Published:Updated:

விகடன் TV: “கல்யாணத்துக்கு அப்புறம் கனவு நனவானது!”

உதயநந்தினி
பிரீமியம் ஸ்டோரி
உதயநந்தினி

தொடர்ந்து பல தனியார் சேனல்களுக்கு ஏறி இறங்கினேன். ஆனா அவங்க தோற்றத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தாங்க

விகடன் TV: “கல்யாணத்துக்கு அப்புறம் கனவு நனவானது!”

தொடர்ந்து பல தனியார் சேனல்களுக்கு ஏறி இறங்கினேன். ஆனா அவங்க தோற்றத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தாங்க

Published:Updated:
உதயநந்தினி
பிரீமியம் ஸ்டோரி
உதயநந்தினி

செய்தி வாசிப்பாளர்களோ நிகழ்ச்சித் தொகுப்பாளர்களோ பெரும்பாலும் தனியார் சேனல்களைச் சேர்ந்தவர்களின் அனுபவங்களையே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளரின் அனுபவம் எப்படியிருக்கும்? அதிலும் உதயநந்தினியின் அனுபவம் ரொம்பவே வித்தியாசம்!

“பள்ளியில் படிக்கிறபோது நான் பள்ளி மாணவர் தலைவர். அப்போது தினமும் காலையில் கூடும் அசெம்பிளியில் அன்றைய முக்கியச் செய்திகளை வாசிப்பேன். அப்போது தொடங்கிய கனவுதான் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் ஆவது என்ற விருப்பம் ‘மருத்துவர் ஆவேன்’, `இன்ஜினீயர் ஆவேன்’ என்ற சக மாணவர்களுக்கு மத்தியில் என் கனவைச் சொன்னபோது, ‘என்னாது செய்தி வாசிக்கப் போறியா?’ என ஒரு மாதிரியாகப் பார்த்தவர்கள் ஏராளம். கல்லூரி முதலாண்டு முடித்த உடனேயே வீட்டில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கனவை அப்படியே மூட்டை கட்டி வைத்துவிட்டுக் குடும்பத்தைக் கவனிக்கத் தொடங்கி இரு குழந்தைகளுக்கு அம்மாவானேன்” என்று தொடர்கிறார் நந்தினி.

சில ஆண்டுகள் கடந்தன. குழந்தைகள் கொஞ்சம் வளர, புதைந்து கிடந்த நந்தினியின் கனவு மீண்டும் துளிர்க்கத் தொடங்கியது. எல்லாக் குழந்தைகளும் `சின்சான்’, `டோரிமான்’, `பஜ்ரங்கி’ எனப் பார்த்துக் கொண்டிருக்க, தன் பிள்ளைகளுக்குச் செய்திச் சேனல்களைக் காட்டத் தொடங்கினார். ‘அம்மாவும் இப்படிச் செய்தி படிக்கத்தான் ஆசைப்பட்டேன்’ என அவ்வப்போது பிள்ளைகளிடம் சொல்ல, அதைக் கேட்ட அவரின் கணவர் பிரபு, மனைவியின் கனவு நனவாக உதவியிருக்கிறார்.

விகடன் TV:  “கல்யாணத்துக்கு அப்புறம் கனவு நனவானது!”

“தொடர்ந்து பல தனியார் சேனல்களுக்கு ஏறி இறங்கினேன். ஆனா அவங்க தோற்றத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தாங்க. அந்த நேரத்துலதான் தூர்தர்ஷன்ல ஆள் தேவைன்னு கேள்விப்பட்டு விண்ணப்பம் போட்டேன். `தூர்தர்ஷனெல்லாம் யாருங்க பார்க்கறாங்க’ன்னு கேக்கறாங்கதானே, ஆனா அங்க வேலை கிடைக்கறது பெரிய கஷ்டம். விண்ணப்பம் டெல்லி போய் வரும். சமயத்துல ரெண்டு வருஷம் கழிச்சுக்கூடக் கூப்பிடுவாங்க. என்னை ஆடிஷன் பண்ணினது ஷோபனா ரவி மேடம். கலந்துகிட்டவங்களில் முதல் ஆளாகத் தேர்வானேன்’’ என்ற நந்தினி.

‘மக்கள் யாரும் பொதிகை பார்க்கறதில்லை’ங்கிற கருத்து பொதுவெளியில இருக்கறதை மறுக்க முடியாது. அதேநேரம் எங்க செய்திகளின் வீச்சு எங்களுக்குத் தெரியும். கிராமப்புறங்களில் இன்னைக்கும் எங்க செய்தி பார்க்கிற ஆள் இருக்காங்க. அவர்களில் சிலர் ‘உங்க ஃபேன்’னு சொல்லி ஆபீஸுக்கே என்னைத் தேடி வந்ததெல்லாம் நடந்திருக்கு” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism