால, பார்த்துக்கலாம்னுதான் கிளம்பினேன். ஏற்கெனவே தனியா இமாலயாக்குப் போயிருக்கேன். அந்த அனுபவம் கொஞ்சம் கை கொடுக்கும்னு நம்புறேன்.

டாஸ்க் நிறைய இருக்கிறதா சொல்றாங்களே?

யூடியூபர் பார்வதி
யூடியூபர் பார்வதி

என்னுடைய உடம்புல ஸ்டாமினா இருக்குனு நம்புறேன். ட்ரெக்கிங் மாதிரியான விஷயங்கள் எனக்கு ஏற்கெனவே கொஞ்சம் பிடிக்கும். அதனால உடல் ரீதியான பயிற்சிகள் எனக்கு பெருசா தெரியல. அதேநேரம் மன ரீதியா கொஞ்சம் தயாராகிக்கணும்னு நினைக்கிறேன்.

உங்களுடைய 'சிவகுமாரின் சபதம்' படம் பத்தி சொல்லுங்க?

படத்துல நான் இரண்டாவது ஹீரோயின். நடிகர் 'ஹிப்ஹாப்' ஆதி நான் மதுரை ரேடியோவுல வேலை பார்த்திட்டிருந்தப்ப அறிமுகமானார். அந்தத் தொடர்புல எனக்கு இந்தப் படத்துல வாய்ப்பு கிடைக்கவும் அவர்தான் காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி, உங்க பேரைச் சொன்னாலே 'ஆன்ட்டி, அடல்ட்'னு ஒரு பெரிய விவாதமே கிளம்பிடுதே?

யூடியூபர் பார்வதி
யூடியூபர் பார்வதி

நான் ஒளிவு மறைவில்லாமப் பேசுறேன். அதுதான் காரணம். ஏன் பேசக் கூடாதா? செக்ஸ் பத்தி வெளிப்படையாப் பேசுறதுல தப்பில்லைன்னு நினைக்கிறேன். எத்தனை பேர் செக்ஸ்ல திருப்தி இல்லாமலேயே வாழ்க்கையை நகர்த்திட்டிருக்காங்க தெரியுமா? எத்தனை பேர் செக்ஸ்ங்கிற பேர்ல கொடுமைக்கு ஆளாகுறாங்க தெரியுமா? இதையெல்லாம் வெளிப்படையாப் பேசினாத்தான் தீர்வு வரும். நான் எனக்குத் தோணுற விஷயங்களை பேசிட்டேத்தான் இருப்பேன்.

அடுத்த கட்டுரைக்கு