Published:Updated:

`தவளை புத்தி' - 'RRR' படக்குழுவை பாராட்டிய ஆந்திர முதல்வரை விமர்சித்த பாடகர்!

அத்னான் சாமி, ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பதிவிட்ட ட்வீட்டிற்கு பிரபல பின்னணி பாடகர் அத்னான் சாமி தவளை புத்தி என விமர்சித்திருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

`தவளை புத்தி' - 'RRR' படக்குழுவை பாராட்டிய ஆந்திர முதல்வரை விமர்சித்த பாடகர்!

ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பதிவிட்ட ட்வீட்டிற்கு பிரபல பின்னணி பாடகர் அத்னான் சாமி தவளை புத்தி என விமர்சித்திருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அத்னான் சாமி, ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி

95-வது ஆஸ்கர் விருது விழா நேற்று  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விருது விழாவில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே, இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் கீரவாணி இசையில் உருவான ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல்களுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதினை வென்றது. இதற்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர்.

அந்தவகையில் ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியும் , ‘RRR’ படக்குழுவை பாராட்டி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்ட ட்வீட்டிற்கு  பிரபல பின்னணி பாடகர் அத்னான் சாமி  “தவளை புத்தி” என்று ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சித்திருப்பது தற்போது சர்ச்சையைக்  கிளப்பியுள்ளது. 

ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ‘RRR’ படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், “ தெலுங்கு கொடி உயர பறக்கிறது. நமது நாட்டுப்புற பாரம்பரியத்தை கொண்டாடிய தெலுங்கு பாடலால் நான் பெருமை அடைகிறேன். சர்வதேச அளவில் அதற்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது என்னையும், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தெலுங்கு மக்களையும், அனைத்து இந்தியர்களையும் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுத்தியதற்கு நன்றி” என்று  பாராட்டி   படக்குழுவினரை  டேக் செய்திருந்தார்.

இந்நிலையில், திரைப்படத்தையும் ‘நாட்டு நாட்டு’ பாடலையும் இந்தியர்கள் அனைவரும் கொண்டாடி வரும் நிலையில், தெலுங்கு கொடி உயர பறக்கிறது என பதிவிட்டிருப்பது அவரின் அரசியல் நிலைபாட்டையே குறிக்கிறது. இது தவறான விஷயம். குளத்தில் இருக்கும் தவளை புத்தி தான் ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கு என்று பிரபல பின்னணி  பாடகர் அத்னான்  சாமி விமர்சித்திருக்கிறார். இது தற்போது சர்ச்சையைக்  கிளப்பியிருக்கிறது.

அத்னான்  சாமி
அத்னான் சாமி

இது குறித்துப் பேசிய ஆந்திர முதலமைச்சரின் செய்தித்தொடர்பாளர், “முதலில் நீங்கள் ஒரு முதலமைச்சர் பற்றி பேசும்போது நாகரீகமாக பேச வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ‘RRR’ திரைப்படம்  தெலுங்கு தயாரிப்பாளர் தாயாரித்து தெலுங்கு இயக்குநர் இயக்கி, தெலுங்கு ஹீரோக்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டோலிவுட் படம் அதனால் எங்கள் தாய் மொழியின் பெருமையை நாங்கள் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை" என்று பதிலளித்திருக்கிறார்.