ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பாடி ஷேமிங்... சமந்தா... விவாகரத்து... அடுத்த திட்டம்! - ‘விஜே’ ரம்யா ஓப்பன் டாக்!

விஜே ரம்யா
பிரீமியம் ஸ்டோரி
News
விஜே ரம்யா

சமந்தாவை அவங்க நடிகையாகிறதுக்கு முன்னாலருந்தே எனக்குத் தெரியும். அப்பல் லாம் நாங்க ஒண்ணாதான் வொர்க் அவுட் பண்ணுவோம்.

பெயருக்கு முன்னால் உள்ள ‘விஜே’ என்ற வார்த்தையே போதும். ரம்யாவுக்கு வேறு அறிமுகம் அவசியமில்லை நிகழ்ச்சித் தொகுப்பாளர், மாடல், நடிகை, ஃபிட்னெஸ் ஆர்வலர் என பன்முகம் கொண்டவர். ‘ஸ்டாப் வெயிட்டிங்’ (Stop Weighting ) என்ற புத்தகத்தின் மூலம் எழுத்தாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஃபிட்னெஸ் தொடர்பான தன் அனுபவங்களின் தொகுப் போடு, ஃபிட்னெஸ்ஸில் ஆர்வமுள்ளோரின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் அளிக்கும்படியான முழுமையான புத்தகமாக இதை எழுதியுள்ளார்.

ரம்யாவுக்கு மீடியாவில் இது 20-வது ஆண்டு. எடைக்குறைப்பு முயற்சி முதல், நடிகை சமந்தாவுடனான நட்பு, விவாகரத்து, சினிமா என ரம்யாவிடம் கேட்க நமக்கு ஏராளமான விஷயங்கள்... சொல்லவும் அவரிடம் எக்கச்சக்க விஷயங்கள்...

தொகுப்பாளர் எழுத்தாளரான கதையோடு பேச ஆரம்பித்தார்...

பாடி ஷேமிங்... சமந்தா... விவாகரத்து... அடுத்த திட்டம்! - ‘விஜே’ ரம்யா ஓப்பன் டாக்!

``2020 லாக்டௌன்ல வீட்டுல இருந்த டைம். அப்படியொரு சூழல்ல என் மனசை திசைத்திருப்ப சும்மா எழுத ஆரம்பிச்சேன். அதை பத்தி என் ஃபிரெண்டுகிட்ட பேசிட் டிருந்தபோது, ‘நீ எழுதற விஷயங்களையே ஒரு பப்ளிகேஷனுக்கு புரொபோசலா கொடுக்கலாமே’ன்னு சொன்னார். நானா வது, புக் எழுதறதாவதுனு சிரிப்புதான் வந்தது. ‘உன்னால முடியும்’னு அந்த நண்பர் தந்த நம்பிக்கையில பெங்குயின் பப்ளிகேஷனுக்கு புரொபோசல் அனுப்பினேன். அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. ஃபிட்னெஸ் பய ணத்துல என் பல வருஷ அனுபவங்களோடு, ஃபிட்னெஸ் தொடர்பான பொதுவான சந்தேகங்கள், ஹெல்தி ரெசிப்பீஸ், பலரும் செய்யும் தவறுகள்னு இது ஒரு கம்ப்ளீட் கைடா வழிகாட்டும்...’’ ஆர்வம் கூட்டுகிறது ரம்யாவின் இன்ட்ரோ.

மீடியாவில் 20 வருடங்களைத் தக்க வைப்பதென்பது சாதாரண காரியமல்ல. அவமானங்களையும், ட்ரோலையும் எதிர் கொண்ட இளம் தொகுப்பாளினி, இன்றைய போல்டு அண்ட் பியூட்டிஃபுல் வெர்ஷனுக்கு மாறிய அழகிய டிரான்ஸ்ஃபர் மேஷன் பலரும் அறியாதது.

