Published:Updated:

`வில்லியா.. ஹீரோ அர்ஜுனுக்குத் தோழியா?' - ‘ரோஜா’ சீரியலில் கமிட் ஆன யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்

சின்னத்திரையில் அறிமுகமாகிறார், `இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ மற்றும் `பிக்பாஸ்' புகழ் யாஷிகா ஆனந்த்.

`இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தில் நடித்த, `பிக் பாஸ்’ புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் சீரியல் பக்கம் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் சீரியலான `ரோஜா’வில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்

ஜூன் 30-ம் தேதி வரை சென்னையில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிந்து சீரியல் தொடங்கும்போது யாஷிகாவை தொடரில் பார்க்கலாம்.

ராஜேஷ், வடிவுக்கரசி,`மெட்டி ஒலி’ காயத்ரி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடித்திருக்கும் `ரோஜா’ தொடருக்கு ஏற்கெனவே சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இப்போது யாஷிகா ஆனந்தும் சேர்ந்திருப்பதால் தொடரின் ரேட்டிங் எகிறலாம் என்கிறது சின்னத்திரை வட்டாரம்.

சீரியலில் ஹீரோயினாக ஆந்திராவைச் சேர்ந்த ப்ரியங்கா நடித்து வரும் நிலையில், யாஷிகா ஆனந்தின் கேரக்டர் என்ன, கெஸ்ட் ரோலா என விசாரித்தோம்.

Vikatan

``ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு, ஏற்கெனவே சூப்பரா போயிட்டிருக்கிற சீரியல்ல வர்றதால அவங்க ரோல் முக்கியமானதா இருக்கும். அதேநேரம் ஹீரோயின் உட்பட சீரியல்ல இதுவரை இருந்த யாருமே மாற்றப்படலை. யாஷிகா ஷூட்டிங் வந்த அன்னைக்கு ஹீரோ அர்ஜுன்கூட பைக்ல போற மாதிரி காட்சி படமாக்கப்பட்டது.

ரோஜா சீரியல்
ரோஜா சீரியல்

ஹீரோவுக்கு கேர்ள் ஃப்ரெண்டா வர்றாங்களா அல்லது வில்லியாங்கிறதெல்லாம் லாக்டௌன் முடிஞ்சு ஷூட்டிங் தொடங்கின பிறகுதான் தெரியவரும்’ என்கிறது யூனிட் வட்டாரம்.

இந்த சீரியலில் நடிக்க யாஷிகாவின் சம்பளம் என்ன தெரியுமா? ஒரு எபிஸோடுக்கு ஒன்றரை லட்சமாம்!

அடுத்த கட்டுரைக்கு