Published:Updated:

பிக்பாஸுடன் போட்டிப்போடும் `சர்வைவர்' ரியாலிட்டி ஷோ... போட்டியாளர்களின் கம்ப்ளீட் லிஸ்ட்!

சர்வைவர் - அர்ஜுன்

மொத்தம் 90 நாள்கள் தனித்தீவில் தாக்குப்பிடித்து டைட்டில் வெல்கிறவர்களுக்கு பரிசுத் தொகை ரூபாய் ஒரு கோடி!

பிக்பாஸுடன் போட்டிப்போடும் `சர்வைவர்' ரியாலிட்டி ஷோ... போட்டியாளர்களின் கம்ப்ளீட் லிஸ்ட்!

மொத்தம் 90 நாள்கள் தனித்தீவில் தாக்குப்பிடித்து டைட்டில் வெல்கிறவர்களுக்கு பரிசுத் தொகை ரூபாய் ஒரு கோடி!

Published:Updated:
சர்வைவர் - அர்ஜுன்
விஜய் டிவியின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் ஜீ டிவியின் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் ஷூட்டிங், அடுத்த சில தினங்களில் தொடங்க இருக்கிற‌து.

போட்டியாளர்கள் அனைவரும் ஆப்ரிக்காவில் உள்ள ஜான்சிபார் தீவுகளுக்குச் சென்று விட்டார்கள். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அர்ஜுனும் கூடவே கிளம்பிவிட்டார். நிகழ்ச்சி நடக்கும் 90 நாள்களும் அவரும் அங்கேயே தங்கியிருப்பார் என்கிறார்கள்.
முதலில் சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, விஷால் ஆகியோரிடம் பேசினார்கள். 90 நாள்கள் தொடர்ந்து வெளிநாட்டிலுள்ள தீவில் தங்குவதற்கு இவர்கள் யாருமே தயாராக இல்லாததால், கடைசியில் நடிகர் அர்ஜுன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சர்வைவர்
சர்வைவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மொத்தம் 90 நாள்கள் தீவில் தாக்குப்பிடித்து டைட்டில் வெல்கிறவர்களுக்கு பரிசுத் தொகை ரூபாய் ஒரு கோடி.
சரி, போட்டியாளர்களாகச் செல்கிறவர்கள் யார் யார்? நமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தயாரான ஓர் உத்தேசப் பட்டியல் இங்கே!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சரண் சக்தி

'வடசென்னை' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக நடித்து அதிக கவனம் பெற்ற சரண் சக்தி தற்போது ரிலீஸாகியிருக்கும் நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்திலும் நடித்திருக்கிறார்.

பெசன்ட் ரவி

'ஸ்டன்ட்' ரவி என்றால் அனைவருக்கும் தெரியும். வில்லனாக, அடியாளாக பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

சிருஷ்டி டாங்கே

துணை நடிகையாக கரியரைத் தொடங்கி 'மேகா' ,'யுத்தம் செய்', 'எனக்குள் ஒருவன்', 'கத்துக்குட்டி' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சரண் சக்தி, பெசண்ட் ரவி, சிருஷ்டி டாங்கே, இந்திரஜா, வி.ஜே.பார்வதி, சஞ்சனா சிங்
சரண் சக்தி, பெசண்ட் ரவி, சிருஷ்டி டாங்கே, இந்திரஜா, வி.ஜே.பார்வதி, சஞ்சனா சிங்

இந்திரஜா

ரோபோ சங்கரின் மகள். 'பிகில்' படத்தில் 'பாண்டியம்மாள்' பாத்திரத்தின் மூலம் பிரபலமானவர்.

வி.ஜே.பார்வதி

யூடியூப் சேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

சஞ்சனா சிங்

மும்பையில் பிறந்தவர். 'ரேனிகுண்டா' மூலம் தமிழ்த் திரையுலகத்துக்கு அறிமுகமானவர்.

அனிகா சுரேந்திரன்

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 'என்னை அறிந்தாள்', 'விஸ்வாசம்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்து அஜித் ரசிகர்களின் அன்பைப் பெற்றவர்.

வனிதா விஜயகுமார்

நிகழ்ச்சியைப் பரபரப்பாக்க வனிதா விஜயகுமாருக்கு வலைவீசிக்கொண்டிருக்கிறது ஜீ டிவி டீம். கடைசி நேரத்தில் வனிதா விஜயகுமார் ஃப்ளைட் ஏறலாம்.

ஸ்ரீ ரெட்டி

திரையுலகில் முன்னணி நடிகர்கள் மீதே பகீர் குற்றச்சாட்டுகளை வைத்துப் பரபரப்பானவர் சர்வைவர் டீமுக்குள் ஒருவர் என்கிறார்கள்.

இனிகோ பிரபாகர்

குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கி, வில்லனாக நடித்து தற்பொது கதாநாயகனாக முன்னேறி இருப்பவர்.

நந்தா

'மெளனம் பேசியதே' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகானவர் நந்தா. நடிகர் சங்க விவகாரங்களில் விஷாலுக்கு நெருக்கமாக இருந்த நந்தா சர்வைவர் டீமுடன் தனித்தீவில் போய் இறங்கியிருக்கிறார் என்கிறார்கள்.

அனிகா சுரேந்திரன், வனிதா விஜய்குமார், ஸ்ரீ ரெட்டி, இனிகோ பிரபாகர், நந்தா, விஜயலட்சுமி
அனிகா சுரேந்திரன், வனிதா விஜய்குமார், ஸ்ரீ ரெட்டி, இனிகோ பிரபாகர், நந்தா, விஜயலட்சுமி

விஜயலட்சுமி

இயக்குநர் அகத்தியனின் மகள். சென்னை -28 படம் மூலம் பிரபலமான விஜயலட்சுமி சீரியல்களிலும் நடித்துவருகிறார்.

வித்யுலேகா

நகைச்சுவை நடிப்பால் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தவர்.

நாராயணன்

உதயநிதி ஹீரோவாக நடித்த 'ஓகே ஓகே' படத்தில் ஹன்சிகாவைப் பெண் பார்ப்பவராக வந்து கலகலப்பூட்டியவர், சென்னையின் பிரபல மால் ஒன்றில் மேனேஜராகப் பணிபுரிந்து வருகிறார்.

கோபிநாத் ரவி

மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றது மூலம் கோலிவுட்டிலும் கால் பதிக்கத் தொடங்கி இருக்கிறார்

வித்யுலேகா, நாராயணன், கோபிநாத் ரவி, ஜான் விஜய், ஷாலு ஷம்மு, விக்ராந்த்
வித்யுலேகா, நாராயணன், கோபிநாத் ரவி, ஜான் விஜய், ஷாலு ஷம்மு, விக்ராந்த்

ஜான் விஜய்

‘சார்பட்டா’ படத்தில் டேடியாக கலக்கியவர் தனித்தீவுக்குள் நுழைகிறார் என்கிறார்கள்.

ஷாலு ஷம்மு

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர். துணை நடிகையாக இருந்து இப்போது நடிகையாக புரொமோஷன் ஆகியிருந்தாலும் சோஷியல் மீடியா இவரை இன்னும் கவர்ச்சி நடிகையாகவே பார்க்கிறது.

மொத்த போட்டியாளர்களின் எண்ணிக்கை 18. கடைசி போட்டியாளராக நடிகர் விக்ராந்த் அல்லது நடிகரும் தம்பி ராமையாவின் மகனுமான உமாபதி இருவரில் ஒருவர் தீவுக்குள் சென்றிருக்கக்கூடும் எனத் தெரிகிறது.