``இப்ப நீங்க பார்க்குற ரம்யாவைத்தானே பலருக்கும் தெரியும். 13 வயசுல ஸ்கூல் படிச்சிட்டிருந்தபோது மீடியாவுக்கு வந்த போது ரிப்பன்கூட சரியா கட்டத் தெரியாம எண்ணெய் வெச்சுப் படிய வாரின தலையும் சோடா புட்டி கண்ணாடியுமா ஃபேஷன் சென்ஸே இல்லாமதான் இருந் தேன். ஸ்கூல் டேஸ்ல ராத்திரி, பகல் பார்க் காம எப்ப பார்த்தாலும் படிச்சிட்டே இருப்பேன். படிக்கும்போதெல்லாம் ஏதாவது சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன். ‘எக்சர்சைஸ் பண்ணு’ன்னு அப்பா திட் டிட்டே இருப்பாரு. என்னதான் எக்சர் சைஸ் பண்ணாலும் வெயிட் குறையாது. மீடியாவுக்கு வந்த புதுசுல என்னைப் பார்க்கிறவங்க, ‘அந்த ஷோவுல அவ்ளோ குண்டா இருந்தீங்களே...’னு கேட்க ஆரம் பிச்சாங்க. ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. கேள்விப்படற எல்லா டயட் டையும் ஃபாலோ பண்ணியிருக்கேன். ஜூம்பாவுல தொடங்கி, ஏரோ பிக்ஸ், யோகானு நான் பண்ணாத விஷயமே இல்லை. அப்பதான் ஒரு டிரெயினர் அறிமுகமானாங்க. சாப்பாடு, வொர்க் அவுட்டுனு எல்லாத்துலயும் நான் என்ன வெல்லாம் மாத்தணும்னு சொன்னாங்க. அதுதான் என் வாழ்க்கையில பெரிய ஷிஃப்ட்டுனு சொல்வேன். அங்கே ஆரம் பிச்ச ஓட்டம் இதுவரை நிற்கலை. ரொம்ப சின்ன வயசுலயே ஆங்க்கரிங் பண்ண ஆரம்பிச்சேன். பல வருஷங்கள் ஒரே வேலையைப் பண்ணியாச்சு. ஒரு கட்டத்துல அடுத்து என்னங்கிற கேள்வி குடைய ஆரம்பிச்சது. அதனால ஏற்பட்ட ஸ்ட்ரெஸ்லேருந்து மீள எனக்கு கைகொடுத்தது வொர்க் அவுட்ஸ்தான். வொர்க் அவுட் பண்ணும்போது என் கவனம் வேற எங்கேயும் போகாது. பண்ணி முடிச்சதும் ரொம்ப பாசிட்டிவ்வா ஃபீல் பண்ணுவேன். நல்லா தூங்க ஆரம்பிச்சேன். சரியா சாப்பிட ஆரம் பிச்சேன். அந்த புராசெஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. இப்ப நீங்க பார்க்குற ரம்யா, ஃபிட்னெஸ்ல ஆர்வம் வந்ததால மாறினவங்க.

மீடியாவுக்கு வந்த புதுசுல என்னுடைய எல்லா ஷோஸ்லயும் என் மேக்கப், டிரஸ்னு எல்லாத்தையும் வெச்சுக் கிண்டலடிச்சி ருப்பாங்க. ஜோக்குங்கிற பெயர்ல அவங்களுக்கு கன்டென்ட் கொடுக்கிற ஆளா நான்தான் இருந்திருக்கேன். அப்ப இருந்த ரம்யாவுக்கு அதை எதிர்த்துப் பேசத் தெரியலை. இப்ப இருக் குற ரம்யா அப்படியில்லை. இன்னிக்கு யாராவது யாரை யாவது பாடி ஷேமிங் பண்ணினா, உடனே ஹேஷ் டேக் ரெடி பண்ணி, சோஷியல் மீடியாவுல டிரெண்டாக்கிடு வாங்க. இன்னிக்கு மேக்கப்பே இல்லாத சாய் பல்லவியை பார்க்கிறபோதும், ஜிம்முக்கு போய், ஒரு ஃபிரேமுக்குள்ள தன்னை சுருக்கிக்காத நித்யா மேனனையும் பார்வதியையும் பார்க்கும்போது அவ்ளோ சந்தோஷமா இருக்கு...’’ - ரம்யாவின் பேச்சில் நிஜமான மகிழ்ச்சி.

ரம்யாவின் புத்தகத்துக்கு வாழ்த்துக் கூறி, ட்வீட் செய்திருந்தார் அவரின் நெருங்கிய தோழியும் நடிகையுமான சமந்தா. ‘மயோசைட் டிஸ்’ எனும் பிரச்னையால் அவதிப்படும் சமந்தாவின் மனம்திறந்த சமீபத்திய பேட்டியை எடுத்திருந்தவர் ரம்யா.

``சமந்தாவை அவங்க நடிகையாகிறதுக்கு முன்னாலருந்தே எனக்குத் தெரியும். அப்பல் லாம் நாங்க ஒண்ணாதான் வொர்க் அவுட் பண்ணுவோம். இப்பவும் அவங்க சென்னை வர்றாங்கன்னா எனக்கு கால் பண்ணி, ‘நான் வரேன்... ரெண்டு பேரும் வொர்க் அவுட் பண்ணுவோம்’னு சொல்லிடுவாங்க. ஃபிட் னெஸ்ல அவங்களுக்கும் அதீதமான ஈடுபாடு உண்டு. நாங்க அடிக்கடி திருப்பதி போவோம். ஒரு க்ரூப்பா போவோம். ஆனா நாங்க ரெண்டு பேர் மட்டும் ரெண்டு மணி நேரத்துல கிடுகிடுனு மலையேறி முடிச்சிடுவோம். இந்தப் புத்தகம் ரெடியானதும் சமந்தாகிட்ட சொன் னேன். அதை பத்தி சோஷியல் மீடியாவுல பேச உடனே ஓகே சொன்னாங்க. அவங்க இப்ப இருக்குற நிலைமையில இதைப் பண்ண ணும்னு அவசியமே இல்லை. அதையும் மீறி பண்ணாங்க.

பொதுவா யாரை பேட்டி எடுத்தாலும் அவங்க என்னதான் எனக்கு நெருக்கமான வங்களா இருந்தாலும் ஓர் எல்லைக்கோடு வரைஞ்சிட்டு தான் பேசுவேன். ஃபிரெண்ட் ஷிப்பை எல்லாம் மீறி அந்த இடத்துல என் வேலையை கரெக்ட்டா செய்யணும்னு தான் நினைப்பேன். அப்படித்தான் சமந்தா பேட்டிக்கும் தயா ரானேன். உள்ளே நுழைஞ்சு அவங்களைப் பார்த்த கணமே நான் எமோஷனலாயிட்டேன். அதுக்கு முன்னாடி நான் அவங்களை அப்படிப் பார்த் ததே இல்லை. என்னை அறியாம என் கண்கலங்கிடுச்சு. அவங்க எப்படிப்பட்ட நிலையில இருக்காங்கனு தெரிஞ்சது. ஆனா, அது நிரந்தரமில்லை. அவங்க பயங்கர பவர்ஃபுல்லான பெண். அவங்களுக்கு இருக்கிற பிரச்னை இன்னிக்கோ, நாளைக்கோ சரியாயிடக் கூடியதில்லை. அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும். அதுலேருந்தெல்லாம் மீண்டு அவங்க வேற லெவல்ல திரும்ப வருவாங்கன்னு நம்பறேன்...’’ - தோழிக்காக நெகிழ்பவருக்கும் பர்சனல் வாழ்க்கையில் பல பிரச்னைகள்... குறிப்பாக விவாகரத்து, அது எழுப்பிய விமர்சனங்கள்...

பாடி ஷேமிங்... சமந்தா... விவாகரத்து... அடுத்த திட்டம்! - ‘விஜே’ ரம்யா ஓப்பன் டாக்!

``ஆறு வருஷங்களுக்கு முன்னாடி நடந்த விஷயம்... வருத்தமாதான் இருந்தது. ‘எனக்கேன் இப்படி நடந்தது’ங்கிற கேள்வி இருந்தது. எல் லாரும் ஏன் என்னைத் தப்பா நினைக்கிறாங் கனு தோணுச்சு. அடுத்து இதை பத்தியே நினைச்சு என் லைஃபை அழிச்சுக்கப் போறேனா, இதுலேருந்து மீண்டு வரப் போறேனா’னு யோசிச்சேன். கடைசியா... அதுக்கான தீர்வு... இந்த நாலு ஸ்டேஜையும் தாண்டி முடிவெடுக்க எனக்கு 8 மாசங்களாச்சு. கூட இருக்கிறவங்கள்ல யார் உண்மையான ஃபிரெண்ட்ஸ், யார் ஃபிரெண்ட்ஸ் மாதிரி நடிக்கிறாங்கனு புரிஞ்சுகிட்டேன். அடுத்து லைஃப் என்னவாகப் போகுதுங்கிற கவலை என் பெற்றோருக்கும் எனக்கும் இருந்தது. ஆனாலும் அதைத் தாண்டி நான் ஒரு முடிவெடுத்தாகணுமே... திரும்பிப் பார்த்தா அது சரியான முடிவுதான்னு தெரியுது. லைஃப் ஒண்ணும் மோசமாவும் இல்லை.

சின்ன வயசுலேருந்து ஆங்க்கரிங் பண்றேன். வீட்டுல என்ன துக்கம் நடந்தாலும் அதை மறந்துட்டு நான் என் வேலையைப் பார்க்கப் பழகியிருந்தேன். டைவர்ஸ் ஸ்டேஜ்லயும் அப்படித்தான். வீட்டுல அழுதுட்டிருந்திருப் பேன். சோகமான மனநிலையில இருந்திருப் பேன். ஷூட்டிங்கும் போக வேண்டியிருக்கும். அங்கே மக்கள் என்னைப் பார்க்குற விதமே வேற மாதிரி இருக்கும். ஷூட் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்ததும் மறுபடி மனசு வேற மாதிரி ஆயிடும். நான் அந்த ஸ்டேஜை தாண்டி வந்துட்டேன். அதே நிலைமையில இப்ப உள்ளவங்களைப் பார்க்கறேன். அவங்க வலி தெரியாம, ‘இப்பதான் இப்படி ஆயிருக்கு... ஆனா எவ்ளோ ஜாலியா இருக்கா பாரேன்’னு பேசறவங்களையும் பார்க்கறேன். கமென்ட் அடிக்கிறவங்க, பாதிக்கப்பட்டவங்களோட இடத்துல இருந்து யோசிச்சா நல்லதுனு தோணுது...’’ - சக மனிதர்களின் மனசாட்சியாக ஒலிக்கிறது ரம்யாவின் குரல்.

அடுத்தென்ன என்ற கேள்விக்கு ஆயிரம் ஆப்ஷன்ஸ் ரம்யாவிடம்...

``லாக்டௌன் டைம்ல `இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டகிரேட்டிவ் நியூட்ரிஷன்', நியூ யார்க்ல ரெண்டு வருஷ கோர்ஸ் படிச்சேன். ‘ஸ்டேஃபிட்வித் ரம்யா’னு ஆன்லைன்ல பிசினஸ் ஆரம்பிச்சு நிறைய பெண்களுக்கு ஃபிட்னெஸ் சொல்லித் தரேன். சோஷியல் மீடியா இன்ஃப்ளுயென்சரா இருக்கேன். அடுத்து ஒரு படத்துல முக்கியமான கேரக் டர்ல நடிக்கிறேன். இருக்குறது ஒரு வாழ்க்கை... என்னவெல்லாம் பண்ணத்தோணுதோ, பண்ணுவோமே.’’

கலக்குங்கள் ரம்யா!