Published:Updated:

`மொத்தமாக அள்ளிய செம்பருத்தி; டஃப் கொடுத்த சத்யா'! - ஜீ தமிழ் குடும்ப விருதுகள் வென்றது யார் யார்?

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2019 - முழுப்பட்டியல்!

sembaruthi sabana - karthick
sembaruthi sabana - karthick

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல், ரியாலிட்டி ஷோக்களிலிருந்து, சிறந்த ஹீரோ, ஹீரோயின், வில்லி, அம்மா, மாமியார் என விருதுகளை வழங்கும் 'ஜீ குடும்ப விருதுகள்' இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்பட்டன. அதற்கான விழா, சில தினங்களுக்கு முன் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. சமீபகாலமாக சேனலின் டாப் ரேட்டிங் தொடராக வெற்றிநடை போட்டு வரும் 'செம்பருத்தி' தொடர், அதிகப் பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது.

ஜீ குடும்ப விருதுகள் 2019 பட்டியலைப் பார்க்கலாமா?

priya raman
priya raman
archana
archana

பெஸ்ட் ஹீரோ - விஷ்ணு (சத்யா)

பெஸ்ட் ஹீரோயின் - ஆயிஷா (சத்யா)

பெஸ்ட் வில்லி - சைத்ரா ரெட்டி (யாரடி நீ மோகினி)

பெஸ்ட் ஆங்கர் - ப்ரியா ராமன் (சூப்பர் மாம்)

பெஸ்ட் சப்போர்ட்டிங் கேரக்டர் - ஜனனி (செம்பருத்தி)

பெஸ்ட் சீரியல் - சத்யா

பெஸ்ட் ரியாலிட்டி ஷோ - சூப்பர் மாம்

பெஸ்ட் ஜட்ஜ் - சிநேகா, ஶ்ரீனிவாஸ்

chaitra reddy
chaitra reddy

மோஸ்ட் பாப்புலர் மருமகள் - அஷ்வினி (ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி)

மோஸ்ட் பாப்புலர் மாமியார் - லக்ஷ்மி (ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி)

மோஸ்ட் பாப்புலர் அப்பா - ராஜசேகர் (சத்யா)

மோஸ்ட் பாப்புலர் அம்மா - ப்ரியா ராமன் (செம்பருத்தி)

vishnu-aayisha
vishnu-aayisha

மேற்கண்ட அனைத்தும் சேனல் அமைத்த நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவை தவிர, மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த ஃபேவரைட் பிரிவில் வழங்கப்பட்ட விருதுப் பட்டியல் தனி. அவை கீழே..

ஃபேவரைட் ஹீரோ - கார்த்திக் (செம்பருத்தி)

ஃபேவரைட் ஹீரோயின் - சபானா (செம்பருத்தி)

ஃபேவரைட் ஜோடி - கார்த்திக்-சபானா, விஷ்ணு-ஆயிஷா

ஃபேவரைட் வில்லி - லக்ஷ்மி (செம்பருத்தி)

ஃபேவரைட் ஆங்கர் - அர்ச்சனா

ஃபேவரைட் சீரியல் - செம்பருத்தி