Published:Updated:

Wimbeldon: 86 வருட ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்திக்கொண்டது ராபின்சன்ஸ்!

ராபின்சன்ஸ்

விம்பிள்டன் உடனான தனது ஸ்பான்சர்ஷிப்பை 86 ஆண்டுகளுக்குப் பிறகு ராபின்சன்ஸ் முடித்துக்கொண்டது.

Wimbeldon: 86 வருட ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்திக்கொண்டது ராபின்சன்ஸ்!

விம்பிள்டன் உடனான தனது ஸ்பான்சர்ஷிப்பை 86 ஆண்டுகளுக்குப் பிறகு ராபின்சன்ஸ் முடித்துக்கொண்டது.

Published:Updated:
ராபின்சன்ஸ்

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் விம்பிள்டனுக்கென்று தனிச் சிறப்புண்டு. இப்போட்டிகளுக்கு 1935-ம் ஆண்டு முதல் ராபின்சன்ஸ் என்ற குளிர்பான நிறுவனம் ஸ்பான்சர்ஷிப் வழங்கி வந்த நிலையில் அதை தற்போது நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். அதை தொடங்கியவரான எரிக் ஸ்மெட்டலி ஹாட்சன் முதன் முதலில் டென்னிஸ் போட்டியைக் காணச் சென்றபோது அங்கிருந்த விளையாட்டு வீரர்களுக்குக் குளிர்பானத்தை வழங்கியிருக்கிறார். அன்றிலிருந்து விம்பிள்டனுக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கி வந்தது ராபின்சன்ஸ் குளிர்பானம்.

இந்நிலையில் கடந்த வாரம் `இனி விம்பிள்டன் போட்டிகளுக்குத் தாங்கள் ஸ்பான்சராக இருக்கப்போவதில்லை' என ட்விட்டரில் அறிவித்திருத்தது ராபின்சன்ஸ் நிறுவனம். ஒரு மாதத்திற்கு முன்பு தான் இங்கிலாந்தில் நடக்கக்கூடிய 'தி 100' கிரிக்கெட் தொடரில் ஸ்பான்சராக இணைந்தது ராபின்சன்ஸ். விம்பிள்டன் உடனான ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்திக்கொண்டதற்கு எந்தக் காரணமும் தெரிவிக்கவில்லை. தற்போது அப்போட்டிகளுக்கு கேடோரேட், பெப்சி மேக்ஸ், ராக்ஸ்டார் எனர்ஜி மற்றும் ஃப்ரூட் ஷூட் போன்ற பானங்கள் விளம்பரப்படுத்தபட இருப்பதாக கூறப்படுகிறது. தனது 86 வருட கால ஸ்பான்சர்சிப்பை விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்கு வழங்கி வந்ததை நிறுத்திக் கொண்ட ராபின்சன்ஸ் நிறுவனம் 'வரலாற்றில் முக்கிய பங்களிப்பை ஆற்றியதற்கு பெருமைப்படுகிறோம்' என்று தெரிவித்து இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!