கட்டுரைகள்
Published:Updated:

ஆம்... பெண்களுக்கும் கால்கள் உண்டு!

அனஸ்வரா ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
அனஸ்வரா ராஜன்

நடிகர் திலீீப் விவகாரத்திலும் மலையாள நடிகைகள் கரமிணைந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக ஒன்று திரண்டனர்.

லையாள சினிமாக்கள் மட்டுமல்ல, அந்த ஊர்க் கலைஞர்களும் படைப்பாளிகளும்கூட வித்தியாசமானவர்கள்தான். சமூகப் பிரச்னையோ தனிப்பட்ட பிரச்னையோ போட்டி, பொறாமை இல்லாமல் அத்தனை பேரும் ஒருங்கிணைந்்து நிற்்பார்கள்; குரல் கொடுப்பார்கள்; தேவை இருந்தால் களத்துக்கு வந்து போராடவும் செய்வார்கள். உதாரணமாக சமீபத்திய சம்பவம் ஒன்று.

‘உதாஹரணம் சுஜாதா’ படத்தில் மஞ்சு வாரியருக்கு மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் அனஸ்வரா ராஜன். வயது பதினெட்டுதான். ஆனாலும் நடிப்பில் அப்படியொரு முதிர்ச்்சி. அடுத்்தடுத்து ஹீரோயின் வாய்ப்புகளும் வர, பரபரப்பான நடிகையாகி விட்டார். அவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் தன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில் குட்டியாக ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். அவ்வளவுதான்... கொதித்்தெழுந்து விட்டார்கள் கலாசாரக் காவலர்கள். அவரது ஒழுக்கம் பற்றிக் கேள்வியெழுப்பி கமென்டுகள் குவிந்தன. பலர் தனிப்பட்ட முறையில் திட்டித்தீர்த்தனர்.

ஆம்... பெண்களுக்கும் கால்கள் உண்டு!

அதேநேரம், அனஸ்வராவிற்கு ஆதரவாக #YesWeHaveLegs, #WeHaveLegs, #WomenHaveLegs போன்ற ஹேஷ்டேக்குகள் இணையத்தில் டிரெண்ட் ஆயின. இதைச் செய்தது ஏதோவொரு அமைப்பின் ஐடி விங் அல்ல. மலையாள திரை உலகின் முன்னணி நடிகைகள்.

‘ஒரு பெண் அவளுக்கு விருப்பமான ஆடை அணிவது தனிப்பட்ட சுதந்திரம். அவளின் உடல் சார்ந்த விஷயங்களில் தீர்ப்பு எழுதுவது ஆணாதிக்க மனோபாவம்’ எனப் பொங்கியெழுந்தனர். பெண்களைப் போகப்பொருளாக, வெறும் உடலாகப் பார்க்கும் சிந்தனைக்கு எதிராகவும் அனஸ்வராவிற்கு ஆதரவாகவும் தங்கள் கால்கள் தெரியும்படி ஆடையணிந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார்கள். ‘ஆமாம், பெண்களுக்கும் கால்கள் உண்டு’ என்ற அவர்களின் பதிவுகள், சமூக ஊடகங்களில் கோலோச்்சும் கலாசாரக் காவலர்களைத்் திகைக்க வைத்துள்ளன.

ஆம்... பெண்களுக்கும் கால்கள் உண்டு!

நஸ்ரியா நசிம், பார்வதி திருவொத்து, ரீமா கல்லிங்கல், எஸ்தர் அனில், கனி குஸ்ருட்டி, ராஜீஷா விஜயன், அனார்கலி மரிக்கார், கிரேஸ் அந்தோணி, அபூர்வா போஸ், அர்ச்சனா கவி எனப் பல மலையாள நடிகைகள் தங்கள் புகைப்படங்களைப் பதிவிட்டு, அனஸ்வராவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இவர்களை வழிமொழிந்து உலகம் முழுவதும் இருந்து நிறைய பெண்கள் இந்த ஹேஷ்டேக்குடன் தங்கள் புகைப்படங்களைப் பதிவு செய்தனர்.

தன் புகைப்படத்தோடு பெண்களின் சுதந்திரத்தை வலியுறுத்தும் நீண்டதொரு பதிவையும் வெளியிட்டிருந்தார் மலையாள நடிகை அஹானா கிருஷ்ணா. மலையாளத் திரையுலகப் பெண்கள் அனஸ்வரா ராஜனுக்காக ஒன்றுதிரண்டதைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“என்ன உடை அணிகிறேன் என்பது என் தனிப்பட்ட சுதந்திரம். என் உடைகளை வைத்து, என் குணத்தை விவாதிப்பது யாருடைய வேலையும் அல்ல. அவர்களுக்கெல்லாம் என்னை நிரூபித்துக் காட்டுவது என் வேலையும் அல்ல. இதே ஒரு ஆண் ஷார்ட்ஸ் அணிந்து புகைப்படம் பதிவிட்டால் அவனது சுய ஒழுக்கம் குறித்த கேள்வி எழுவதில்லை. பெண்களை மட்டும் ஏன் குறிவைக்க வேண்டும். மிகவும் மோசமான ஆணாதிக்க மனநிலை கொண்ட சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று அனஸ்வராவிற்கு நடந்தது நாளை எனக்கு நடக்கலாம். மலையாளத் திரையுலகம் அல்ல, இது எங்கு நடந்திருந்தாலும் மற்ற பெண்கள் நிச்சயம் பாதிக்கப்பட்டவருக்குத் துணை நின்றிருப்பார்கள்” என்றார்.

ஆம்... பெண்களுக்கும் கால்கள் உண்டு!

நீண்ட காலமாகவே மலையாளத் திரையுலகப் பெண்கள், தங்கள் உரிமைக்குக்் குரல் கொடுப்பவர்களாக முன்னின்றிருக்கிறார்கள். 2017-ம் ஆண்டு, நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், பாடகிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என மலையாளத் திரையுலகில் பணியாற்றும் அனைத்துப் பெண்களையும் ஒருங்கிணைத்து ஒரு பிரத்தியேக சங்கம் உருவாக்கப்பட்டது. அந்தச்் சங்கத்தின் மூலம் படப்பிடிப்புத் தளங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யப் பல முன்னெடுப்புகள் செய்யப்பட்டன. மேலும், மீ டூ சர்ச்சைகள் எழுந்தபோது பாதிக்கப்பட்ட பெண்களுக்காக அந்தச் சங்கம் முன்னின்று குரல் கொடுத்தது.

நடிகர் திலீீப் விவகாரத்திலும் மலையாள நடிகைகள் கரமிணைந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக ஒன்று திரண்டனர். இந்்த நிர்பந்தம் காரணமாகவே மலையாள நடிகர் சங்கமான AMMA-வில் இருந்து நீக்கப்பட்டார் திலீப். 2018-ம் ஆண்டு திலீப் மீண்டும் நடிகர் சந்தத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட நடிகை மட்டுமன்றி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் எனப் பல முன்னணி நடிகைகள் அந்தச் சங்கத்திலிருந்து விலகினர்.

இப்படியான ஒற்றுமைதான் மலையாளத் திரையுலகில் பெண்கள்மீதான பணியிட வன்முறைகளைத் தடுக்கின்றன. நடிகைகள் மட்டுமன்றி பெண் தொழில்நுட்பக் கலைஞர்களையும் மிகவும் மரியாதையாக நடத்தச் செய்கின்றன.

கலைஞர்கள் என்போர் மொழியின் , தேசத்தின் அடையாளங்கள். கலைத்துறையில் இருக்கும் பெண்களை சக மனிதர்்களாக மதிக்காமல் சீண்டும் போக்்கு எல்லா இடங்களிலும் இருக்கிறது. கேரளப் பெண்கள், தங்களுக்குத் தாங்களாகவே அதற்கு அரண் அமைத்துக்்கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகம் மட்டுமன்றி, எல்லாத்துறைகளிலும் இயங்கும் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது!