Published:Updated:

``மலேசியாவுல மாத்தி மாத்தி  சைட் அடிச்சோம்; ஆனா, கடைசியில?!" - `யாரடி நீ மோகினி' யமுனா

யமுனா சின்னதுரை
யமுனா சின்னதுரை

`சேஸிங்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், யமுனா. சில வாரங்களாக ,`யாரடி நீ மோகினி' சீரியலில் இவரின் கதாபாத்திரம் வருவதில்லை. ஏன் என்று அவரிடமே கேட்டோம்.

`வெயில்' படத்தில் பரத்தின் தங்கையாக அறிமுகமானவர் யமுனா சின்னதுரை. அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், அவருக்குப் பெயர் வாங்கிக்கொடுத்தது `யாரடி நீ மோகினி' சீரியல்தான். `சேஸிங்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சில வாரங்களாக `யாரடி நீ மோகினி' சீரியலில் இவரின் கதாபாத்திரம் வருவதில்லை. ஏன் என்று அவரிடமே கேட்டோம்.

`யாரடி நீ மோகினி' சீரியலில் இப்போதெல்லாம் மோகினி வருவதில்லையே?

யாரடி நீ மோகினி சீரியலில் யமுனா..
யாரடி நீ மோகினி சீரியலில் யமுனா..

`` 'யாரடி நீ மோகினி'யில வர்ற பேயை மக்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. `நீங்க ஏன் இப்போலாம் சீரியல்ல வரவே மாட்றீங்க, உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்'னு மக்கள் என்கிட்ட கேட்டுட்டே இருக்காங்க. சத்தியமா எனக்கே ஏன்னு தெரியலை. பேய் கேரக்டர்ல நடிச்சாலும் மக்கள் மனசுல இடம்பிடிச்சிருப்பது மகிழ்ச்சியா இருக்கு. சில சமயம், ஏன் நம்ம கேரக்டர் இப்போலாம் வர்றது இல்லைனு கோபம் வரும். இதை இயக்குநர்கிட்டே போன் பண்ணிக் கேட்பேன்."

`` `எனக்கு வந்த கதையோட ஒன்லைன் இதுதான்மா... எனக்கு எதுவும் தெரியாது'னு சொல்லிடுவார். ஒரு கட்டத்துல கதை எழுதுறவங்களுக்கு நாம எப்போ தேவைப்படுறோமோ அப்போ பார்த்துக்கலாம்னு மனசைத் தேத்திக்கிட்டேன். சீரியல் மூலமா எனக்கு இந்தப் பெயர் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. சீரியல் ரசிகர்கள்கிட்ட இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. ஆனா, அது தொடராமப்போனது கஷ்டமா இருக்கு."

சீரியலில் அன்பான பேயாக நடிக்கிறீங்க. நிஜத்தில் நீங்க எப்படி?

யமுனா சின்னதுரை
யமுனா சின்னதுரை

``யாரடி நீ மோகினியில நான் நல்ல பேய்தானே... அதே மாதிரிதான் நிஜ வாழ்க்கையிலும். ஷூட்டிங் ஸ்பாட்ல கோபப்பட மாட்டேன். ஆனா, வீட்டுல எனக்கு ராட்சசினு பெயர் இருக்கு. அத்தனை கோபத்தையும் வீட்டுலதான் வெளிப்படுத்துவேன். வீட்டுல இருக்கிற பொருள்லாம் இடம் மாறினா கோபம் வரும். என்னைப் பத்தி வீட்டுல நல்ல தெரிஞ்சதால நான் கோபப்பட்டு கத்துறதைக் கண்டுக்க மாட்டாங்க. ஒரு முறை கோபத்துல என்னோட போனை பெட் மேல தூக்கி வீசினேன். அது கீழ விழுந்து உடைஞ்சி போயிடுச்சு. ரொம்ப சென்டிமென்ட்டான போன் அது. அதனால, இனி ரொம்ப கோபப்படக்கூடாதுனு முடிவு எடுத்திருக்கேன்."

வரலட்சுமி சரத்குமாருடன் நடித்த அனுபவம்?

யமுனா சின்னதுரை
யமுனா சின்னதுரை

`` `சேஸிங்' படத்தோட ரிலீஸுக்காக ரொம்ப ஆர்வமா காத்துட்டிருக்கேன். வரலட்சுமிகூட நடிச்சது ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. அவங்க ரொம்ப நல்ல கேரக்டர். ஆக்‌ஷன் காட்சிகள்லாம் செமயா பர்ஃபார்ம் பண்ணாங்க. ஷூட்டிங் சமயத்துல சிரிச்ச முகத்தோட இருப்பாங்க. எனக்கு படத்துல சில ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கு. அதைப் பண்ணி முடிச்ச அப்புறம் கை கால் வலிக்கும். சோர்வாகி உட்கார்ந்துருவேன். ஆனா, அவங்க சோர்வாகி நான் பார்த்ததே இல்லை. எவ்வளவு கஷ்டமான காட்சியா இருந்தாலும், எத்தனை முறை டேக் போனாலும் சோர்வை அவங்க முகத்துல பார்க்கவே முடியாது."

