Published:Updated:

ஓ.டி.டி ஓட்டப்பந்தயத்தில் யார் நம்பர் ஒன்?

ஓ.டி.டி ஓட்டப்பந்தயத்தில் யார் நம்பர் ஒன்?
பிரீமியம் ஸ்டோரி
ஓ.டி.டி ஓட்டப்பந்தயத்தில் யார் நம்பர் ஒன்?

ஓ.டி.டி தளங்களில் மக்களின் ஃபேவரைட் என்ன என்றும் ஆனந்த விகடன் ட்விட்டர் பக்கத்தில் கேட்டோம்.

ஓ.டி.டி ஓட்டப்பந்தயத்தில் யார் நம்பர் ஒன்?

ஓ.டி.டி தளங்களில் மக்களின் ஃபேவரைட் என்ன என்றும் ஆனந்த விகடன் ட்விட்டர் பக்கத்தில் கேட்டோம்.

Published:Updated:
ஓ.டி.டி ஓட்டப்பந்தயத்தில் யார் நம்பர் ஒன்?
பிரீமியம் ஸ்டோரி
ஓ.டி.டி ஓட்டப்பந்தயத்தில் யார் நம்பர் ஒன்?
லாக்டௌன் காலத்தில் கொஞ்சம் டிவி, கொஞ்சம் ஓ.டி.டி ஸ்ட்ரீமிங் என்றுதான் மக்களின் பொழுது பெருமளவில் கழிந்திருக்கிறது.

விகடன் சமூக வலைதள பக்கங்களிலும் இணையதளத்திலும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளும் அதையே எடுத்துக்காட்டுகின்றன. ‘இந்த லாக்டௌன் சமயம் மக்களுடைய மிகப்பெரிய பொழுதுபோக்கு என்ன?’ என்ற கேள்விக்கு சுமார் 37.37 சதவிகித மக்கள் சேனல்/ஓ.டி.டி படங்கள் என்ற ஆப்ஷனையே தேர்ந்தெடுத்திருக்கின்றனர். ஓ.டி.டி தளங்களில் மக்களின் ஃபேவரைட் என்ன என்றும் ஆனந்த விகடன் ட்விட்டர் பக்கத்தில் கேட்டோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

45.5 சதவிகித மக்கள் அமேசான் ப்ரைம் வீடியோவைத்தான் தேர்ந்தெடுத்தனர். மக்களின் அபிமான சேவையாக ப்ரைம் இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதிகப்படியான உள்ளூர்த் திரைப்படங்கள் அமேசானில்தான் ஸ்ட்ரீமாகிறது. ‘பொன்மகள் வந்தாள்’ போன்ற நேரடி ரிலீஸ்கள் ப்ரைமின் அந்தஸ்தை மக்களிடையே இன்னும் அதிகப்படுத்தத்தான் செய்திருக்கிறது. ஃபேமிலி மேன், ப்ரீத், பாதள் லோக் என அமேசானின் இந்திய வெப்சீரிஸுமே நல்ல வரவேற்பையே பெற்றுவருகின்றன. குறைந்த விலை, அத்துடன் ப்ரைம் டெலிவரி, ப்ரைம் மியூசிக் எனப் பிற சேவைகள் என நம்ம ஊரு மக்களுக்குச் சரியான பேக்கேஜாக இருக்கிறது ப்ரைம் வீடியோ.

ஓ.டி.டி ஓட்டப்பந்தயத்தில் யார் நம்பர் ஒன்?
ஓ.டி.டி ஓட்டப்பந்தயத்தில் யார் நம்பர் ஒன்?

