Published:Updated:

குழந்தைகள் மனதில் நீங்கா இடம் பிடித்த `மிக்கி மவுஸ்' தொடராக வெளிவந்த நாள்! | இன்று ஒன்று நன்று- 13

மிக்கி மவுஸ்
News
மிக்கி மவுஸ்

நம்ம மனசுல மட்டும் இல்ல. உலகம் முழுவதும் இருக்க பெரியவங்க முதல் குட்டி பசங்க வரை எல்லோரையும் வசியப்படுத்திய டவுசர் பாண்டிதான் நம்ம மிக்கி மவுஸ்.

Published:Updated:

குழந்தைகள் மனதில் நீங்கா இடம் பிடித்த `மிக்கி மவுஸ்' தொடராக வெளிவந்த நாள்! | இன்று ஒன்று நன்று- 13

நம்ம மனசுல மட்டும் இல்ல. உலகம் முழுவதும் இருக்க பெரியவங்க முதல் குட்டி பசங்க வரை எல்லோரையும் வசியப்படுத்திய டவுசர் பாண்டிதான் நம்ம மிக்கி மவுஸ்.

மிக்கி மவுஸ்
News
மிக்கி மவுஸ்

இப்போ இருக்க குழந்தைகள்கிட்ட, உனக்கு ரொம்ப பிடிச்ச கார்ட்டூன் கேரக்டர் எதுனு கேட்டா டோரிமான், சின்சான், ஸ்கூபி டூ, ஸ்நோ வைட், டாம் அண்டு ஜெர்ரி, பென் டென், டோரா, மொட்லு பொட்லுனு லிஸ்ட் பெருசா போகும். ஆனா 80’s கிட்ஸ் அண்ட் அதுக்கு முன்னாடி இருந்தவங்களை கேட்டா.., எல்லோர்கிட்ட இருந்தும் ஒரே பதில் தான் வரும், இப்போ கேட்டாலும் அவங்க குஷியா சொல்ற பேர் 'மிக்கி மவுஸ்’. இன்னைக்கு வரைக்கும் டிஸ்னி லேண்ட்-க்கு போகணும்-ங்கிறது பலபேரோட கனவாகவே இருக்கு.. டிஸ்னி லேண்ட் போனா அங்க எல்லோரோட தலைலையும் மிக்கி மவுஸ் தொப்பி, மிக்கி மவுஸ் மாறி மூக்குல உருண்டைய வச்சிட்டு, மிக்கி மவுஸ் டிரஸ் போட்டுடும்தான் எல்லாரும் வருவாங்க. நம்ப ஊர்ல எதாவது குழந்தைகள் சமந்தபட்ட திருவிழா அல்லது பொருட்காட்சி போட்டாலும், அங்க கண்டிப்பா மிக்கி மவுஸ் இருக்கும். கடையில மிக்கி மவுஸ் சம்மந்தப்பட்ட ஏத்தாவது ஒரு பொருள் கண்டிப்பா இருக்கும். அந்த அளவு மிக்கி மவுஸ் நம்ம மனசுல நீங்கா இடம் பிடிச்சிருக்கு.

வால்ட் டிஸ்னி
வால்ட் டிஸ்னி

நம்ம மனசுல மட்டும் இல்ல. உலகம் முழுவதும் இருக்க பெரியவங்க முதல் குட்டி பசங்க வரை எல்லோரையும் வசியப்படுத்திய டவுசர் பாண்டிதான் நம்ம மிக்கி மவுஸ். அந்த மிக்கி மவுஸுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஒண்ணு, 1930ஆம் ஆண்டு கிடச்சது. சரியா 91 வருடங்கள் முன்ன, மிக்கி மவுஸ் அமெரிக்க செய்தித்தாள்ல தொடரா வெளிவந்துச்சு. அதோட முதல் பிரசுரம் ஜனவரி 13, 1930ல நடந்துச்சு. டிஸ்னியோட வரலாற்றுல மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்பட்டது இந்த நிகழ்வு. மிக்கி மவுஸ் ஆரம்பிக்கப்பட்ட இரண்டே வருடங்கள்ல இந்த அங்கீகாரம் கிடச்சதுனா, அப்போ இரண்டே வருடங்கள்ல மிக்க மவுஸோட வளர்ச்சிய நினைச்சுப்பாருங்க. அப்போலாம், என்னதா தியேட்டர்ல ரிலீஸ் ஆனாலும், நியூஸ்பேப்பர் ல பப்ளிஷ் ஆகுறது மிகப்பெரிய விஷயம். ஏன்னா இப்போ இருக்கமாறி தியேட்டர் எல்லோருக்குமானது அப்போ இல்ல.

ஸ்மார்ட் போன், லேப்டாப், இண்டர்நெட்னு எதுவுமே இல்ல. மிக்கி மவுஸ்-அ பாக்கனும்னா தியேட்டருக்குத்தான் வரனும்னு இருந்தப்ப, நம்ம ஊரு சிந்துபாத் கதை மாதிரி மிக்கி மவுஸை பட்டிதொட்டியெங்கும் கொண்டுசெல்ல, இந்த செய்தித்தாள் பிரசுரம் பயன்பட்டது. மிக்கி மவுஸோட முதல் கதையா வெளியான விமான விபத்து கதையை அடிப்படையா வெச்சுத்தான் இந்த முதல் செய்தித்தாள் பிரசுரமும் வெளியானது. King Features Syndicate நிறுவனத்தின் மூலமா ஜனவரி 13, 1930ல ஆரம்பிச்ச இந்த பயணம் ஜூலை 29,1995 வரைத் தொடர்ந்தது. 65 வருஷ மிக்கி மவுஸ் சாம்ராஜ்ஜியத்தை சாய்க்கிறது அவ்ளோ சுலபமான விஷயம் இல்ல. அதே நேரம், வாணளாவிய இந்த புகழை அடைவதற்கு முன்னாடி, மிக்கி மவுஸை உருவாக்கிய டிஸ்னிக்கு பல பாதாளங்களைத் தாண்ட வேண்டியிருந்தது. அந்த தாண்டல்கள் இல்லாம, இந்த பறத்தல்கள் இல்ல!

வால்ட் டிஸ்னி
வால்ட் டிஸ்னி

வால்ட் டிஸ்னியின் தந்தை ரொம்ப கோவக்காரர். டிஸ்னியை அவரோட அப்பா 10 வயசுலயே செய்தித்தாள் போடும் வேலைக்கு அனுப்பிருக்காரு. சின்ன வயசுல இருந்தே டிஸ்னிக்கு படம் வரைவதுல ரொம்ப ஆர்வம் இருந்துச்சு. அத முறையா கத்துக்க, அம்மா அனுமதியுடன் ஒரு பயிற்சி பள்ளில சேர்ந்தாரு. முறையாக கார்ட்டூன் வரைய கத்துக்கிட்ட டிஸ்னி செய்தித்தாள்ல கார்ட்டூன் வரையும் வேலைக்கு சேர்றதுக்காக ரொம்ப முயற்சி பண்ணினாரு. ஆனா யாரும் அவரை வேலைக்கு எடுத்துக்க தயாரா இல்ல. இவரோட ட்ராயிங் ஸ்டைல் நல்லா இல்லனு காரணம் சொன்னாங்க. அதன்பிறகு வாழ்க்கையை நடத்துவதற்காக அவர் சிறிது காலம் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பாத்திருக்கார். கொஞ்சம் காலம் கழிச்சி ஒரு ஆர்ட் ஸ்டுடியோ வர்ணனனையாளரா தன்னோட பயணத்தைத் தொடங்குறாரு. ஆனா அங்கேயும் இவருக்கு தகுந்த வாய்ப்பும் மரியாதையும் கிடைக்காததுனால அங்க இருந்து வெளில வந்து தனது நண்பர் ராய் உடன் சேர்ந்து 'Laugh-o-gram'னு ஒரு சிறிய நிறுவனத்தை தொடங்கினார். ஒரு சின்ன பயன்படுத்தப்பட்ட கேமராவ கம்மி விலைக்கு வாங்கி, ரெண்டு பேரும் சேர்ந்து 1 மினி அனிமேஷன் வீடியோ செஞ்சி உள்ளூர் திரை அரங்கங்களுக்கு கொடுத்திட்டு இருந்திருக்காங்க.

