Published:Updated:

‘ரோஜா’ சீரியலில் இருந்து வெங்கட் வெளியேறியது ஏன்... நடிகரின் குற்றச்சாட்டும், விளக்கமும்!

வெங்கட்

''இந்த சீரியலைப் பொறுத்தவரைக்கும் என்ன கேரக்டர்ல கமிட் ஆனாரோ அந்த கேரக்டருக்கு உண்டான முக்கியத்துவத்தை நாங்க கடைசி வரைக்கும் தந்திருக்கோம்.''

‘ரோஜா’ சீரியலில் இருந்து வெங்கட் வெளியேறியது ஏன்... நடிகரின் குற்றச்சாட்டும், விளக்கமும்!

''இந்த சீரியலைப் பொறுத்தவரைக்கும் என்ன கேரக்டர்ல கமிட் ஆனாரோ அந்த கேரக்டருக்கு உண்டான முக்கியத்துவத்தை நாங்க கடைசி வரைக்கும் தந்திருக்கோம்.''

Published:Updated:
வெங்கட்

விஜய் டிவியின் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஜீவா, சன் டிவியின் ‘ரோஜா’ தொடரில் அஷ்வின் என ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி சேனல்களின் சீரியல்களில் நடித்து வந்த நடிகர் வெங்கட், ரோஜா சீரியலில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

கொரோனாக்குப் பிந்தைய தனது உடல்நிலையே வெளியேற்றத்துக்கான காரணம் என்றதுடன் நிறுத்தவில்லை வெங்கட். மேலும் சில காரணங்கள் என அவர் சொல்லியிருக்கும் விஷயங்கள்தான் சின்னத்திரை வட்டாரத்தில் இப்போது பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன.

'' 'ரோஜா’ சீரியலில் தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை, புரொமோவில் தன் முகத்தைக் காட்டுவதில்லை, ரோஜா சீரியல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா கேரக்டரைச் சொல்லி ஆடியன்ஸ் கூச்சலிட, அதனால் சிலர் கடுப்பானார்கள்'' என்கிற ரீதியில் நீள்கின்றன வெங்கட்டின் அந்தப் புகார்கள்.

வெங்கட்டின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ‘ரோஜா’ சீரியலின் தயாரிப்பாளர்களான சரிகம தரப்பில் கேட்டோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பாண்டியன் ஸ்டோர்ஸில் வெங்கட்
பாண்டியன் ஸ்டோர்ஸில் வெங்கட்

‘’ 'ரோஜா' சீரியல்ல அஷ்வின்ங்கிற கேரக்டரில் ஆரம்பத்துல இருந்தே நடிச்சிட்டிருந்தார் அவர். அந்தக் கேரக்டர் லீட் கேரக்டர் இல்லைங்கிறது அவர் கமிட் ஆன போதே சொல்லப்பட்டு அதுக்கு சம்மதம் தெரிவிச்சுதான் நடிக்க வந்தார். நாங்க எந்தப் பொய்யையும் சொல்லி அவரைக் கமிட் பண்ணல.

சீரியல்ல அவர் நடிச்சுட்டு வந்த இதுநாள் வரைக்கும் புரொடக்‌ஷன் ஹவுஸுக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் வந்ததுமில்லை. ரொம்பவே நல்லபடியா ஒத்துழைப்புத் தந்துதான் நடிச்சுட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்னாடி கொரோனா வந்து பாதிக்கப்பட்ட பிறகு அந்தப் பாதிப்பின் தாக்கம் தொடர்ந்து இருக்கறதாகவும் அதனால கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுதுன்னும் சொன்னார்.

அப்பக்கூட, அவர் கேரக்டரை நாங்க முடிக்க விரும்பாம, அவர் உடல்நிலை ஒத்துழைக்கற மாதிரி ஷூட்டிங் ஷெட்யூலை மாத்தி அமைச்சு தொடர்ந்து அவரை நடிக்க வச்சோம்.

சரியாச் சொல்லணும்னா ஒரு வருஷத்துக்கு முன்னாடியே சீரியல்ல இருந்து நான் வெளியேற விரும்பறேன்னு எங்ககிட்டச் சொன்னார். ஆனாலும் நாங்க உடனே அனுப்பிடாம, ‘யோசிச்சு முடிவு செய்யுங்க’னு சொல்லி அவர் தொடர்ந்து சீரியல்ல நடிக்கணும்னுதான் கேட்டுக்கிட்டோம்.

ரோஜா சீரியல்
ரோஜா சீரியல்

ஒருகட்டத்துல, அவர் இன்னொரு காரணமாவும் வெளியேற விரும்பறதாச் சொன்னார். 'அதாவது சீரியல்ல ஹீரோவா பண்ண விரும்பறேன். தம்பி கேரக்டர்ல நடிச்சிட்டிருந்தா, தொடர்ந்து அந்த மாதிரி கேரக்டர்களாகவே அமையுது'ன்னு சொன்னார். அது அவரது ஆசையா இருக்கும்பட்சத்துல அதுல தப்பு இல்லை. கரியரை நினைச்சு சொல்லியிருக்கலாம்னு நினைச்சோம். ஆனா இந்த சீரியலைப் பொறுத்தவரைக்கும் என்ன கேரக்டர்ல கமிட் ஆனாரோ அந்த கேரக்டருக்கு உண்டான முக்கியத்துவத்தை நாங்க கடைசி வரைக்கும் தந்திருக்கோம்.

சீரியல் புரொமோவுல அவர் முகத்தைக் காட்டலைங்கிற அவர் கருத்து பத்தி என்ன சொல்றது? பொதுவா சீரியல்ல லீட் கதாபாத்திரங்கள் யாரோ அவங்களைத்தான் மக்கள் பார்க்க விரும்புவாங்கனு அவங்க முகத்தையே புரோமோவுல காட்டுவாங்க. எல்லா சேனல்கள்லயுமே இதுதான் வழக்கம். ‘ரோஜா’ தொடரைப் பொறுத்தவரைக்கும் ரோஜாவின் கணவர் அர்ஜுன்ங்கிறப்ப அந்தக் கேரக்டரைத்தான் புரொமோவுல காட்டுவாங்க’’ என்றவர்களிடம், '' 'ரோஜா' ஓளிபரப்பான சேனல் குறித்தும் வெங்கட் பேசியிருக்கிறாரே'' எனக் கேட்டோம்.

‘’அவர் சேனல் பத்தி என்ன பேசினார்னு முழுசா எங்களுக்குத் தெரியலை. அதனால அதுபத்திக் கருத்துச் சொல்றது நல்லா இருக்காது. அதேபோல சமீபத்துல நாங்க எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தலை'' என்றபடி முடித்துக் கொண்டார்கள்.