Published:Updated:

"சிரஞ்சீவியின் துப்பாக்கியை எடுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றேன்!"- பதறச் செய்த பவன் கல்யாண்

பவன் கல்யாண், சிரஞ்சீவி

மன அழுத்தத்தினால் தன் சகோதரரான சிரஞ்சீவியின் துப்பாக்கியைப் பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகக் கூறி அதிர்ச்சியடையச் செய்துள்ளார் நடிகர் பவன் கல்யாண்.

Published:Updated:

"சிரஞ்சீவியின் துப்பாக்கியை எடுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றேன்!"- பதறச் செய்த பவன் கல்யாண்

மன அழுத்தத்தினால் தன் சகோதரரான சிரஞ்சீவியின் துப்பாக்கியைப் பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகக் கூறி அதிர்ச்சியடையச் செய்துள்ளார் நடிகர் பவன் கல்யாண்.

பவன் கல்யாண், சிரஞ்சீவி
தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் நிகழ்ச்சி `Unstoppable 2 with NBK'. இதனை நந்தமூரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்குகிறார்.

இதன் ஃபினாலே (சீசனின் இறுதி எபிசோடு) வரும் பிப்ரவரி 10ம் தேதி 'Aha' ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பாகிறது. தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான சுவாரஸ்யமான விஷங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அவர், தன் சகோதரரான சிரஞ்சீவியின் துப்பாக்கியைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, சிரஞ்சீவி தனக்குச் சொன்ன அறிவுரைகள் குறித்து நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

'Unstoppable 2 with NBK | பவன் கல்யாண்,  நந்தமூரி பாலகிருஷ்ணா
'Unstoppable 2 with NBK | பவன் கல்யாண், நந்தமூரி பாலகிருஷ்ணா

இதுபற்றிக் கூறிய பவன் கல்யாண், "எனக்கு ஆஸ்துமா இருப்பதனால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கும். இதனால் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். இதன் காரணமாகக் கூட்டத்துடன் இருக்காமல் எப்போதும் தனிமையாகத்தான் இருப்பேன். எனது 17 வயதின்போது தேர்வினால் மன அழுத்தமும் மனச்சோர்வும் அதிகரித்தன. அந்தச் சமயத்தில் எனது மூத்த சகோதரரான சிரஞ்சீவி வீட்டில் இல்லாதபோது உரிமம் பெற்ற அவரின் துப்பாக்கியை எடுத்து எனது உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணினேன். சரியான நேரத்தில் வந்த என் சகோதரர் நாகபாபுவும் அவரது மனைவியும் என்னைக் காப்பாற்றிவிட்டனர்.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

அதன்பிறகு என் அண்ணன் (சிரஞ்சீவி) என்னிடம், 'எனக்காக நீ வாழ்ந்தால் போதும், வேறேதும் நீ செய்ய வேண்டாம்' என்றார். அப்போதிருந்து, நான் புத்தகங்கள் படிப்பது, கர்னாடக இசை, தற்காப்புக் கலைகள் மற்றும் பிற பயிற்சிகள் செய்வது என என்னை நானே ஆறுதல் செய்துகொண்டேன்" என்று கூறினார்.

மேலும், "உங்களை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். நீங்கள் உங்களோடு மட்டும் போட்டியிடுங்கள். அறிவும் வெற்றியும் கடின உழைப்பால்தான் வரும். இன்று நாம் செய்வது நாளை நம்மைச் சிறப்பாக்கும். உங்களில் நீங்கள் சிறந்தவராக இருங்கள் போதும்" என்று கூறினார்.