Published:Updated:

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, சத்யா - முடிவுக்கு வரும் 2 ஹிட் தொடர்கள்! அதிகாரப்பூர்வ தகவல் சொல்வது என்ன?

இந்த இரண்டு தொடர்களும் வருகிற 24ம் தேதியோடு முடிய போவதாக ஜீ தமிழ் சேனலில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ் சின்னத்திரை உலகில் முதன்முறையாக அதிக எடை உள்ளவரை நாயகியாக நடிக்க வைத்து மாற்றத்தை ஏற்படுத்திய தொடர் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி'. இந்தத் தொடர் ஜீ தமிழில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

சத்யா
சத்யா

அதேபோன்று, பெருவாரியான ரசிகர்களை கொண்டிருத்த தொடர் 'சத்யா'. ஆயிஷா - விஷ்ணு ஜோடி சமூகவலைதளத்தில் பரவலாகக் கொண்டாடப்பட்டது.

இந்த இரண்டு தொடர்களும் வருகிற 24-ம் தேதியோடு முடிய போவதாக ஜீ தமிழ் சேனலில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டுமே மக்கள் மத்தியில் பிரபலமாக நெடுந்தொடர்கள். சுவாரஸ்யமான கதைகளுடன் பயணித்துக் கொண்டிருந்த இவை, திடீரென முடியப் போவதாக அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது சேனலின் முடிவா அல்லது ஏதேனும் காரணம் இருக்கின்றனவா என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான சீரியலை நிச்சயம் மிஸ் செய்வதாக கமென்ட்டில் பதிவிட்டு வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு