Published:Updated:

ரஜினிக்கு வில்லியின் முத்தம்... லதா முகத்தில் வெட்கம்... விருது விழா ஹைலைட்ஸ்!

chaitra reddy
chaitra reddy

`தலைவன்கிறது பெரிய வார்த்தை. அந்த இடத்துக்குப் போற தகுதி எனக்கு இன்னும் வரலைனு நினைக்கேன். அதனால நாம தோழனாவே இருந்துட்டுப் போவோமே’

கோலாகலமாக நடந்து முடிந்தது 'ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2019'. கடந்த ஆண்டைவிட பிரமாண்டமாக அரங்கேறிய நிகழ்வின் சில ஹைலைட்ஸ் மட்டும் இங்கே..

*'மோஸ்ட் ப்ராமிஸிங் ஆங்கர்' விருது வாங்க மேடையேறினார் சாரா. அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தது அவரின் அம்மா அர்ச்சனா. விருது வழங்கியது சிவகார்த்திகேயன். அப்படியே கொஞ்ச நேரம் சாராவையும் சிவகார்த்திகேயனையும் ஆங்கரிங் பண்ணச் சொல்லி விட்டார்கள்.

siva karthikeyan
siva karthikeyan

``ரொம்ப நாளைக்குப் பிறகு காசு வாங்காம காம்பியரிங் பண்றேன்'' என்றபடி ``நெக்ஸ்ட் அவார்ட் கோஸ் டு...'' எனச் சில நிமிடங்கள் ஆங்கராக மாறிய சிவா, ``ரியாலிட்டி ஷோவுல போட்டியாளரா இருந்தா, எவ்வளவு சூப்பரா பர்ஃபாமன்ஸ் பண்ணினாலும் முகத்தை ரொம்ப நேரம் காட்ட மாட்டாங்க. அதேநேரம் ஆங்கரா இருந்தா, வேற வழியே இல்ல. நம்மைக் காட்டித்தான் ஆகணும். ஆரம்பத்துல ஆங்கராகணும்னு நான் ஆசைப்பட்டதெல்லாம் இந்தக் காரணத்துக்காகத்தான்'' என்றார்.

sembaruthi serial scene
sembaruthi serial scene

* 'செம்பருத்தி' ஹீரோயின் சபானாவுக்கு ஃபேவரைட் ஹீரோயின் விருது வழங்கப்பட்டது. தீவிரமான விஜய் ரசிகையான அவருக்கு விருதை வழங்கியவர்கள் எஸ்.ஏ. சந்திரசேகரும் அவரின் மனைவி ஷோபா சந்திரசேகரும். ``என் அண்ணாவைக் கேட்டதாச் சொல்லுங்க' என அவர்களிடம் சபானா கேட்ட நிமிடம், அவரைக் கட்டியணைத்துக் கொண்டார் ஷோபா.

* `யாரடி நீ மோகினி' சைத்ரா ரெட்டிக்கு `பெஸ்ட் வில்லி' விருது வழங்கப்பட்டது. அப்போது அவரது சில ஃபேவரைட் போட்டோக்கள் சர்ப்ரைஸாகக் காட்டப்பட்டன. அதில் ஒரு போட்டோ ரஜினிக்கு அவர் முத்தம் தந்தபோது எடுத்தது. அந்த போட்டோவைப் பார்த்ததும், உற்சாகத்தில் ``மாமா...'' என அவர் சந்தோஷக் கூச்சலிட, ஆங்கர் கமல், ``ஏது, தலைவர் இப்ப இங்க வந்தாக்கூட குடுத்துடுவாங்க போலயே.. பார்த்தும்மா, மாமாவோட மாமி முன்வரிசையிலதான் உட்கார்ந்திருக்காங்க'' எனச் சொல்ல வெட்கச் சிரிப்பால் மலர்ந்தார் லதா ரஜினிகாந்த்.

* `பெஸ்ட் ஆங்கர்', `பாப்புலர் அம்மா' என இரு விருதுகளுக்குத் தேர்வாகியிருந்தார் ப்ரியா ராமன். ப்ரியா ராமனுக்கு லதா ரஜினிகாந்த் விருது வழங்கினார். `` `வள்ளி'யில நாங்க அறிமுகப்படுத்தினப் பொண்ணு... எல்லாருக்கும் இந்த விஷயம் தெரியுமா, ப்ரியாவுக்காக நான் ப்ளேபேக் பாடியிருக்கேன்'' என அந்த நாள்களை நினைவுகூர்ந்தார் லதா ரஜினிகாந்த்.

Vikatan

* விஜய் சேதுபதி மேடையேறுவதற்கு முன் அவரைப் பற்றிய ஒரு வீடியோ ஒளிபரப்பானது. பார்த்து விட்டு மைக் பிடித்தவர், ``ஆமா, விருது வாங்கறவங்களுக்குத்தானே இதெல்லாம் போட்டுக் காட்டணும். தர்றவங்களுக்கு எதுக்கு'' எனக் கேட்டார். தொடர்ந்து அவரிடம், ``ரசிகர்களுக்கு நீங்கத் தோழனா, தலைவனா?'' என கேள்வி கேட்கப்பட்டது. ``தலைவன்கிறது பெரிய வார்த்தை. அந்த இடத்துக்குப் போற தகுதி எனக்கு இன்னும் வரலைனு நினைக்கேன். அதனால நாம தோழனாவே இருந்துட்டுப் போவோமே'' என்ற விஜய் சேதுபதி, நடிகை சிநேகாவுக்கு `பெஸ்ட் ஜட்ஜ்' விருதை வழங்கினார்.

vijay sethupathi
vijay sethupathi

அப்போது `` `பண்ணையாரும் பத்மினி'யும் படத்துல சிநேகா நடிச்சாங்க. அப்ப ஷூட்டிங்ல அவங்களைப் பார்க்க அவ்வளவு ஆர்வமா இருந்தேன். எல்லாம் இதோ.. இந்தச் சிரிப்பை ரசிக்கத்தான்'' என சிநேகா பக்கம் திரும்ப, மொத்த ஆடியன்ஸுக்கும் காணக்கிடைத்தது அந்தச் சிரிப்பு.

அடுத்த கட்டுரைக்கு