அடுத்த ஃபேவரைட் நெட்ஃப்ளிக்ஸ். 36.2 சதவிகித மக்கள் தங்களது அபிமான ஓ.டி.டி பிளாட்பாரமாக நெட்ஃப்ளிக்ஸைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். ப்ரைம் வீடியோவுக்கு நேரெதிரான தளமாக நெட்ஃப்ளிக்ஸைப் பார்க்கலாம். உள்ளூர் கன்டென்ட்டைவிட சர்வதேச கன்டென்ட்டையே பெருமளவில் நம்பி யிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். அதற்காக இந்திய கன்டென்ட்டே இல்லை என்று இல்லை. ஆனால் அமேசானுடன் ஒப்பிட்டால் மிகவும் குறைவான இந்தியப் படங்களையே கொண்டிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். ஆனால் சேவைத் தரம், முக்கிய ஆங்கிலத் தொடர்கள் என ஏ-சென்டர் ஆடியன்ஸின் முதல் தேர்வாக இருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். விலையும் அதற்கு ஏற்றவாறுதான் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில்தான் இந்தியாவில் கால்தடம் பதித்தது டிஸ்னி+ சேவை. கிட்டத்தட்ட பாதி ஹாலிவுட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருக்கும் டிஸ்னி ஏற்கெனவே இந்தியாவிலிருந்த ஹாட்ஸ்டாருடன் இணைந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாரானது. இந்தியாவில் இருப்பதிலேயே அதிக சந்தாதாரர்களை வைத்திருந்தாலும் இந்த லாக்டௌனில் மக்களைப் பெரிதும் ஈர்க்காமல் போனதற்குக் காரணம் விளையாட்டுத் தொடர்கள் அனைத்துமே ரத்தானதுதான். கிரிக்கெட்தான் இந்த சேவையின் உயிர்நாடி, அதனால் ஐபிஎல் நடக்காதது பெரும் பின்னடைவுதான். இருந்தாலும் பழைய அனிமேஷன் படங்கள், சூப்பர்ஹீரோ படங்கள் என அனைத்தையும் தமிழிலும் டப் செய்து விட்டிருக்கிறார்கள். வீட்டில் ஒரு சுட்டி இருக்கிறார் என்றால் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரும் நிச்சயம் இருக்கும்.

ஓ.டி.டி ஓட்டப்பந்தயத்தில் யார் நம்பர் ஒன்?

தமிழில் சன் நெக்ஸ்ட் அளவுக்கு கன்டென்ட் வைத்திருக்கும் தளமே இல்லையென்றாலும் மக்கள் தங்களது அபிமான சேவையாக அதைப் பெருமளவில் தேர்ந்தெடுக்கவில்லை. இதற்குக் காரணம் சன் நெக்ஸ்ட் சுமாரான மென்பொருள் அனுபவம்தான். அது மட்டும் இன்னும் சரிசெய்யப்பட்டால் ‘டாப்’பா வரலாம். இதுபோக, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், ஜியோ சினிமா போன்ற டெலிகாம் சேவையுடன் வரும் ஓ.டி.டி சேவைகளும் சூப்பர் என மக்கள் கமென்ட்களில் பதிவிட்டனர். இலவச சேவையான MX பிளேயருக்கும் வெகுவான வரவேற்பு இருப்பதைப் பார்க்க முடிந்தது.

ஸ்ட்ரீமிங் அளவுக்கு கேமிங்கும் இந்த லாக்டௌன் நேரத்தில் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. பப்ஜி ஆடுறவன் மட்டும் கேமர் இல்ல... லூடோ ஆடுறவனும் கேமர்தான் என்றாகிவிட்டது. விகடன் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகளின்படி இந்த லாக்டௌனில் அதிகம் பொழுதுபோக்காக இருந்த கேம் லூடோ கிங்தான். 39.88 சதவிகித வாக்குகளுடன் அடுத்த இடத்தில் 32.25 சதவிகித வாக்குகள் பெற்ற பப்ஜியை முறியடித்து ‘கேம் ஆஃப் தி லாக்டௌன்’ ஆகியிருக்கிறது லூடோ கிங். கூகுள் ப்ளே ஸ்டோரிலும் அதிக டவுன்லோடுகளைப் பெற்றிருக்கிறது இந்த டிஜிட்டல் தாய விளையாட்டு. இதற்குக் காரணம் அதன் எளிமைதான். யார் வேண்டுமானாலும் ஆடலாம், பெரிய கிராபிக்ஸ் எல்லாம் தேவையில்லை என்பதால் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் தன்வசம் ஈர்த்திருக்கிறது லூடோ கிங்.

இப்போது லாக்டௌன் கொடுத்திருக்கும் இந்தப் புதிய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதுதான் இந்த நிறுவனங்களுக்கு முன் இருக்கும் மிக முக்கிய சாவல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism