Published:Updated:

விகடன் TV": ‘டி.டி சந்திச்ச பிரச்னைகள் ஏராளம்!’

பிரியதர்ஷினி
பிரீமியம் ஸ்டோரி
பிரியதர்ஷினி

- பிரியதர்ஷினி

விகடன் TV": ‘டி.டி சந்திச்ச பிரச்னைகள் ஏராளம்!’

- பிரியதர்ஷினி

Published:Updated:
பிரியதர்ஷினி
பிரீமியம் ஸ்டோரி
பிரியதர்ஷினி
குழந்தை நட்சத்திரம், தொகுப்பாளர், சீரியல் நடிகை... இவற்றையெல்லாம் தாண்டி, டெலிவிஷனில் ‘ஸ்வீட் அண்ட் க்யூட்’ எனப் பெயரெடுத்த டிடியின் உடன்பிறந்த அக்கா. அடைமொழிகள் போதுமில்லையா..? ‘கலர்ஸ்’ தமிழ்த் தொலைக்காட்சியின் ‘பஜன் சாம்ராட்’ நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் இருந்த பிரியதர்ஷினியிடம் கேட்டேன்.

“எல்லாமே கடந்து வந்த பாதைதான். ஆனா கடைசியாச் சொன்னீங்களே, அது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. டிடியை டச் பண்ணாம என்னுடைய எந்தப் பேட்டியும் முடிஞ்சதே கிடையாது. என் தங்கை எனக்கு என்னைக்குமே ச்சோ ஸ்வீட்தான். சரி, பேசலாம்” எனத் தயாரானார்...

விகடன் TV": ‘டி.டி சந்திச்ச பிரச்னைகள் ஏராளம்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஆள் அப்படியேதான் இருக்கீங்க. அதுவும்போக இப்ப என்ன வயசாகிடுச்சு. அதுக்குள் பஜன், அது இதுன்னு ஆன்மிகம் தொடர்பான நிகழ்ச்சிப் பக்கம் வந்துட்டீங்க?’’

“குழந்தையா இருக்கிறப்பவே நடிக்கத் தொடங்கினேன். ஆங்கரிங் பண்ணினேன். கல்யாணம் ஆகி குடும்பம், பசங்கன்னு ஆனதும் கொஞ்சம் பிரேக் விட்டேன், ஆனாலும் டிவி என்னை விடாமத் துரத்தி வந்து மறுபடியும் கூப்பிடுது. அப்படிக் கூப்பிடறதே பெரிய விஷயமில்லையா? அடுத்து ஆள் அப்படியே இருக்கேன்னா, அதுக்குப் பின்னாடி பெரிசா எந்த ரகசியமும் இல்லை. மனசை எப்பவும் ஃப்ரீயா வச்சிருந்தா, நாம அப்படியேதான் இருப்போம். நீங்க வேணாலும் ட்ரை பண்ணிப் பாருங்க. அப்புறம், `பஜன் சாம்ராட்’ மாதிரியான ஒரு ஷோவைப் பண்றப்ப ரொம்ப கவனமா இருக்கணும். அப்படிப்பட்ட ஒரு ஷோவுக்கு என்னை நம்பிக் கூப்பிட்டாங்க. க்ளாசிக்கல் டான்ஸ் எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம். நடனமும் பாட்டும் ஒண்ணுக்கொண்ணு பிரிக்க முடியாததில்லையா, அதனால இந்த ஷோவை என்னால பண்ண முடியும்னு தோணுச்சு. டிவியில இந்த மாதிரி ஒரு ஷோவும் புதுசா இருந்ததால பண்ணலாம்னு தோணுச்சு, மத்தபடி எல்லாவிதமான ஷோவும் பண்ணிட்டேனே. இதையும் பார்த்துடலாமே!”

விகடன் TV": ‘டி.டி சந்திச்ச பிரச்னைகள் ஏராளம்!’

“ `36 வயசுல தனிமையில’ன்னு சமீபத்துல டிடி போட்டிருந்த பதிவு பத்தி..”

‘`சிலர் தங்களுடைய பிரச்னைகளை வெளியில பேசவே தயங்குவாங்க. ஆனா ‘ஆமா எனக்கு இவ்ளோ பிரச்னைகள் இருக்கு, அதனால் என்ன’ன்னு கேக்கறதுக்கே ஒரு கெத்து வேணும். என் தங்கைகிட்ட அது இருக்கு. சான்ஸே இல்ல, அவங்க சந்திச்ச பிரச்னைகள் எனக்கெல்லாம் வந்திருந்தா நான் என்னவாகியிருப்பேன்னு எனக்குத் தெரியாது. அதனால டிடியை நினைக்கிறப்ப எனக்கு எப்பவுமே பெருமையாதான் இருக்கும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism