Published:Updated:

விகடன் TV: திருமணம் பேட்டியில் நிச்சயிக்கப்பட்டது!

பிரபா - சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
பிரபா - சசிகலா

நான் எப்பவும் கலகலன்னு பேசிட்டு இருக்கிற ஆளு. அதனால பேட்டிக்கு முன்னாடியும் பின்னாடியும் இவர்கிட்டயும் அதேபோலப் பேசினேன்

விகடன் TV: திருமணம் பேட்டியில் நிச்சயிக்கப்பட்டது!

நான் எப்பவும் கலகலன்னு பேசிட்டு இருக்கிற ஆளு. அதனால பேட்டிக்கு முன்னாடியும் பின்னாடியும் இவர்கிட்டயும் அதேபோலப் பேசினேன்

Published:Updated:
பிரபா - சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
பிரபா - சசிகலா

‘திருட்டு விசிடி’ங்கிற படத்தின் புரொமோஷனுக்காக படத்தின் ஹீரோவுடனான பேட்டிங்க அது. படத்துக்கு புரொமோஷன் கிடைச்சதோ இல்லையோ, அந்த ஹீரோவுக்கு வாழ்க்கையில புரொமோஷன் கிடைக்கக் காரணமானது அந்தச் சந்திப்புதான். பேட்டி எடுக்கப் போன பொண்ணு நான்... பேட்டி கொடுத்த அந்த ஹீரோ இப்ப என்னுடைய ரியல் ஹீரோ ஆகியிருக்கிற பிரபா’’- லாக் டௌனில் தனக்கு நடந்த கல்யாணம் குறித்துக் கலகலவெனச் சிரித்தபடி பேசத் தொடங்கினார் வி.ஜே சசிகலா.

‘`நான் எப்பவும் கலகலன்னு பேசிட்டு இருக்கிற ஆளு. அதனால பேட்டிக்கு முன்னாடியும் பின்னாடியும் இவர்கிட்டயும் அதேபோலப் பேசினேன். ஆனா நிஜமாகவே மனுஷனுக்கு நான் அக்கா மாதிரி தெரிஞ்சேனா, அல்லது, குறும்புக்காகப் பண்ணினாரா தெரியாது, என்னை ‘அக்கா’ன்னே கூப்பிட்டார். போகப்போகத்தான் ‘எங்க ரெண்டு பேருக்கும் ஒரே வயசு’ங்கிறது தெரிய வந்தது’’ என்றவரிடம், ‘சரி லவ் புரப்போஸ் பண்ணின கதைக்கு வாங்க’ என்றதும், முந்திக்கொண்டு பேசினார் பிரபா.

விகடன் TV: திருமணம் பேட்டியில் நிச்சயிக்கப்பட்டது!

‘`ஆரம்பத்துல நண்பர்களாகவே இருந்தோம். ‘உங்களை லவ் பண்றேன்’னெல்லாம் புரப்போஸ் பண்ணவே இல்லை. திடீர்னு ஒரு நாள் எங்க வீட்டுல இருந்து எல்லாரையும் கூட்டிட்டு அவங்க வீட்டுக்குப் போயிட்டேன். அங்க அவங்க அம்மாகிட்டயே ‘உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்’னு ஸ்ட்ரெயிட்டா மேட்டரை ஓப்பன் பண்ணியாச்சு. ஆரம்பம் அதிரடியா இருந்தாலும், அந்தச் சந்திப்பு மூலம் எங்க ரெண்டு பேர் குடும்பத்துக்கிடையிலும் ஒரு நல்ல நட்பு உண்டாகிடுச்சு. அந்தத் தொடர்பு மேலும் மேலும் வளர்ந்ததுல ஒருகட்டத்துல எங்க கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் கிடைச்சது’’ என்கிறார்.

திருமணத்துக்குப் பிறகு டிவி, சினிமாவில் தொடர்வதற்கும் சசிகலாவுக்கு கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாம்.

விகடன் TV: திருமணம் பேட்டியில் நிச்சயிக்கப்பட்டது!

‘`செம ஜாலியான கூட்டுக்குடும்பமா இருக்கு என்னுடைய புகுந்த வீடு. என் அம்மாகூட திருமணத்துக்குப் பிறகு நடிக்க வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா, மாமியார் வீட்ல என் ஆசைக்கு எந்தத் தடையும் சொல்லலை. பொதுவெளியில என்னை அடையாளம் கண்டுபிடிச்சு யாராவது பேசினாங்கன்னா, என்னைவிட அதிகம் சந்தோஷப்படறாங்க என் மாமனார் வீட்டில்’’ என்கிறார் சசி.

கொரோனா காரணமாக திருமணம் எளிமையாக நடந்ததில் இருவருக்குமே கொஞ்சம் வருத்தம்தானாம். கோவிட் சூழல் சரியானதும் வரவேற்பு இருக்குமென்கிறார்கள்.

வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism