சினிமா
Published:Updated:

விகடன் TV: “அஞ்சு நிமிடப் பேட்டிக்கு பயந்தேன்!”

ரீஷ்மா சோனா
பிரீமியம் ஸ்டோரி
News
ரீஷ்மா சோனா

செய்தி வாசிச்சிட்டிருந்தவளைக் கூப்பிட்டு செலிபிரிட்டி இன்டர்வியூ எடுக்கச் சொன்னதும் முதல்ல தயக்கம் இருந்தது.

ஆங்கரிங்... அங்கிருந்து செய்தி வாசிப்பு என டி.வி-க்குள் ரவுண்டு வந்த ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சியின் ரீஷ்மா சோனாவை, இப்போது ‘கேள்விக் களம்’ நிகழ்ச்சியின் நெறியாளராகக் களம் இறக்கிவிட்டிருக்கிறார்கள்.

“சென்னைப் பொண்ணுதான் நான். பள்ளியில் படிக்கிறப்பவே மீடியாமேல ஆர்வம் வந்திடுச்சு. ஆனா நல்ல மார்க் எடுத்திருந்ததால் பி.டெக்., அதுவும் அண்ணா யுனிவர்சிட்டியில கிடைச்சதால, வீட்டுல அதுக்குத்தான் முன்னுரிமை கிடைச்சது. அந்த நேரம் அழுதெல்லாம் அடம் பிடிச்சேன். ‘கிடைச்ச நல்ல கோர்ஸைப் படி; படிச்சு முடிச்சுட்டு உனக்குப் பிடிச்ச மீடியாவுக்குப் போய்க்கோ’ன்னு அப்போதைக்கு ஆறுதலாப்பேசி அனுப்பி விட்டுட்டாங்க.

விகடன் TV: “அஞ்சு நிமிடப் பேட்டிக்கு பயந்தேன்!”

படிப்பு மூணாவது வருஷம் போய்க்கொண்டிருந்த போதே மக்கள் டி.வி-யில் நடந்த தொகுப்பாளர் ஆடிஷன்ல ‘சும்மா கலந்து பார்ப்போமே’ன்னு போக, தேர்வாகிட்டேன். முதன்முதலா டி.வி-யில் என் முகம் வந்தது குழந்தைகளுக்கான அந்த நிகழ்ச்சிதான். கொஞ்ச நாள் அந்த வேலையைப் பண்றதுக்கும் என் படிப்பு முடியறதுக்கும் சரியா இருந்தது.

பிடிச்ச வேலையைச் செய்யறதுக்கு ஏற்கெனவே கிரீன் சிக்னல் கிடைச்சிருந்ததால, படிப்பு முடிஞ்சதும், நேரா சன் நியூஸ் சேனலுக்கு வந்துட்டேன்’’ என்றவரிடம், அவர‌து ‘ஐந்து நிமிடப் பேட்டி’ அனுபவத்தைக் கேட்டேன்.

விகடன் TV: “அஞ்சு நிமிடப் பேட்டிக்கு பயந்தேன்!”

‘`செய்தி வாசிச்சிட்டிருந்தவளைக் கூப்பிட்டு செலிபிரிட்டி இன்டர்வியூ எடுக்கச் சொன்னதும் முதல்ல தயக்கம் இருந்தது. அதுவும் அஞ்சு நிமிஷத்துக்குள் என்னத்த பேட்டி எடுக்கறதுன்னு நினைச்சேன். பெரிய பெரிய ஜாம்பவான்கிட்ட பேசறதுக்கு நிறைய இருக்குமே. அவங்கெல்லாம் ‘அஞ்சு நிமிஷம் பேசணும்னா, எப்படி சம்மதம் சொல்வாங்க’ன்னெல்லாம் குழப்பமா இருந்தது. ஆனா அந்த ஃபார்மட் நல்ல ஹிட் ஆக, நிறைய பேர்கிட்ட பேசினேன்” என்று உற்சாகமாகிறார்.