Published:Updated:

"சித்ராவின் நெஞ்சில் காயம் ஏற்பட்டது எப்படி... அவரை ஓங்கி குத்தியது யார்?!"- நடிகர் அஸீம்

நடிகை சித்ரா
நடிகை சித்ரா

"சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்பதை நான் நம்ப மாட்டேன். தைரியமானப் பெண் அவர். சைக்காலஜி படித்தவர். கவுன்சிலிங்கில் தேர்ச்சி பெற்றவர். மற்றவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மன அழுத்தத்தில் இருந்து காப்பாற்றக்கூடியவர் சித்ரா."

சின்னத்திரை நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் அஸீம். தற்போது நடைபெற்றுவரும் 'பிக்பாஸ் சீசன் -4' ரியாலிட்டி நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்ட்ரியாகக் கலந்துகொள்ள இருந்தவர் அஸீம். இதற்காக க்வாரன்டீனிலும் இருந்தார். ஆனால், கருத்துவேறுபாடு காரணமாக திடீரென க்வாரன்டீனில் இருந்து வெளியேவந்து சித்ராவின் இறுதி மரியாதையில் கலந்துகொண்டார் அஸீம். சின்னத்திரை வட்டாரத்தில் சித்ராவுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான அவரிடம் பேசினோம்.

"சித்ரா எனக்கு 2011-ல் இருந்து பழக்கம். அவங்க எம்ஜிஆர் ஜானகி காலேஜ்ல படிக்கும்போது அங்க நான் சிறப்பு விருந்தினரா போயிருந்தேன். ஒரு நடனப்போட்டியில் ஜெயிச்ச சித்ராவுக்குப் பரிசு கொடுத்தேன். அப்படித்தான் சித்ரா எனக்குப் பழக்கம். என்னிடம் டிவி தொகுப்பாளராக வேண்டும் என்கிற ஆசையைப் பகிர்ந்துகிட்டாங்க. நான் ஒரு சேனலுக்குப் பரிந்துரை பண்ணேன். ஆனால், அங்கே அவங்க செலக்ட் ஆகலை. பின்னர் அவங்களே பல முயற்சிகள் எடுத்து நிகழ்ச்சித் தொகுப்பாளராகிப் பின்னர் நடிகையாக மாறினாங்க. நானும் அவங்களும் ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம்.

சித்ரா
சித்ரா

சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்பதை என்னால் நம்பமுடியலை. நான் நம்பவும் மாட்டேன். தைரியமானப் பெண் அவர். சைக்காலஜி படித்தவர். கவுன்சிலிங்கில் தேர்ச்சி பெற்றவர். மற்றவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மன அழுத்தத்தில் இருந்து காப்பாற்றக்கூடியவர் சித்ரா. அப்படிப்பட்டவருக்கு மன அழுத்தம் ஏற்படும்போது அதில் இருந்து வெளியே வரத்தெரியாதா? சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார் என செய்திகள் வந்தபோது 'தற்கொலை எதற்கும் தீர்வல்ல' என முதல் ஸ்டேட்டஸ் போட்டவர் சித்ராதான்.

போன் ஆடியோவால் கைதான ஹேமந்த் - நடிகை சித்ரா தற்கொலைக்கு என்ன காரணம்?
"உண்மையாகவே சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டார் என்றால் அவ்வளவு தைரியமானப் பெண் இந்த முடிவுக்குச் செல்ல யார் காரணம், அவரை மன அழுத்தத்தில் தள்ளியது யார்? எனக்கு சித்ரா பதிவுத்திருமணம் செய்துகொண்ட ஹேமந்த் மட்டுமல்லாமல் அவரின் நண்பர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது. ஒரு குழு சம்பந்தப்பட்டிருப்பதுபோல் எனக்குத் தெரிகிறது."
அஸீம்
அஸீம்
அஸீம்

சித்ரா மரணத்துக்கு முந்தைய நாள் இரவு ரியாலிட்டி ஷோ ஷூட்டிங்கில்தான் கலந்துகொண்டிருக்கிறார். அவ்வளவு ஜாலியாக, சந்தோஷமாக இருந்திருக்கிறார். மன அழுத்தத்தில் இருந்ததற்கான சுவடே அவரிடம் இல்லை என்கிறார்கள். அப்படிப்பட்டவர் எப்படி தற்கொலை செய்துகொண்டார்? சித்ராவின் கன்னம் மற்றும் தாடையில் இருக்கும் காயம் சித்ராவே தற்கொலை முயற்சியின்போது ஏற்படுத்திக்கொண்டது என்கிறார்கள். அவர் நகத்துக்குள் இருந்த சதை சித்ராவினுடையது என்கிறார்கள். ஆனால், சித்ராவின் நெஞ்சில் காயம் ஏற்பட்டிருக்கிறதே எப்படி? சித்ராவே தூக்கு மாட்டும்போது நெஞ்சில் அடித்துக்கொண்டிருப்பாரா? ஓங்கி குத்தியதற்கான தடயங்கள் இருந்தது என்கிறார்களே!

ஹேமந்த்தின் கூட்டாளிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக எனக்கு சந்தேகம் இருக்கிறது. போலீஸ் முழுமையாக விசாரிக்கவேண்டும்" என்றார் அஸீம்.

அடுத்த கட்டுரைக்கு