பல போராட்டங்களுக்கும், தோல்விகளுக்கும் பிறகு மிக்கி மவுஸ் உருவாக அடித்தளமாக இருந்த ''ஆஸ்வோல்ட்’ - தி லக்கி ரேப்பிட்'ன்ற ஒரு கார்ட்டூன் படத்தை எடுத்திருக்காங்க. அந்த படம் நிறைய வெற்றிகளையும் புகழையும் கொடுத்துச்சு. ஆனா, கூடவே மிகப்பெரிய துரோகத்தையும் அந்த படைப்பால அனுபவிச்சாரு. வரலாற்றுல இன்னைக்குவரைக்கும் அழிக்கமுடியாத துரோகமா அது நிலைபெற்றிருக்கு. 1928 ஆம் ஆண்டு ''ஆஸ்வோல்ட்’ - தி லக்கி ரேப்பிட்' ஓட முழு உரிமையும் யுனிவர்சல் பிக்ச்சர்ஸ்கிட்ட போயிடுச்சு. டிஸ்னிக்கும் அந்த கார்டூனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லனு சொல்லிட்டாங்க. ரொம்பவே மனம் நொந்துபோன, டிஸ்னியால வேற எந்த வேலைகள்லயும் ஈடுபட முடியல. அப்போ அவர் இன்னொரு கார்ட்டூன் கேரக்ட்டரை உருவாக்க முடிவு பன்றாரு. உலகத்தில இருக்க எல்லா குழந்தைகளுக்கும் பிடிச்ச மாறி இருக்கணும் அந்த கேரக்டர் இருக்கனும்னு உறுதி எடுத்துக்குறாரு. அவர் எவ்ளோ படம் வரைஞ்சு பார்த்தும், எதுவும் அவருக்கு திருப்தி அளிக்கல.

டிஸ்னிலேண்டு
டிஸ்னிலேண்டு

அந்த கேரக்டர் பத்தியே யோசிச்சிட்டு வீட்ல உட்காந்திருந்த ஒரு நாள், எலி ஒண்ணு அங்கேயும் இங்கயுமா ஓட்டிட்டு அட்டகாசம் பன்னிட்டு இருந்திருக்கு. கொஞ்ச நேரம் அவர் செஞ்சிட்டு இருந்த வேலையெல்லாம் விட்டுட்டு, அந்த எலி பாத்துட்டு உக்காந்துட்டாரு. அதோட அட்டகாசங்கள் அவ்வளவு சுவாரஸ்யமா இருந்துச்சு அவருக்கு. அந்த எலிக்கு சாப்பாடு கொடுத்து நண்பனாகவும் மாத்திட்டாரு. தினசரி அது செய்யுற அட்டகாசங்களையே கார்ட்டூனா வரைந்திருக்கார். அந்த எலிக்கு மனித குணாதிசயத்த கொடுத்து, அதற்கு ஒரு உருவமும் கொடுத்து பார்த்தப்போ உருவானதுதான் நம் மிக்கி மவுஸ். அனிமேஷன்னாலே அது குறும்படம்னு இருந்த காலம் அது. அதை மாற்றி 1937-ஆம் ஆண்டு "ஸ்நொவ் வைட் அண்ட் தி 7 ட்வர்ப்"ன்ற முழு நீல அனிமேஷன் படத்தை எடுத்து முதல் சாதனைப் படைத்தவர் நம்ம டிஸ்னி. 1939 ஆம் ஆண்டின் சொசைட்டி டாக் ஷோ, 1940-ன் பாண்டஸியா என தொடர்ந்து வெற்றிகரமாக மிக்கி மவுஸ்-ஐ மையமாக வைத்து பல படங்களை எடுத்தார் டிஸ்னி. அதைத் தொடர்ந்து ’தி மிக்கி மவுஸ் கிளப்’ ன்ற தொடரை, 1955ல இருந்து 1959 வரைக்கும், கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஒளிபரப்பி, அனைத்து குழந்தைகளையும் தன் வசப்படுத்தி, தன்னோட கனவை நினைவாக்கினார் டிஸ்னி.

தன்னோட கார்டூன்களைக் குழந்தைகள் நிஜ உலகத்திலும் பாக்கணும்னு சொல்லி அவர் உருவாக்க ஆரம்பிச்சதுதான் ’டிஸ்னி லேண்ட்’. ’மிக்கி மவுஸ்’ன்ற ஒரு கேரக்டரை உருவாக்கியதன் மூலமா காலம் கடந்தும் நம்மளோட வாழ்ந்திட்டு இருக்காரு வால்ட் டிஸ்னி.