சினிமா
Published:Updated:

விகடன் TV: “இது டிக்டாக்கால் வந்த வாய்ப்பு!”

பிரணிகா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரணிகா

சின்ன வயசுல இருந்தே டாக்டர் ஆகணுங்குறதுதான் ஆசை. அதனால ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே நீட் கோச்சிங்கூட எடுத்துக்கிட்டேன்

“ரியாலிட்டி ஷோவுல‌ என்னுடைய நடிப்பைப் பார்த்த பலரும், நான் பெரிய பொண்ணுன்னு நினைச்சிட்டிருக்காங்க. ஆனா, நான் இப்போதான் ஸ்கூல் முடிச்சிருக்கேன்’’ என்று ஆச்சர்யப்படுத்துகிறார் பிரணிகா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ ஷோவில் பல கெட்டப்புகளில் கலக்கிக்கொண்டிருக்கும் பிரணிக்குச் சொந்த ஊர் திருச்சியாம்.

‘`சின்ன வயசுல இருந்தே டாக்டர் ஆகணுங்குறதுதான் ஆசை. அதனால ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே நீட் கோச்சிங்கூட எடுத்துக்கிட்டேன். ஆனா விதின்னு ஒண்ணு இருக்கில்லையா? ஃப்ரீ டைம்ல ‘ரிலாக்ஸா இருக்குமே’ன்னு டிக்டாக் பண்ணட்டுமான்னு அம்மாகிட்ட கேட்டேன். ‘நீ நடிச்சு என்கிட்ட கொடு; எப்படி இருக்குன்னு பார்த்துட்டு நானே அப்லோடு பண்றேன்’னு சொன்னாங்க. அப்படி வெளியான டிக்டாக் வீடியோக்கள் நிறைய ஷார்ட் பிலிம் வாய்ப்புகள் கிடைக்கக் காரணமா அமைஞ்சது. அப்புறம் அதன் தொடர்ச்சியா விஜய் டிவியில் ‘பாவம் கணேசன்’ சீரியல்ல நடிக்கக் கூப்பிட்டாங்க. நடிப்பும் பிடிச்சுப் போச்சு. டிவி, சினிமான்னு இனிமே இந்த ரூட்ல போக வேண்டியதுதான்’’ என்கிற பிரணிகா, இப்போது ‘ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்’ படிப்புக்கு விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கிறார். ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களிலேயே சின்னப்பொண்ணு இவர்தானாம்.

பிரணிகா
பிரணிகா

‘`எனக்கு வினோத் பாபு அண்ணாதான் ஜோடி. அவர் எனக்கு நிறைய விஷயங்கள் கத்துக் கொடுத்தார். அவர் மட்டுமல்ல, அந்த செட்ல ஒவ்வொருத்தரும் அவங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்களை எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க. ஷோவுல டிடி அக்கா மாதிரி ஆங்கரிங் பண்ணி ஒரு ஸ்கிரிப்ட் பண்ணினேன். அதைப் பார்த்துட்டு மதுரை முத்து அண்ணா ‘உன்னை விஜய் டிவியில் நிச்சயம் ஆங்கரிங் பன்ணவும் கூப்பிடுவாங்க’ன்னார். கேட்டப்ப ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு’’ எனச் சிரிப்பவர், இயக்குநர் சற்குணத்தின் படத்திலும் நடிக்கிறார்.