நிறைவேறாத கனவு?

யமுனா சின்னதுரை
யமுனா சின்னதுரை

``எனக்கு டாக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசை. டாக்டர்கிட்ட போகும்போது அவங்களை ரொம்ப ஏக்கமா பார்ப்பேன். அவங்க பேசுறது, நடந்துக்குறதுனு எல்லாத்தையும் ரசிச்சுப் பார்ப்பேன். அவங்க பேச்சுலே ஒரு அமைதி இருக்கும். அதனாலே டாக்டர்களை ரொம்பப் பிடிக்கும்."

கெட்ட பழக்கம்?

யமுனா சின்னதுரை
யமுனா சின்னதுரை

``நான் ரொம்பத் தூங்குவேன். அந்த கெட்ட பழக்கத்தைத்தான் விடவே முடியலை. `எருமை மாதிரி தூங்குற'னு அம்மா திட்டிகிட்டே இருப்பாங்க. ஷூட்டிங் இல்லைனா மதியம் வரைக்கும்கூட தூங்குவேன். ஜிம்முக்கும் சாயங்காலம்தான் போவேன். சீக்கிரம் எழுந்திருக்கணும்னு ரொம்பவே டிரை பண்ணுவேன். ஆனா, முடியலை."

கடவுள் நம்பிக்கை?

யமுனா சின்னதுரை
யமுனா சின்னதுரை

``வாரம் இரு முறை விரதம் இருப்பேன். ஒவ்வொரு நாளும் ஷூட் தொடங்கும்போது, இன்னைக்கு எனக்கு முதல் ஷாட் வைக்கணும்னு கடவுளைக் கும்பிடுவேன். இவ்வளவுதான் என் கடவுள் நம்பிக்கை. கைலாசா அளவுக்கு எல்லாம் இல்லை. ’’

மலேசியா சென்று வந்த அனுபவம்?

`` `சேஸிங்' படத்துக்காகத்தான் மலேசியா போயிருந்தோம். அங்க ராத்திரி, பகலே தெரியலை. நைட் ஷூட் முடிஞ்சதும் நண்பர்களோட ஊர் சுத்த கிளம்பிடுவோம். இந்திய ஃபுட் தேடி அலையாத இடமே இல்லை. அந்த ஊர் சாப்பாட்டுல இருந்து வர்ற வாசனை எனக்குப் பிடிக்கலை. அப்புறம் நம்ம ஊர் சாப்பாடு தேடிக் கண்டுபிடிச்சு ஒரு ஹோட்டலுக்குப் போனோம். அங்க சுவாரஸ்யமான ஒரு சம்பவம் நடந்தது. நாங்க எல்லாரும் தமிழ்ல பேசி அரட்டை அடிச்சிட்டிருந்தோம். அங்க ஒருத்தர் என்னை ரெண்டு மூணு தடவப் பார்த்துட்டே இருந்தார். இந்தியன் மாதிரியும் இல்லை, மலேசியன் மாதிரியும் இல்லை. கலரா இருந்தார். எனக்குப் பிடிச்ச மாதிரி தாடி வெச்சிருந்ததால நானும் பார்த்தேன். என் நண்பர்கள்கிட்ட, `என்னை ஒருத்தர் சைட் அடிக்கிறார். போறதுக்குள்ள கரெக்ட் பண்றேன்'னு விளையாட்டா சொன்னேன். அப்புறம் ரெண்டு பேரும் பார்த்துகிட்டப்போ லைட்டா சிரிச்சார். நான் ஆர்டர் பண்ண ஜூஸையே அவரும் ஆர்டர் பண்ணார். கடைசியில திரும்பிக்கூட பார்க்காம போயிட்டார். இதை எல்லாம் என்னோட ஃப்ரெண்ட்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாவுல போட்டாங்க. இந்தச் சம்பவத்தை மறக்கவே முடியாது" என்று முடித்தார் புன்னகையோடு.

``பாலா சார் சொன்ன மாதிரியே வாக்கைக் காப்பாத்திட்டார்!'' - `யாரடி நீ மோகினி' அக்‌ஷயா
அடுத்த கட்டுரைக்கு